|
படப்பிடிப்பில் புது ஹீரோ கூடவே வரும் |
படப்பிடிப்பில் புது ஹீரோ கூடவே வரும் மனைவி கலைஞர் கட்டளையிட்டால் பாராளுமன்ற தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று கூறியிருக்கிறார் பா.விஜய். (நிஜமான அக்கறையிருந்தால் கட்டளைக்காக காத்திருப்பானேன்?) தற்போது ஞாபகங்கள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. கலைஞரின் கை வண்ணத்தில் உருவான தாய் காவியம் படத்தில் நாயகனாக நடிக்க முடிவெடுத்து படப்பிடிப்புக்கும் போனார்கள். என்ன பிரச்சனையோ? படம் நகரவில்லை. அப்படியே அந்த திட்டத்தை கைவிட்டு விட்டு ஞாபகங்கள் படத்தில் நடிக்க வந்துவிட்டார் பா.விஜய். இப்படத்தில் ஸ்ரீதேவிகா பா.விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சினிமா பின்னணியில்லாத மனைவி இதை எப்படி எடுத்துக் கொள்வார்? சினிமா என்றால் கட்டிப்பிடித்து ஆட வேண்டியிருக்குமே? போன்ற கேள்விகளுக்கு, கவிஞர் சொன்ன ஒரே பதில், 'என் மனைவி என்னை புரிந்தவர்!' இந்த நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், வேறு சந்தேகங்களுக்கு இடம் தராத வகையில் படப்பிடிப்புக்கு மனைவியையும் அழைத்து வந்துவிடுகிறாராம். பிற நடிகர்களின் மனைவிகளும் கவனிக்க வேண்டிய செய்தி! |
எந்திரனில் குண்டு ரஜினி நினைத்தால் உசிலைமணி போலவும் நினைத்தால் ஓமக்குச்சி போலவும் மாறும் மேஜிக் உடம்புக்கு சொந்தக்காரர் கமல். ரஜினி ரசிகர்களைகூட பல நேரங்களில் மேடைபோட்டு பாராட்ட வைத்துவிடும் கமலின் கெட்டப் மாற்றம்.
|
|
Read more...
|
|
சிரஞ்சீவிக்கு வாய்ஸ்... ரஜினியின் புத |
|
சிரஞ்சீவிக்கு வாய்ஸ்... ரஜினியின் புதிய முடிவு? 'வாய்ஸ்' கொடுக்கிற விஷயத்தில் கட்டுசெட்டாக இருந்து வருகிறார் ரஜினி. எலக்ஷன் டைம் என்பதால், ஆளாளுக்கு 'பிரச்சாரத்துக்கு வா' என்று அழைக்கிறார்களாம். ஆந்திரா பக்கம் போய் சிரஞ்சீவிக்காக 'வாய்ஸ்' கொடுக்கலாமா என்று யோசித்து வருவதாக கொளுத்திப் போடுகிறது கோடம்பாக்கம்! வாய்ஸ் மேட்டரில் எச்சரிக்கையாக இருந்தாலும், வாய்க்கு ருசியாக மெல்லுகிற விஷயத்தில் இப்போதெல்லாம் சிக்கனம் பிடிப்பதில்லையாம் சூப்பர் ஸ்டார். கடந்த மாதம் வேலூரில் எந்திரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, 'ஆம்பூர் பிரியாணி நல்லாயிருக்குமே, ஏற்பாடு பண்ணுங்க' என்றாராம். அவ்வளவுதான்... நாலாபுறமும் ஓடி வாய்க்கு ருசியாக வாங்கி வந்து குவித்துவிட்டார்களாம். கதைப்படியே கொஞ்சம் சதை போட வேண்டியிருந்ததால், இறைச்சி விஷயத்தில் குறைச்சி சாப்பிட வேண்டாம் என்று முன்பே கூறிவிட்டாராம் ஷங்கரும்! இன்னொரு செய்தி, எந்திரனில் தலைவர் மூழ்கிவிட்டதால் சுல்தானை கண்டு கொள்வதில்லையாம். படத்தை சீக்கிரம் முடிக்க சொல்லி வார்னர் பிரஷர் கொடுக்கிறது. கால்ஷீட் கொடுக்க வேண்டிய ரஜினியோ, எந்திரனில்! கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யா! மகள் தயாரிக்கும் படமா இருந்தாலும், தலைவர் மனசு வச்சாதான் போலிருக்கு! |
|
மேக்கப் இல்லாத த்ரிஷா... மிரண்டு போகும |
|
மேக்கப் இல்லாத த்ரிஷா... மிரண்டு போகும் ரசிகர்கள் மேக்கப் இல்லாத நடிகையையும் லாக்கப் இல்லாத போலீஸ் ஸ்டேஷனையும் பார்ப்பதே அபூர்வம். அப்படி அபூர்வத்தை தனது இரண்டு படங்களில் தொடர்ந்து செய்து வருகிறார் த்ரிஷா! விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷ§க்கு மேக்கப் இல்லை என்று கூறிவிட்டாராம் கௌதம் மேனன். டிசம்பர் பூக்களாகவே பார்த்து பழகிய த்ரிஷாவின் முகத்தை இப்போது பார்த்தால் அதிர்ச்சியாக கூட இருக்கும். மார்ச் மாதத்தின் மதிய வெயில் போலிருக்கிறாராம். இதில் பல காட்சிகளில் புடவையை உடுத்த சொல்லியிருப்பதால், த்ரிஷாவின் கவர்ச்சியே போச் என்கிறார் என்கிறார்கள். ஆனால் ஆடுகளம் படத்தின் பாணியே வேறு என்பதால், மேக்கப் இல்லையென்றாலும் கவர்ச்சியாக இருக்கிறாராம்! வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ§ம் த்ரிஷாவும் ஜோடியாக நடிக்கிறார்கள் இப்படத்தில். இதில் ஆங்கில இந்திய பெண்ணாக நடிக்கும் இவருக்கு தலைமுடியை கர்லிங் ஹேர் ஆக்கியிருக்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் மாடர்ன் டிரஸ் என்பதால், இந்த மேக்கப் வித்தியாசம் உறுத்தலாக தெரியாது என்கிறார்கள். ஒரு மாறுதலுக்கு என்றாலும், மேக்கப் இல்லாமல் ஏன் வதைபடுத்த வேண்டும் த்ரிஷாவையும், அவர்தம் ரசிகர்களையும்?! |
|
Shruti calls him a best friend |
|
என்னோட பெஸ்ட் பிரண்ட்:ஸ்ருதி கமல் சொல்லும் நபர்
ஒரு ஹாய், ஒரு ஹலோ சொல்லி கைக்குலுக்கினாலே போதும் கிசு கிசுவ பத்தவச்சுடுறாங்கப்பா. லேட்டஸ்ட் காசிப்பில் சிக்கியிருப்பவர், ஸ்ருதி கமல்ஹாசன்.
|
|
Read more...
|
|
|
’கந்தசாமி’ விழாவில் இத்தாலி அழகிகள் |
பாடல் வெளியீட்டு விழாவை ஒரே மாதிரி பார்த்து போரடித்து போனவர்களின் கண்களில், ஆச்சர்யம் அள்ளிக்கொட்டப்போகிறது கந்தசாமி விழா. கலைப்புலி தாணு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கிவரும் படம் ‘கந்தசாமி’. இப்படத்தில் விக்ரம், பலவித தோற்றங்களில் நடிக்கிறார். இதில் பெண் வேடமும் அடக்கம். விக்ரம் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் விக்ரம் சொந்தக்குரலில் பாடியுள்ள பாடலும் இடம்பெற்றுள்ளது.
|
|
Read more...
|
|
|
பிரபுதேவா-பூமிகா நடிக்கும் ‘களவாடிய |
|
 தங்கர் பச்சானின் இன்னொரு நல்ல படைப்பை காண தயாராகிக்கொள்ளுங்கள். படத்தின் பெயர் ‘களவாடியபொழுதுகள்’. நான்கு மாதங்களுக்கு முன் தொடங்குவதாக இருந்தது இப்படம். பிரபுதேவாதான் நாயகன் என்பதில் தீர்க்கமாக இருந்தார் தங்கர். இடையில் பிரபுதேவாவின் மகன் இறந்துபோனதால், தற்போது தன்னால் நடிக்கமுடியாது என ஒதுங்கிக்கொண்டார் பிரபுதேவா. ஆனால் சூழ்நிலை சரியாகட்டும் என காத்திருந்த தங்கர், இப்போது தான் நினைத்தபடியே பிரபுதேவாவை காமிராமுன் நிற்கவைத்துவிட்டார். ஐங்கரன் இண்டர் நேஷனல்தான் களவாடியபொழுதுகளை தயாரிக்கிறது.
|
|
Read more...
|
|
|
|