‘நெய்தல் நடை’சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
சிறப்பாக இடம் பெற்ற ரஞ்ஜனி சுப்ரமணியம் எழுதிய
கொழும்பு தமிழ்ச்சங்கம் (21.12.2025) சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ரஞ்ஜனி சுப்ரமணியம் எழுதிய ‘நெய்தல் நடை’சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ் வாழ்த்துரையை தர்ஷிகா சுப்ரமணியமும் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பினை மருத்துவர் செல்லையா சுப்ரமணியமும் ஆற்றினர்.தலைமையுரையை மேனாள் பேராசிரியர் ஆசி கந்தராஜாவும், வாழ்த்துரையை கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவி சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவும், வெளியீட்டுரையை தகைசார் வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் ஆற்றினர். முதல் பிரதியினை ளுpயn நுபெiநெநசiபெ பசழரி ழக உழஅpயnநைள பணிப்பாளர் திருமதி. சியாமளா சஞ்சீவன் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதியினை பேராசிரியர் ஆசி கந்தராஜா சத்யா தம்பதி பெற்றுக் கொண்டனர். நூல் ஆய்வுரைகளை கல்வியாளர் கவிஞர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன், மேனாள் அதிபர் பவானி சிவகுமாரன் ஆகியோரும் நன்றியுரையை செல்வ திருச்செல்வனும் ஆற்றினர். நூலாசிரியர் ரஞ்ஜனி சுப்ரமணியம் ஏற்புரையை வழங்கினார்.
நூலாசிரியை பற்றி….
செல்வரஞ்ஜனி சுப்ரமணியம் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். இவர் அரச சேவை நிமித்தமும் ஓய்வின் பின்னும் நீண்டகாலமாக இலங்கையின் தென்பகுதியை வதிவிடமாகக் கொண்டவர். இளம்பிராயம் முதல் வாசிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் அரச பணிநிறைவின் பின்தான் எழுத்துத்துறையில் கால்பதிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. 33 வருடங்கள் பதிவு பெற்ற மருத்துவராக பணியாற்றிய பின், 2018 ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்து கடந்த 6 வருடங்களாக இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டுவருகிறார்.
பணிநிறைவின் பின்னானதனது வாழ்வினைப் பயன்தரும் பொழுதுகளாக மலர வைத்தது இலக்கியம் என்பது அவரது திடமான நம்பிக்கை. ஆரம்பத்தில் கட்டுரைகள் நூல் நயவுரைகள் ஆகியவற்றை எழுதி வந்ததுடன், கடந்த மூன்று வருடங்களாக சிறுகதைகளையும் எழுதி வருகிறார். அவரது துறைசார்ந்த அனுபவங்களும் பொதுவாழ்வில் சந்தித்த மூவின மக்களுடனான வாழ்வியல் அனுபவங்ளும், அவர்களது அலைவுகளும் பல படைப்புகளின் மூலச்சரடாக உள்ளன. இனம் சார்ந்த பிரச்சனைகளின் வெவ்வேறு வடிவங்களையும், மாற்று சிந்தனைகளையும், அவதானங்களையும் தனது சேவைக்காலத்தில் அனுபவமாகப் பெற்றிருக்கிறார்.
சிறுகதை மஞ்சரியினர் மற்றும் தமிழக முலுN சிறுகதைகள் அமைப்பினர் நடாத்திய போட்டிகளில் இரு சிறுகதைகள் வெற்றிச் சிறுகதைகளாக இடம்பெற்றுள்ளன. இவரது எழுத்தாக்கங்கள் “பதிவுகள்” மின்னிதழிலும், இலங்கையில் இருந்து வெளியாகும் ஞானம், ஜீவநதி, எங்கட புத்தகங்கள் மற்றும் வெற்றிமணி – ஜேர்மனி, தாய்வீடுகனடா காலம் – கனடா, அம்ருதா – தமிழ்நாடு ஆகிய சஞ்சிகைகளிலும், இலங்கைத் தினசரிகளான வீரகேசரி,தினகரன், ஈழநாடு ஆகியவற்றிலும்வெளியாக உள்ளன.ஒலிப்பதிவுகளாக பல ஆக்கங்கள் இணையத்தள ஊடகங்களான பைந்தமிழ்ச்சாரல், தாய்வீடு,ளுசுளு வானொலி,ளுவுளு வானொலி ஆகியவற்றிலும் வெளியாகி உள்ளன.
இவரது “நெய்தல் நடை” சிறுகதைத் தொகுப்பில் முன்மொழிவு, அணிந்துரை ஆகியவற்றை எழுதிய பிரபல எழுத்தாளர்களான தாமரைச் செல்வி, பதிவுகள் இணைய இதழாசிரியர் வ.ந.கிரிதரன் ஆகியோரின் கருத்துகள் இவரது எழுத்துகள் பற்றி நல்லதோர் அறிமுகத்தைத் தருகின்றன.
வ.ந.கிரிதரன்
ரஞ்ஜனி சுப்ரமணியம், தான் ஒரு மருத்துவராக மானுடராக சக மானுடர்களின் வாழ்வை, அவர்தம் நிறை குறைகளுடன் உளவியலை, சூழலை அவதானிப்பவர். இவரது மானுட அவதானிப்பும், சமுதாயப் பிரக்ஞையும், அவரிடமிருந்து எதிர்காலத்தில் மேலும் பல நம்பிக்கையூட்டும் படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்பதை எதிர்வு கூறுமொரு தொகுப்பாக, ‘நெய்தல் நடை’ யினைக் கூறலாம்.
தாமரைச் செல்வி
இக்கதைகளின் பேசு பொருளாக மனிதர்களின் அலைவுற்ற வாழ்க்கை இருக்கிறது. வாழ்வில் விரியும் மனித நேயத்தின் தவிப்பை பல கதைகளில் காண முடிகிறது. மனித உறவுகளின் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் அழகிய தருணங்கள், ஆழமான உணர்வுப் பரிமாற்றங்களை நமது மனதுக்குள் நிகழ்த்துகின்றன. புதிய புதிய வார்த்தைகளைக் கோர்த்து எழுதப்பட்ட சரளமான அழகிய எழுத்து நடையில், எழுதும் ஒவ்வொரு கதையும் நம் முன்னே காட்சிகளாக விரிந்து கொள்கின்றன.
![]()
