கனகசபை கலாலயம் – 20ஆவது ஆண்டு விழா“ ஆடல் அரங்கம் “

0
vm385


வ.சிவராஜா

யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள கனகசபை கலாலயத்தின் 20ஆவது ஆண்டு நிறைவுவிழா ஆடல் அரங்கம் 10.01.2026, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலாலயத்தின் நிறுவனர், நடன ஆசிரியர், பல்துறைச் செயற்பாட்டாளர் மற்றும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவி நாட்டியநுண்கலைமாணி திருமதி சாந்தினி துரையரங்கன் அவர்களின் நெறிப்படுத்தலில், நிகழ்ச்சி நேர்த்தியான ஒழுங்கமைப்புடன் கலைச்சிறப்பாக அமைந்தது. நிகழ்ச்சிகளை செல்வன் நகுல் துரையரங்கன் மற்றும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு சிவகிருஷ்ணநாதன் சிவவினோபன் ஆகியோர் இனிமையாகத் தொகுத்து வழங்கினர். எசன் ஸ்ரீகதிரவேலாயுதசுவாமி ஆலய குரு சிவஸ்ரீ சாம்பசிவ ஸ்ரீதரக் குருக்களின் நடராச வழிபாடு மற்றும் ஆசியுரையுடன் ஆடல் அரங்கம் தொடங்கியது. வரவேற்புரையை திருமதி விஜிதா ராகவன் அவர்கள் நிகழ்த்தினார்.

நட்டுவாங்கம், மிருதங்கம், பாடலிசை, வயலின், சுரத்தட்டு எனப் பல்துறை இசைக் கலைஞர்களின் சிறப்பான இசையமைப்புடன், கலாலயத்தின் மாணவர்களும் பழைய மாணவர்களும் தங்கள் நடனத் திறமையை மேடையில் அழகுற வெளிப்படுத்தினர். புஸ்பாஞ்சலி, கீர்த்தனை, தில்லானா உள்ளிட்ட நடனங்கள் சபையினரின் பேரிரசனையைப் பெற்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *