முள்ளியவளை உறவுச்சோலை காப்பகத்தின் நிதி திரட்டலுக்காக! பாட்டினில் அன்பு செய்!

குடந்த மாதம் மாலை (17.02.24) இங்கிலாந்தின் அழகிய புற நகர்ப்பகுதியின் ஒரு கிராமமாகிய ஒக்ஷொட் ( ழுஒளாழவவ) இல் ளுசுளு தமிழ் வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவின் நிமித்தம், மறைந்த ‘இசைக்கலாமணி, சங்கீத பூஷணம், சங்கீத வித்துவான் திரு சங்கர நாராயணன் விருது வைபவம்’ இனிதே நடைபெற்றது. மண்டபம் நிறைந்த இசை ரசிகர்களும், சமூக ஆர்வலர்களுமாய், கூடவே உற்சாகமும், அன்பும், ருசியான உணவு வகைகளுமாய் ( டீயயெயெ டநயக சநளவயரசயவெ உபயத்தில்) நிகழ்வு களைகட்டியிருந்தது.

சுற்றியிருப்பவர்களின் திறமையை வளர்த்து, தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் இவ்வானொலிச் சேவை மென்மேலும் சிறக்க வேண்டும் என மனதார வாழ்த்தினேன். பலநாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்ட கலைஞர்களின் ஆதரவும் இவ்வானொலிச் சேவைக்குக் கூடுதல் பலம் சேர்த்தது என்றால் மிகையாகாது.

“பாட்டினில் அன்புசெய்” ளுசுளு தமிழ் வானொலியின் 5ஆம் ஆண்டு நிகழ்வில்“இசைக் கலாமணி” “கலாபூஷணம்”“சங்கீதவித்துவான்”திரு ஐ. சங்கரநாராயணன் ஞாபகர்த்த விருது – 2023 கலைஞர்களை கௌரவிப்பு விழாவும் இடம்பெற்றது. ஊடகத்துறையில் 50 ஆண்டுகள் வழங்கிய சேவையை பாராட்டி திருமதி ஆனந்தராணி பாலேந்திரா (தமிழ் அவைக்காற்று கலைக்கழகம்)அவர்களுக்கு“பொன்னொளி”விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வாழ்நாளில் ஆற்றிய சாதனைகளை வரவிருக்கும் காலமும் கொண்டாடும் வகையில் வாழ்ந்த, திருமதி சங்கீத வித்வான் ஞானாம்பிகை பத்மசிகாமணி, ஈழத்து மெல்லிசைப்பாடகர் திரு.மா.சத்தியமூர்த்தி, வெற்றிமணி பத்திரிகை யின் பிரதம ஆசிரியர்ஃஓவியர் திரு மு.க.சு.சிவகுமாரன்அவர்களையும் “சிரஞ்சீவி “விருதினை வழங்கி கௌர விக்கப்பட்டனர்.அமுத மொழி கொண்டு அகில விழிகளில் கதிர் வீசும் ஆளுமை ஈழத்து எழுத்தாளர் திருமதி. கலா சிறீரஞ்சன் அவர்களும் “ அமுதக்கதிர்”விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

எத்திக்கும் தித்திக்க மொழியாளும் திறம் கொண்ட பாங்கினையுடைய திருமதி. நிறைஞ்சனா சுரேஷ்குமார் (ளுசுளு தமிழ் வானொலி)அவர்களும் “மதுரமதி”விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.பல்கலை வித்தகம் கொண்டு நற்பணி புரியும்திருமதி கோ.தர்சினி அவர்களும் “கலாபதி”விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார். 40 ஆண்டுகள் தன் சேவையை பாராட்டி திரு.ரவிஷான் அவர்களை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அவர்களால் “ஓர் ஆண் கலைத்தாய்” என்ற வாழ்த்தினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ளுசுளு தமிழ் வானொலியில் வழங்கும் சேவைகளை பாராட்டி திரு ரமேஸ் கந்தசாமி, திரு தணிகாசலம் உதயபானு, திரு விஸ்வலிங்கம் சுரேஸ்காந்தன்,“கலாபூஷணம்” “சங்கீத வித்துவான்” திருமதி வத்சலாதேவி சங்கரநாராயணன், திருமதி கௌரி கமல், திருமதி தர்சினி சிவசுதன், “சங்கீத வித்துவான்” ஸ்ரீமதி சசிகலா கோதண்டபாணி, மற்றும் ளுசுளு தமிழ் வானொலிக்கு ஆக்கங்களை வழங்கும் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். இதன் நிர்வாகி, ரவி ஷங்கர் சங்கரநாராயணன், அவர் மனைவி அமுதா, விழாவை ஒழுங்கு செய்து, நெறிப்படுத்திய நிரா சுரேஸ் உட்பட அனைவரது திறமைகளும் நிகழ்வுகளின் கட்டமைப்பில் செவ்வனே மிளிர்ந்தது.

126 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *