இனி எமக்கு ஆர். பாரதி.

0
barathy.2

நெருபையும்
மென்மையாக
எழுதும் வார்த்தைகள்
அறிந்தவர்.

எதிரிகளை கருத்துக்களால்
மட்டுமே களமாடுபவர்.

சிலர் சிலருக்கு மட்டுமே
நல்லவர்கள்.
இவர் எல்லோருக்கும்
நல்லவர்.
மென்மையானவர்
வல்லவர்
என்பதாலோ!

நான் வெற்றிமணி பத்திரிகை அரசியல் கட்டுரை இந்த திகதி வேண்டும் என்று எழுதினால்
ழுமு, சரி என்று பதில் வரும்.

இவரது ழுமு, சரி என்றும் நேரான அர்த்தமே சொல்லும்.

மாசி மாத கட்டுரை சொன்ன திகதியில் இருந்து தைமாதம் 2 தினங்கள் முன்பாகவே அனுப்பி வைத்தீர்கள்.
யாழ்பாணத்தில் இருந்து வெற்றிமணி இம்மாதம் தயாரிப்பதால் எனக்கு சிரமம் வேண்டாம் என்ற பின் குறிப்போடு .

உங்கள் பயண முன் ஏற்பாட்டை
நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

15.01.2025 திகதி 13.30க்கு தம்பி பாரதியை புகையிரவீதி யாழ்ப்பாணத்தில் வீரகேசரி காரியாலயத்தில் சந்தித்தேன்.

மினிவானில் வந்து புகையிரத கடவை கடந்து, இறங்கி, வீரகேசரி காரியாலயம் தேடி நடந்தேன்.

பாரதியின் அழைப்பு வந்தது.
நான் இறங்கி வந்தபடி உள்ளேன் என்றேன்.

அவர் முகம் நான் காணும் வரை எனக்கு வரும்பாதை சொல்லும் ஒரு வழிகாட்டியானார்.

தெருவீதிக்கு மட்டுமல்ல ஊடகவீதிக்கும்தான்.

வெற்றி மணி 30 வது ஆண்டு நிறைவு
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை நகரில் நடத்தியபோது அவரே தலைமை தாங்கவேண்டும் என்றேன்.
மகிழ்வான தருணம் ஆக்கினார்.

21ம் திகதி தலையில் இரத்தகசிவு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

22ம் திகதி நான் கொழும்பு விமான நிலையம் செல்லவேண்டும்.
அதற்கு இடையில் அவரைச் சென்று பார்த்தேன்.
அவசரப்பிரிவில் இருந்து 7ம் இலக்க வாட்டில் 26 இலக்க கட்டிலுக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

கண்களை விழித்து பார்த்தார், என்னை யார் எனக் கண்டுகொண்டார். பேசவில்லை
கண்கள் பேசின, அவர் கரம் தொட்டு விடைபெற்றேன்.

இன்று ( 09.02.2025) அவர் விடைபெற்றுவிட்டார்.

வெற்றிமணி யின் மூன்றாம் பக்கம்
அரசியல் களம்.
இலங்கையில் இருந்து ஆர். பாரதி என இருக்கும்.

இனி எனக்கு ஆர். பாரதி. சொல்லடா தம்பி பாரதி.

உன்னைத்தேடும்
வெற்றிமணி மு. க. சிவகுமாரன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *