Issue 2011



September
2011

Issue



August
JULY
JUNE
MAY
APRIL
MARCH
FEBRUARY
JANUARY

 

 

செய்திகள்

Cinema

ராணா படத்தலைப்பு மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ”ராணா” படத்தலைப்பு மாறக்கூடும் என சில தினங்களாகவே பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் ரஜினி அல்லது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த தகவலும் இல்லை. ரஜினி கதை எழுதி, 3 வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ”ராணா”. தமிழ் மன்னன் ஒருவனின் கதை. முழுக்க முழுக்க சரித்திரப் படம். இதில் ரஜினியின் ஒரு வேடத்துக்குப் பெயர் தான் ராணா. இந்தப் பெயரை தேர்வு செய்தததும் ரஜினி தான்.

இந்தப் படத்தின் முதல் நாள் சூட்டிங்கின் போது தான் அவருக்கு உடல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குப் போய் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார். இப்போது ஓய்விலிருக்கும் ரஜினி படத்தின் காட்சியமைப்புகள் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் விவாதித்து வருகிறார்.

Read more...
Cinema

மறந்து போன தமிழ் வரலாற்றை சொல்லும் ஏழாம் அறிவு படம்

நாயகன் சூர்யா - நாயகி ஸ்ருதி இருவரின் நடிப்பில் ”ஏழாம் அறிவு” படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் முருகதாஸ். படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் படத்தயாரிப்பு குழுவினருடன் இயக்குனர் முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக சூர்யாவின் சாகச நடிப்பை பயன்படுத்த போகிறாராம் அவர். படப்பிடிப்பு முடிந்து, ஆர்ப்பாட்டமாக விருந்தும் நடந்துள்ளது. இதில் படத்தில் பணியாற்றியவர்கள் கலந்து கொண்டார்கள்.

விருந்தில் கலந்து கொண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், ”ஏழாம் அறிவு” படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். நாம் மறந்து போன தமிழ் வரலாற்றை உலகத்திற்கு எடுத்துக்காட்டும். படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதற்க்கான விருந்தில் அனைவரும் ஒன்று கூடியது மகிழ்ச்சியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

TBB Songs

TBB Songs

 


 

Cinema

 கோ படம் வெற்றி: வெறுப்பில் சிம்பு

எல்லா படத்தையும் விடாமல் பார்த்துவிடும் சிம்பு இன்னும் கோ படத்தை மட்டும் பார்க்கவே இல்லை. எல்லாம் வெறுப்பு தான் காரணம், ஆனால் நான் சொன்னது சரியா போச்சா என்று அவர் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு செய்தி இது தான்.இந்த படத்தின் கதையை கேட்டதும், அஜ்மல் கதாபாத்திரத்தை ஏன் கெட்டவனாக சித்தரிக்க வேண்டும், அவனையும் நல்லவனாக காட்டலாமே என்றாராம் சிம்பு. அவை தொடர்ந்து இழுபறியில் இருந்ததால் தான் அப்படத்திலிருந்து விலகினார் அவர்.இப்போது வரும் கோ பட விமர்சனங்களிலும் இதே கருத்தை சில பத்திரிகைகள் எழுதுகின்றன. இதைதான் சொல்லி சொல்லி மாய்கிறாராம் அவர். இப்பவும் அந்தப்படம் கையை விட்டு போச்சே என்று நான் கவலைப்படவில்லை என்கிறாராம் அவர்.என் படமும் வெற்றி தான் என்று வெளியில் காட்டிக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து பார்ட்டி கொடுத்திருக்கிறார் சிம்பு. ஆனால் நிஜம் அதுவல்ல என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

 

Cinema

ரசிகர் மன்றத்தை கலைத்ததன் காரணம்: அஜித்

தனது ரசிகர் மன்றத்தை அஜித் ஏன் கலைத்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கலைப்பு விடயத்தில் அஜித் அதிக அக்கறை காட்டியதே விஜய் ரசிகர் மன்றம் உடைக்கப்பட்ட அதிர்ச்சியால் தானாம். விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜெயசீலன் திடீரென்று திமுகவில் இணைந்ததை எதிர்பார்க்கவே இல்லை விஜய்யும் அவரது அப்பாவும். அதுமட்டுமல்ல இப்படி வெளியேறிய அவர் விஜய் குடும்பத்தின் மீது சொன்ன புகார்கள் அத்தனையும் பகீர் ரகம். தனது ரசிகர் மன்றத்தையும் வளர விட்டால் நாளைக்கு அரசியல் சிக்கல் வரும் என்று நினைத்த அஜித், இந்த சம்பவத்திற்கு பிறகு தான் வேண்டாம் என்று முடிவெடுத்தாராம். அவர் நினைத்தது தான் நடந்திருக்கிறது.

அஜித் ரசிகர் மன்றத்தின் சில மாவட்ட தலைவர்கள் பிரபல கட்சிகளில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் அஜித்துடன் இணக்கமாக இருப்பதால் தான் உங்களுக்கு மரியாதை. அவரே உங்களை விலக்கிய பிறகு நீங்கள் செல்லாக் காசுதான். உங்களை எதற்கு கட்சியில் சேர்த்து பெரிய பதவிகள் தர வேண்டும் என்கிறார்களாம் சம்பந்தப்பட்ட கட்சிகளில். தெரிந்தே தான் கலைத்திருக்கிறார் அஜித்.


Write Comment (411 comments)
கட்டுரைகள்

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?


கவிஞர்.வி.கந்தவனம்.

 இந்தச் சொற்பிரயோகம் தோன்றுவதற்கு இதிகாசக் கதை ஒன்று காரணம். முற்காலத்திலே திலீபன் என்றவொரு மாமன்னன் இருந்தான். அவனது குமாரன் பகீரதன். பகீரதச் சக்கரவர்த்தி தன் பாட்டனதும் அவனது முன்னோர்களதும் சரிதங்களை வசிட்டர் சொல்லக் கேட்டான். கபிலர் சாபத்தினால் அவர்கள்  எல்லோரும்  நரக வேதனைப்படுவதாக வசிட்டர் உணர்த்தி, ஆகாய கங்கையைக் கொண்டு பிராயச்சித்தம் செய்யுமாறு யோசனை கூறினார். 

 

Read more...
<< Start < Previous 1 2 3 4 Next > End >>