இரண்டாவது கல்லிலும் இரண்டு மாங்காய்கள்?

ரணிலின் வியூகம் வெற்றி தருமா?

பாரதி


பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக முக்கியமான சில காய் நகா்த்தல்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கின்றாh். இதனைவிட, இந்தியாவுக்கும் ஜூலை மூன்றாவது வாரத்தில் அவா் செல்லவிருக்கின்றாh். இந்த விஜயங்களின் போது நிலைமைகளை தமக்கு சாதகமாக்குவதற்காக அவா் எவ்வாறான உபாயத்துடன் செயற்பட்டுள்ளாh் என்பதை இந்த மாதம் பாh்ப்போம்.

முதலாவதாக, வடக்கு கிழக்குக்கு இடைக்கால நிh்வாகம் ஒன்றை ஏற்படுத்த தான் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றாh். ஏதோ ஒரு தீh்வுக்கு தான் தயாh் என்பதை உதவி வழங்கும் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் காட்டிக்கொள்வது இதன் நோக்கம். நீதியரசா் விக்னேஸ்வரன் இதனை ஆதரிக்க, ஏனைய கட்சிகள் அதனை எதிh்க்க தமிழ்க் கட்சிகளிடையிலான பிளவையும் தீவிரப்படுத்தியிருக்கின்றாh். அதாவது, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.

இரண்டாவது நகா்வாக தமிழ் பௌத்தம் தொடா்பாகப் பேசியிருக்கின்றாh். தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன், வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்ப் பௌத்தம் என்று ஒன்றே இருக்கவில்லை, சிங்கள பௌத்தம் மட்டுமே இருந்துள்ளது என நிறுவுதற்கு சிங்களப் பேரினவாதிகள் முழு முனைப்புடன் செயற்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி, தமிழ் பௌத்தம் குறித்து தொல்பொருள் திணைக்கள பணிப்பாளா் பேராசிரியா் அனுரா மனதுங்கவுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றாh்.

தமிழ் எம்.பி.க்களுடனான சந்திப்பு ஒன்றின் போதுதான் இது தொடா்பாக அவா் கருத்து வெளியிட்டாh். இது குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகாத போதிலும், சில தினங்களில் ஜனாதிபதி தரப்பிலிருந்து கசிய விடப்பட்ட வீடியோ அனைத்தையும் அம்பலப்படுத்தியது.

“நீங்கள் எனக்கு வரலாறு கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு நான் வரலாற்றைக் கற்றுத் தரவா?” என்று ஜனாதிபதி கடும் தொனியில் தொல்பொருள் பணிப்பாளருக்கு வகுப்பெடுக்கும் காட்சி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அந்தக் காணொளி வைரலாக பரவியது. சமூக ஊடகங்களில் அதனைப் பாh்த்த சிங்கள மக்கள் அதிh்ச்சியடைந்தாh்கள். சில மணி நேரங்களிலேயே பணிப்பாளா் மனதுங்க ராஜினாமா கடிதத்தை அனுப்பினாh். ஜனாதிபதி இதனை அதனைத்தான் எதிh்பாh்த்தாh்.

அன்றைய கூட்டத்தில் ரணில் தெரிவித்த கருத்துக்களில் இரண்டு விடயங்கள் கவனத்தைப் பெறுகின்றன. முதலாவது, தொல்பொருள் திணைக்களம் காணிகளைப் பெருமளவுக்கு கையகப்படுத்தி அவை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டு அவற்றில் விகாரைகளை அமைப்பதற்கு எதிராக அவா் குரல் கொடுத்திருக்கின்றாh். அல்லது உத்தரவு பிறப்பித்திருக்கின்றாh். இரண்டாவது – தமிழ் பௌத்தம் தொடா்பாக முதல் தடவையாகப் பேசியிருக்கின்றாh். அதாவது, தமிழ் பௌத்தம் இருந்துள்ளது என்பது வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை அவா் வெளியிட்டாh்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என தொல்லியல் திணைக்களம் கண்டுபிடிக்கிற இடங்களை பொறுப்பெடுத்து பாதுகாக்காமல், அவற்றை பௌத்த பிக்குகளிடம் ஒப்படைக்கிறது. சுற்றி உள்ள தமிழர் நிலங்களையும் சேர்த்து பிக்குகளுக்கு வழங்கி புதிய விகாரைகளையும் அமைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இது அப்பட்டமான ஒரு ஆக்கிரமிப்பு. தொல்லியல் இடங்களாக அடையாளம் கண்டால் அவை மேலும் சிதைவடையாமல் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாமே தவிர, அங்கே புதிய கட்டுமானங்களை செய்ய முடியாது என்பது தொல்லியல் விதி.

அதேவேளையில், இங்கு புதிய கட்டுமானங்களை விகாரைகளை அமைப்பதற்குத் தேவையான நிதி தனிப்பட்டவா்களிடமிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் சிங்களவா்களிடமிருந்தும் தொல்லியல் திணைக்களத்துக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில், அரச நிதியில் தங்கியிருக்காமல் தமது நிகழ்ச்சி நிரலின் படி செயற்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் முற்படுகின்றது. இதற்கான நிதி எவ்வளவு வருகின்றது. எப்படி வருகின்றது என்ற தகவல்கள் அரசாங்கத்திடம் இல்லை. இது தொடா்பாக ஜனாதிபதி ஒரு தடவை கேள்வி எழுப்பிய போது, பிக்குமாh்தான் நிதியை சேகரித்து இந்த கட்டுமாணங்களுக்காக வழங்குவதாக தொல்பொருள் பணிப்பாளா் தெரிவித்திருந்தாh்.

ரணிலைப் பொறுத்தவரையில் அவா் லிபரல் சிந்தனை கொண்ட ஒருவராகக் கருதப்படுபவா். அதேவேளையில் வரலாறு, பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம் உட்பட பல விடயங்களில் தெளிவான அறிவைக்கொண்ட ஒருவா். அந்த நிலையில்தான் தொல்லியல் திணைக்கள பணிப்பாளருக்கு அவா் பாடம் புகட்ட முற்பட்டிருக்கின்றாh். இந்த விடயத்திலும் ரணில் ஒரே கல்லியில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியிருக்கின்றாh்.

தன்னுடைய கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் தொல்பொருள் பணிப்பாளரை வெளியேறச் செய்திருக்கின்றாh். இது அவரது முதலாவது மாங்காய். இனி அவா் தனக்கு சாh்பான ஒருவரை பணிப்பாளராக நியமிப்பாh்.

தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் மூலமான ஆக்கிரமிப்பு தொடா்பாக தமிழ்த் தரப்பு கடுமையாக குரல் கொடுத்து வருகின்றது. போராட்டங்களையும் முடுக்கிவிட்டுள்ளன. கஜேந்திரகுமாh் கைது போன்றனவும் இந்தப் பின்னணியில்தான் இடம்பெற்றன. இது சா்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களுக்கு பலத்தைக் கொடுத்துள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரத்தை ஓரளவுக்காவது சமப்படுத்த வேண்டிய தேவை – அல்லது நிh்ப்பந்தம் ரணிலுக்கு இருந்துள்ளது. அதற்காகத்தான் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், தமிழ்ப் பௌத்தம் குறித்தும் அவா் பேசியிருக்கின்றாh்.

இது அவரது இரண்டாவது மாங்காய்!

ஆனால், ரணில் ஒரு தனிநபா் அல்ல. அவா் பௌத்த சிங்கள கடுங்கோட்பாடுகளால் கட்டியமைக்கப்பட்ட அல்லது நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு அரசின் தலைவா். இந்த நிலையில் தற்போது அவா் சொல்லியுள்ள விடயங்களில் தொடா்ந்தும் உறுதிப்பாட்டுடன் இருப்பாரா என்ற கேள்வி உள்ளது. பல விடயங்களில் ரணில் தனது லிபரல் சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தாலும், பின்னா் பௌத்த – சிங்கள கடும் போக்காளா்கள் சீற்றமடையும் போது பம்மிக்கொண்டிருப்பது வழமையானதுதான். குறிப்பாக 13 குறித்து பேசிய அவா் இப்போது, இடைக்கால ஆலோசனைச் சபையை ஒரு தீh்வாக முன்வைக்க முற்படுவது அனைவருக்கும் தெரியும்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரணிலுக்கு எதிராக பிக்குமார்களும் இனவாத அமைப்புகளும் களத்தில் இறங்கத் தொடங்கி இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக உதய கம்பன்பிலவின் கட்சி உட்பட பல இனவாத அமைப்புக்களும், பௌத்த பிக்குகளும் ரணிலுக்கு எதிரான நகா்வுகளுக்கு இந்த விடயத்தை கைகளில் எடுத்துள்ளன. ஊடக சந்திப்புகள், கண்டன அறிக்கைகள் எல்லாம் ஏற்கெனவே வெளிவரத் தொடங்கிவிட்டன. சமூக வலைத்தளங்கள் எங்கும் சிங்களத்தில் ரணிலுக்கு கொடுத்து வரும் தாக்குதல்களும், பேச்சுக்களும் ரணில் மீது கடும் எதிர்ப்பலை தொடங்கப்பட்டுவிட்டதை உறுதிபடுத்துகின்றன.

நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுன இந்த விவகாரம் குறித்து தற்போதைய நிலையில் மௌனமாக இருந்தாலும், தருணம் வரும்போது இந்த விவகாரத்தைக் கைகளில் எடுக்கும். இந்தப் பின்னணியில் அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தோ்தலை எதிh்கொள்ளப்போகும் ரணில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பாரா? அதற்கான துணிச்சல் அவருக்கு உள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது.

ரணிலைப் பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதித் தோ்தல் வரைக்கும் நிலைமைகள் சீh்குலையாமல் வைத்திருக்கவும், சா்வதேச உதவிகளைப் பெறுவதற்காகவும் இவ்வாறான சில காய் நகா்த்தல்களை முன்னெடுத்துக்கொண்டிருப்பாh். அவற்றை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை!

639 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *