தூக்கம் நம்மை இளமையாக வைக்குமா? விஞ்ஞானம் சொல்வது என்ன?
A girl is having a sleep of a just
Dr.நிரோஷன்
தூக்கம் என்றால் என்ன? இரவில் இருட்டில் படுத்து கண்களை மூடும் ஓர் இயற்கையான செயலா? அல்லது, மனித உடலின் மிக ஆழமான மறுசீரமைப்பு மந்திரமா?
அன்றாடம் நாம் எதையும் நிறுத்தாலும், ஆனால் நேரத்தையும் நாம் வயதாகுவதையும் நிறுத்தவே முடியாது . தோலில் சிறு கோடுகள் விரிகின்றன, மூளை சற்று மெதுவாகக் கருதுகிறது, உடல் வேகமாக சோர்கிறது. இது இயற்கையின் வழி. ஆனால் அந்த வழியை மாற்றி அமைக்க முடியுமா? இளமையை ஒரு நாள் கூட தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், அந்தப் பயணத்தைக் கொஞ்சம் மென்மையாகக் கொண்டு செல்ல முடியுமா? இவ்விடத்தில் தூக்கம் எடுக்கும் பங்கு, விஞ்ஞானத்தைச் சுவாரசயமான கோணத்தில் பார்ப்பதற்கான கதவைத் திறக்கிறது.
வயதானபோது தூக்கம் குறையும் என்று நாம் அடிக்கடி கேட்கின்றோம், அது உண்மைதான். அதிகமான இரவில் கழிவறைக்குச் செல்லும் தேவை, சீரற்ற ஹார்மோன் செயல்பாடு, மன அழுத்தம் மற்றும் நீடித்த உடல்நலப் பிரச்சனைகள், இந்த எல்லாச சிறிய சிக்கல்களும் சேர்ந்து, நமக்குக் கிடைக்க வேண்டிய ஆழ்ந்த தூக்கத்தை மக்குக மெதுவாகத் தின்றுக்கொண்டே செல்கின்றன. ஆனால் இந்த நிலை மாற்றங்களை மையமாக வைத்து எல்லோரும் பேசும்போது, அந்தப் பிரச்சனையை எதிர்மறையாகவே காண்கிறோம். ஆனால், இப்போது கேள்வியை திருப்பிப் பார்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நாம் தூங்கும் விதம் நம்மை எப்படி வயதானவர்களாக மாற்றுகின்றது என்பது பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை.
நாம் உறங்கும் போது, உடல் சநடிழழவ ஆகிறது. ஆழ்ந்த நிலை தூக்கத்தின் போது, நமது தசைகள் பழுதுபார்க்கப்படுகின்றன, ஹார்மோன்கள் சமநிலைப்படுத்தப்படுகின்றன, மற்றும் மூளை தன்னுடைய “நாளாந்த கழிவு மேலாண்மையை” செய்துகொள்கிறது. அந்த நேரத்தில், நினைவுகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன, முக்கியமான தகவல்கள் நீடித்த நினைவாக சேமிக்கப்படுகின்றன. மூளையில் இருந்தே சில நரம்பியல் வேதிப்பொருட்கள் தங்கள் உச்ச நிலையை விட்டு பின்வாங்குகின்றன. இந்தச் செயல்கள் அனைத்தும் பசுமையான வாடையை விடாமல் வேலை செய்யும் பூங்காவைப் போல, மெதுவாகவும் சீராகவும் நிகழ்கின்றன.
வயதானதுடன் நம் மூளையில் மறுசீரமைப்புகள் அதிகமாகின்றன. இந்த நிலைமைக்கு நேரடியாகப் பாதிப்பது, நாம் தூங்கும்போது செயல்படும் க்ளிம்பாடிக் சிஸ்டம் எனப்படும் கழிவுச் சுத்திகரிப்பு அமைப்பு. மூளையில் ஆபத்து நிலையில் சேரும் beta-amyloid போன்ற நச்சு புரோட்டின்கள், நம்மை அழிக்கத் தொடங்கும் முன்னே நீக்கப்பட வேண்டும். இவை நீக்கப்படாத பட்சத்தில், நினைவிழப்பு, மெதுவான சிந்தனை, அல்லது அதன் பின் பரிணாமமாக அல்சைமர் நோய் வரை செல்லும் அபாயம் உள்ளது. இவை அனைத்தும் தூக்கத்தின் தரத்தால் நேரடியாகக் கட்டுப்படுகின்றன.
இந்த தூக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. வயதானவர்களில் இந்த அமைப்பு இயற்கையாகவே சோர்வடைகிறது. ஆனால் ஆழ்ந்த தூக்கத்தின் போது, உடல் பாதுகாப்பு செல்கள் மீண்டும் செயலில் திரும்புகின்றன. இதயமும் ஓய்வெடுக்கும்: இரவில் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைவதால், இருதயத்திற்கு நாள் முழுக்க வேலையாயிருந்த தசைகளை சற்று ஓய்வெடுக்கச் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றொரு முக்கிய பங்கு, இன்சுலின் எதிர்வினைச் செயல்பாட்டிலும் உறங்கும் நேரம் நேரடியாக ஈடுபடுகிறது. குறைந்த தூக்க நேரம், நீரிழிவு நோயுக்கான பாதிப்பை அதிகரிக்கக் காரணமாகிறது என்று பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இந்த சிக்கல்களை முறையாக தீர்க்கும் ஒன்று நம்மிடையேதான் இருக்கிறது: அது தான் தூக்கம்! அது கடையில் வாங்க முடியாது. அது ஒரு இயற்கையான செயல், ஆனால் அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது நாம்தான். உங்களைத் தூங்கச் செய்வது வெறும் மெத்தை அல்ல, அது உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் பின் தளமாக உள்ளது.
சில பிரீமியம் படுக்கை நிறுவனங்கள் இதனைப் புரிந்துகொண்டு “தூக்கம் என்பது வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி” என்று வலியுறுத்துகின்றன. ஆனால் உண்மையில், நாம் அனைவரும் அதை உணரத் தொடங்கும் நாளே பெரும் மாற்றம் ஏற்படும் நாள்.
அன்றாடம் நாம் ஒரு நாளைய தூக்கத்தை தப்பவிடும்போது, அது நம் உடலில் இருக்கும் வயதின் மீதான ஒவ்வொரு தாக்கத்தையும் அதிகரிக்கிறது. தூக்கம் என்பது ஒரு நாளின் முடிவல்ல, அது உங்கள் அடுத்த நாளின் தொடக்கமே.
இப்போது நீங்கள் உங்கள் தூக்கத்தை மதிக்கத் தொடங்குவதற்கான சரியான நேரம். ஒரு நாள் நீங்கள் உங்கள் முகத்தில் ஒரு சிறிய கோடு பார்த்து “நான் முதிர்கிறேன்” என்று கூறும்போது, அதுக்கு நேரம் காரணம் அல்ல, நீங்கள் உங்கள் தூக்கத்தை விட்டுவிட்டீர்கள் என்பதுதான் காரணம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
வயது வந்துவிடும். ஆனால் அதனை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது!
![]()
