நோர்வேயில் நடைபெற்ற சர்வதேசத் தமிழர் ‘304 cards”சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி!

0
vm381


கல்கி பொன்னையா.விக்ரர் சந்தியாபிள்ளை அணியானது முதல் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியது.

சர்வதேச அளவில் தமிழர்களின் ஒற்றுமை, விளையாட்டு திறன் இவற்றை, வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் 304 ஊயசனள போட்டிகள், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், ஜெர்மனி அணி தொடர்ச்சியாக பல வெற்றிகளைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது.

நோர்வேயில் நடைபெற்ற சர்வதேச 304 ஊயசனள சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி

நோர்வே நாட்டில் 27.12.2025 அன்று நடைபெற்ற சர்வதேச தமிழர்களுக்கிடையிலான 304 ஊயசனள சுற்றுப் போட்டியில், ஜெர்மனியைச் சேர்ந்த 5 அணிகள் பங்குபற்றின.கல்கி பொன்னையா.விக்ரர் சந்தியாபிள்ளை அணியானது முதல் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியது. இதற்கு முன், ஜெர்மனியின் Nசுனு மாநிலத்தில் தமிழர்களுக்கிடையே 22.06.2025 அன்று நடைபெற்ற 304 ஊயசனள போட்டியில் திரு.கல்கி.பொன்னையா மற்றும் திரு.விக்ரர் சந்தியாபிள்ளை ஆகியோர் இணைந்து விளையாடி முதலிடத்தைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து, 13.10.2025 அன்று ஜெர்மனியில் நடைபெற்ற நாடளாவிய 304 ஊயசனள போட்டியிலும் பங்கேற்று ‘ஊhயஅpழைn’ பட்டத்துடன் முதல் இடத்தை கைப்பற்றினர். இந்த தொடர்ச்சியான வெற்றிகளின் தொடர்ச்சியாக, நோர்வே நாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் ஜெர்மனியில் இருந்து பங்கேற்று மீண்டும் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் திறம்பட விளையாடி வெற்றி பெற்ற திரு.கல்கி.பொன்னையா மற்றும் திரு.விக்ரர் சந்தியாபிள்ளை ஆகிய இளம் அணியினரையும், பங்கேற்ற ஏனைய அணியினரையும் வெற்றிமணி பத்திரிகை பாராட்டி மகிழ்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *