பெட்ரோ – டாலருக்கான போர்:வெனிசுவேலா வெறும் ஆரம்பமே !

0
vm370


——————————————————

  • ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பெட்ரோ-டாலரை சவால் செய்தால் ஆட்சி மாற்றம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையும் நடக்கிறது. ஆனால் இன்னும் ஆழமான பிரச்சனை ஒன்று உள்ளது. உலகளவில் விற்கப்படும் அனைத்து எண்ணெயும் அமெரிக்க டாலரில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், அதற்கு பதிலாக, அமெரிக்கா இராணுவ பாதுகாப்பு வழங்கும். இந்த ஒரே ஒப்பந்தம் உலகம் முழுவதும் டாலருக்கு செயற்கை தேவையை உருவாக்கியது. எண்ணெய் வாங்க ஒவ்வொரு நாட்டுக்கும் டாலர் தேவை என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது) அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் நான்கு வாரங்களுக்கு முன் வெளிப்படையாகச் சொன்னார், அமெரிக்கர்களின் உழைப்பு, புத்திசாலித்தனம் தான் வெனிசுவேலாவின் எண்ணெய் தொழில்துறையை உருவாக்கியது. அதை அங்குள்ள ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்தது, அமெரிக்க செல்வத்தின் மிகப் பெரிய திருட்டு என்று கூறினார்.அவர் உண்மையை மறைக்கவே இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கின என்பதால், வெனிசுவேலா எண்ணெய் அமெரிக்காவுக்கே சொந்தம் என்று கூறுவது எத்தகைய நியாயம் ?

பெட்ரோ-டாலர் பொருளாதாரம்:

கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்காவை உலகின் முதன்மை பொருளாதார சக்தியாக வைத்திருப்பது பெட்ரோ-டாலர் மட்டுமே. அந்த பொருளாதார அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதாக வெனிசுவேலா மிரட்டியது.வெனிசுவேலாவிடம் 330 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இது உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் நாடாகும். சவுதி அரேபியாவைவிட கூட அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் என்பதால், இந்த நாட்டில் அதிக அளவில் ஆதிக்கத்தை அமெரிக்கா செலுத்த முயன்றது. உலக எண்ணெயின் சுமார் இருபது வீதம் இங்கே கிடைக்கிறது.

உண்மையில் நடந்தது இதுதான்,வெனிசுவேலா அந்த எண்ணெயை அமெரிக்க டாலரில் அல்ல, சீன யுவானில் விற்பனை செய்ய ஆரம்பித்தது. 2018-ல், வெனிசுவேலா டாலரிலிருந்து விடுபடப் போகிறோம் என அறிவித்தது. அவர்கள் யுவான், யூரோ, ரூபிள் — டாலரைத் தவிர எந்த நாணயத்தையும் எண்ணெய்க்கு ஏற்கத் தொடங்கினர். அத்துடன் BRICS அமைப்பில் சேர மனு கொடுத்தனர். SWIFTஅமைப்பை முழுமையாகத் தவிர்க்கும் வகையில் சீனாவுடன் நேரடி கட்டண வழிகளை உருவாக்கினர்.பல தசாப்தங்கள் டாலர் ஆதிக்கத்தை உடைக்கக் கூடிய அளவு எண்ணெய் அவர்களிடம் உள்ளது.

1974 ஹென்றி கிஸ்ஸிங்கர் ஒப்பந்தம்

1974இல், ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதி அரேபியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.
உலகளவில் விற்கப்படும் அனைத்து எண்ணெயும் அமெரிக்க டாலரில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், அதற்கு பதிலாக, அமெரிக்கா இராணுவ பாதுகாப்பு வழங்கும். இந்த ஒரே ஒப்பந்தம் உலகம் முழுவதும் டாலருக்கு செயற்கை தேவையை உருவாக்கியது. எண்ணெய் வாங்க ஒவ்வொரு நாட்டுக்கும் டாலர் தேவை என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.இதனால் தான் அமெரிக்கா வரம்பில்லாமல் பணம் அச்சிட முடிகிறது. ஆனால் மற்ற நாடுகள் அதற்காக கடினமாக உழைக்க வேண்டிய நிலை உருவாகிறது.இந்த டாலர் பொருளாதாரமே வாசிங்டன் இராணுவத்திற்கு நிதியளிக்கிறது. அத்துடன் நாட்டின் மற்றய நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. பெரும் கடன் செலவினங்களை ஈடு செய்ய நிதியளிக்கிறது. பெட்ரோ-டாலர் என்பது விமான தாங்கிக் கப்பல்களை உற்பத்தி செய்யவும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு உதவுகிறது.

சவால் செய்த தலைவர்களின் நிலை:
1990களின் பிற்பகுதியில் சதாம் {ஹசேன், ஈராக் எண்ணெய் டாலருக்கு பதிலாக யூரோவில் விற்கப்படும் என அறிவித்தார். இதன் விளைவாக 2003இல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்தியது, ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. எண்ணெய் மீண்டும் டாலருக்கு மாறியது, சதாமும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் 2009இல் லிபியாவின் கடாபி, எண்ணெய் வர்த்தகத்திற்கு தங்க ஆதாரத்துடன் “தங்க தினார்” என்ற ஆப்பிரிக்க நாணயத்தை முன்மொழிந்தார். ஹிலரி கிளிண்டனின் கசிந்த சில மின்னஞ்சல்கள், இதுவே லிபியா நாட்டின் மீதான தலையீட்டின் முக்கிய காரணம் என்று உறுதி செய்கின்றன. அந்த மின்னஞ்சலில் “இந்த தங்கம், லிபிய தங்க தினாரை அடிப்படையாகக் கொண்டு பான்-ஆபிரிக்க நாணயத்தை உருவாக்குவதற்காக இருந்தது” என கூறப்படுகிறது.இதன் விளைவாக 2011இல் லிபியாவை குண்டுவீசி நேட்டோ மூலம் அமெரிக்கா கைப்பற்றியது. இறுதியில் கடாபி தெருவினில் கோரமாக கொல்லப்பட்டார். லிபியாவில் திறந்த அடிமை சந்தைகள் உருவானது. தங்க தினார் அவருடன் இறந்தது. தற்போது அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமிக்கிறதற்கான உண்மையான காரணம், 1974-ல் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதி அரேபியாவுடன் செய்த ஒரு ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தம், உண்மையிலேயே அமெரிக்க டாலர் இன்று வரை உயிர் பிழைத்திருப்பதற்கான காரணம் ஆகும். ஆகையினால் போதை பொருள் அல்ல. தீவிரவாதம் அல்ல. ஜனநாயகம் போற்றும் ஆதிக்கமே காரணமாகும்.

பெட்ரோ-டாலரை சவால் செய்தால் ஆட்சி மாற்றம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையும் நடக்கிறது. ஆனால் இன்னும் ஆழமான பிரச்சனை ஒன்று உள்ளது. நீண்ட காலமாக பெட்ரோ-டாலர் செத்துக் கொண்டிருக்கிறது என்பதாகும்.உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா எண்ணெயை ரூபிள் மற்றும் யுவானில் விற்கப்படுகிறது. சவுதி அரேபியா யுவான் தீர்வுகள் பற்றி திறந்தவெளியில் பேசுகிறது. ஈரான் பல ஆண்டுகளாக டாலருக்கு வெளியே வர்த்தகம் செய்கிறது.அத்துடன் சீனா ளுறுஐகுவு-க்கு மாற்றாக ஊஐPளு அமைப்பை உருவாக்கியது. 185 நாடுகளில் 4,800 வங்கிகள் உருவாகி டீசுஐஊளு டாலரைத் தவிர்க்கும் கட்டண அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அடீசனைபந திட்டம் மத்திய வங்கிகளுக்கு உள்ளூர் நாணயங்களில் உடனடி தீர்வு வழங்குகிறது.அதேவேளை 330 பில்லியன் பீப்பாய் எண்ணெயுடன் வெனிசுவேலா டீசுஐஊளுஇல் சேர்ந்தால், இது எல்லாவற்றையும் மேலும் வேகப்படுத்தும். அதுதான் இந்த அமெரிக்கா படையெடுப்பின் உண்மையான காரணம்.

போதை பொருட்கள் அல்ல:

போதை பொருட்கள் அல்ல என்பதை அனைவரும் அறிவர். அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கோகைனில் வெனிசுவேலாவின் பங்கு ஒரு வீதத்துக்கும் குறைவு ஆகும். தீவிரவாதம் அல்ல என்பதும், மதூரோ தீவிர அமைப்பை நடத்துகிறார் என்பதற்கான சான்று இல்லை.ஜனவரி 3, 2026இல் வெனிசுவேலா மீதான தாக்குதலின் மூலம் மதூரோ கைதானார். இதே நாளில் ஜனவரி 3, 1990 பனாமா ஆக்கிரமிப்பு நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் அதிபர் நோரியாகா கைது செய்யப்பட்டார். 36 ஆண்டுகள் இடைவெளியில் கிட்டத்தட்ட அதே திகதியில் அதே நடைமுறை அதே “போதை பொருள் கடத்தல்” காரணம். அதே உண்மையான நோக்கமாக மூலவளங்கள் மற்றும் வர்த்தக நடைமுறைகள் மீது கட்டுப்பாடு தொடர்கிறது.அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வெனிசுவேலாவுக்கு திரும்பும். புதிய எதிர்க்கட்சி நிறுவப்பட்டு, எண்ணெய் மீண்டும் டாலரில் ஓடும்.வெனிசூயேலா இன்னொரு ஈராக்காக, இன்னொரு லிபியாவாக தொடர்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *