எதிர்ப்பரசியலின் எதிர்காலம்

0
vm369

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்

தமிழரசியல் எப்போதும் எதிர்ப்பரசியலாகவே இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது, இனியும் இப்படியே இருக்கப் போகிறதா? அன்றும் இன்றும் அரங்கேறிய, அரங்கேறும் சம்பவங்கள் தமிழரசியல் என்றாலே எதிர்ப்பரசியல் தான் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன, அமைந்து கொண்டும் இருக்கின்றன.

மீன்களிற்கு நீந்தவும் தமிழர்களிற்கு எதிர்ப்பரசியல் செய்யவும் பழக்கத் தேவையில்லை; எதிர்ப்பரசியல் எங்களுக்கு கை வந்த கலை. தென்னிலங்கையின் இரு பெரும் கட்சிகளில் மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் எதிர்ப்பரசியலே செய்வோம் என்ற எங்கள் அரசியல்வாதிகளின் செயற்பாடு அவர்களையும் மாறி மாறி பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடந்தாண்டு தென்னிலங்கையில் மூன்றாவது சக்தியான ஜேவிபி ஆட்சியை பிடித்ததும், அதிலும் வடக்கில் அவர்களிற்கு கிடைத்த எதிர்பாராத ஆதரவும், காலங்காலமாக நாங்கள் செய்து வந்த எதிர்ப்பரசியல் வநஅpடயவந ஐ கேள்விக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தி விட்டது.

தேர்தல் காலங்களில் தமிழ் கட்சிகளினூடாக தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாட, அதிகாரப்பகிர்வு, நல்லிணக்கம் என்ற வாக்குறுதிகளில் விருந்து படைக்கும் தென்னிலங்கை பெருங்கட்சிகள், ஆட்சியில் ஏறியதும் சாக்கு போக்குகள் சொல்லி, காலத்தைக் கடத்தி வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதும், வரலாறு எங்களுக்கு சொல்லித் தந்த பாடங்கள். அதிகார பரவலாக்கல், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவித்தல், பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகள் பிரச்சினை, போர் குற்றங்களிற்கான பொறுப்பு கூறல் போன்ற தமிழர் தாயகப் பிரதேசங்களிற்கே தனித்துவமான பிரச்சினைகள் எதனாலும் பாதிக்கப்படாத, அக்கறையே படாத, எதிர்க் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாங்களும் எதிர்ப்பரசியல் செய்வது ஒப்புக்கு சப்பாணி போன்ற செயற்பாடு போன்றல்லவா தோன்றுகிறது? ஆட்சியை தீர்மானிக்கும் வலுவுள்ள இரண்டில் மூன்று பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராக வடக்கு கிழக்கில் இருந்து தெரிவான பத்தோ பன்னிரண்டோ பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பரசியல் செய்து எங்கள் மக்களிற்கு என்ன நன்மைகளை கொண்டு வந்து கொட்டப் போகிறோம்?

அதே நேரத்தில், எங்களது தனித்துவமான அடையாளங்கள், அடிப்படை பிரச்சினைகள் எல்லாவற்றையும் தூக்கி கிடாசி எறிந்து விட்டு, அடிக்கும் அலையில் அள்ளுபட்டு, நாம் இனி ஒரே நாடு என்று சிங்கள தேசியத்தோடு ஜோதியில் கலக்கும் அரசியலும் மிகவும் ஆபத்தானது; எங்களது எதிர்கால சந்ததியின் இருப்பையே நாசமாக்க வல்லது. தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தால் அமைந்திருக்கும் புதிய களத்தை நாங்கள் எவ்வாறு எங்களது இருப்பை தக்க வைக்கவும் எதிர்காலத்தை வளமாக்கவும் பயன்படுத்தப் போகிறோம்? ஐந்நாண்டுகளிற்கு ஒருமுறை அரங்கேறும் தேர்தல் திருவிழாவை மட்டும் நோக்கமாக வைத்து சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் எங்களது தமிழரசியல் செயற்பாடுகளை கைவிட்டு எப்படி, எப்போது வெளியே வரப் போகிறோம்?

தமிழர் பகுதிகளில், வுhந Pநைன Pipநச ழக ர்யஅநடin போல, ஆழமாகவும் வெற்றிகரமாகவும் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஜேவிபியின் பசயளள சழழவள செயற்பாடுகள் எங்களுக்கு ஒன்றும் புதியது அல்ல. அறுபதுகளில் தமிழரசு செய்ததும், எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இயக்கங்கள் செய்து காட்டியதும் இந்த பசயளள சழழவள யஉவiஎளைஅ தான். (புசயளளசழழவள யஉவiஎளைஅ என்பது அரசாங்கம் அல்லது பெரிய அமைப்புகள் அல்லாமல், சாதாரண மக்கள் தாங்களே ஒன்று சேர்ந்து சமூக மாற்றத்திற்காக செயற்படுவதை குறிக்கும்.) மாகாண சபைத் தேர்தலிற்கு காத்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், எங்கள் பிரதேசங்களில் நிலைகொள்ள முயலும் ஜேவிபியை முறியடிக்க, நாங்கள் செய்ய வேண்டியதும் இந்த பசயளள சழழவள யஉவiஎளைஅ தான்.

யுத்தத்தாலும் யுத்தம் முடிவடைந்ததும் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களாலும் தமிழரசியலால் பசயளள சழழவள செயற்பாடுகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை நிலவியது. ஜேவிபியின் ஆட்சியில் மீண்டும் பசயளள சழழவள செயற்பாடுகளிற்கு தமிழரசியல் மீண்டும் திரும்புவது அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறது. தமிழரசியலின் பசயளள சழழவள செயற்பாடுகளினூடக எங்கள் மக்களின் மனவோட்டத்தை மட்டுமன்றி அவர்களது தேவைகளை கண்டறிந்து, புலத்தில் எங்களிற்கு இருக்கும் அபரிதமான பொருளாதார வலுவால் எங்கள் மக்களின் தேவைகளை, அரசிடம் கையேந்தாது நாங்களே தீர்த்து வைக்கவும் முடியும். கண்டது நின்றதற்கெல்லாம் போர்க் கொடி தூக்காமல், பிரச்சினை அடிப்படையிலான அரசியல் கூட்டணிகள் (ளைளரந டியளநன உழயடவைழைளெ) நோக்கிய அரசியல் பயணத்திற்கு தமிழரசியல் பரிணாமிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகிறது. பிரச்சினை அடிப்படையிலான அரசியல் கூட்டணிகள், தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகளோடு மட்டும் மட்டுப்படுத்தபடாமல் ஆளும் கட்சியுடனும் பரந்து பட்டதான கூட்டணியாக வியாபித்திருப்பதே எங்கள் மக்களிற்கு நன்மை பயக்கும்.

யாழ்ப்பாணத்தில் வேட்டி கட்டி கொண்டு ஒஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பொங்கல் பானையில் அரிசி போடும் காணொளியும், கனடா தேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழ் பெண்மணி ஜுனைடா நாதன் சேலை கட்டி கொண்டு அடம்பனில் பொங்கல் கொண்டாடும் காணொளியும், தமிழர் பிரதேசங்களிற்கு மேற்குலகம் இன்னும் கொடுத்து வரும் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மேற்குலக இராஜதந்திரிகளுடனான தமிழரசியலின் ஊடாட்டம், அரசியல் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பானதாக மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் எங்கள் மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை முன்மொழிந்து அவற்றை அமுல்படுத்த அந்த நாடுகளின் அனுசரணையை பெறுவதற்கான நோக்கத்தை கொண்டவையாக மாறுவதும் காலத்தின் தேவையாகும். எதிர்ப்பரசியல் தமிழரசியலின் அடையாளம் அல்ல் அது ஒரு கட்டத்தில் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருவி மட்டுமே. இன்று அந்தக் கருவி மங்கியிருக்கிறது, அதைவிட சக்திவாய்ந்த புதிய கருவிகளை உருவாக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. வெறும் எதிர்ப்பால் வரலாறு மாறியதில்லை; மாற்றங்களை உருவாக்கியவை எப்போதும் களத்தில் நின்று, மக்களுடன் கலந்து, மக்களின் வாழ்க்கையை தொட்ட அரசியல் முயற்சிகளே.

தமிழரசியல் இனி தேர்தல் நேர முழக்கங்களால் அல்லாமல்; மக்களின் அன்றாட வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வல்ல அரசியலாக மாற வேண்டும். இந்த மாற்றம் நடந்தால் மட்டுமே, எங்கள் அரசியல் மீண்டும் மக்களுக்கானதாக மாறும்; இல்லையெனில், தமிழரசியல் வெறும் நினைவுச் சின்னமாக மாறிவிடும். தமிழரசியல் எதிர்ப்பரசியலில் இருந்து சமூக பொருளாதார அபிவிருத்திக்கான அரசியலிற்கு பயணிக்கத் தொடங்க வேண்டும். தமிழரசியல் இனி கேள்வி கேட்பதோடு மட்டும் நிற்காமல், தீர்வுகளை உருவாக்கும் அரசியலாக மாற வேண்டும்.
அந்த மாற்றத்தை நாம் இப்போது தொடங்கவில்லை என்றால், வரலாறு அதை நம்மீது திணித்து விடும்; அந்த வரலாற்று திணிப்பு நமக்கு சாதகமாக அமைந்து விடாது. ஆகவே, இந்த மாற்றம் ஒரு தேர்வு அல்ல இந்த மாற்றம் ஒரு அவசியம். தமிழரசியல், இனி எதிர்ப்பதற்கான அரசியலாக மட்டுமல்லாமல், எங்கள் மக்களின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கானதாக மாற வேண்டும். தமிழரசியல் மாறுமா?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *