Body Language
மனிதரின் உடல் மொழியும், நாயின் வால் மொழியும்!
- Dr. எம்.கே.முருகானந்தன்
- .முகத்தில் முகம் பார்க்கலாம், விழியில் உணர்வறியலாம், வால் அசைவில் மனதுணரலாம்.
பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். பாடசாலை. சிறு பிள்ளைகள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் ஏதோ கேள்வி கேட்கிறார். எழுந்து நின்ற மாணவன் அவரது முகத்தைப் பார்த்தபடி திக்கித் திணறி விடை அளிக்கிறான். ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. மாணவனுக்கு தன்னை அறியாது மூத்திரம் கழிந்து விட்டது. இத்தனைக்கும் ஆசிரியர் ஏசவில்லை. பிரம்பை எடுக்கவில்லை. கை உயர்த்தக் கூட இல்லை. ஆனால் அவனுக்கு சிறுநீர் தன்னையறியாது பிரிந்து விட்டது. அவ்வளவு பயப்பீதி.
பயப்படுத்தியது எது? அவரது முகம் கடுகடுப்பாகியிருக்கலாம், கண்களில் கோபம் தெறித்திருக்கலாம். அந்தச் சிறுவயதிலேயே அவனுக்கு ஆசியரின் உடல் மொழி புரிந்திருக்கிறது.
சிவாஜி கணேசனை சிம்மக் குரலோன் என்பார்கள். கருணாநிதின் நீண்ட அடுக்கு வசனங்களை அட்சரம் தவறாமல், அழகு தமிழில் பேசுவதில் சிவாஜிக்கு இணை கிடையாது. ஆனால் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது அதுவல்ல. அவரது முகபாவ வெளிபாட்டு முறைகள்தான். அது அவருக்கு கிட்டிய பெரும் கொடையாகும். இதுவும் உடல் மொழிதான்.
உடல் மொழியை ஆங்கிலத்தில் Body Language என்பார்கள். Non Verbal communication என்று சொல்வதும் உண்டு. கலைச் சொல்லில்; முiநௌளை என்பார்கள்.
எங்கள் மனதில் உறைந்திருக்கும் உணர்வுகளை எம்மையறியாது அவ்வாறே பெரும்பாலும் வெளிப்படுத்துகிறோம். கோபத்தை, தாபத்தை, பணிவை, அன்பை, ஆதரவை, வெறுப்பை இவற்றையெல்லாம் பெரும்பாலும் எமது முகத்தாலும் ஏனைய அங்க அசைவுகளின் மூலம்தானே வெளிப்படுத்துகிறோம். இவற்றில் பெரும்பாலானவை எம்மை அறியாமலே எம்மை மீறி பட்டவர்த்தனமாகி விடுகிறன. பல தருணங்களில் வாயைத் திறந்தால் எம் உணர்வை வெளிப்படுத்திவிடுவோம் என்ற பயத்தில் நாவடக்கிய போதும் முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என முன்னோர்கள் அற்புதமாக உளவியல் பேசினார்கள். அகத்தின் அழகை மாத்திரமல்ல அதன் அழுக்கையும் முகம் வெளிப்படுத்திவிடுகிறது.
“தாபம் பொறுக்க முடியாது இருக்கிறது. புணர்வோம் வருகிறாயா?” என்று யாராவது கேட்டிருப்பார்களா.
கண்அசைவு அதன் சிமிட்டல், அல்லது அது வெளிப்படுத்தும் வேட்கை உணர்வு ஒன்றே போதும் அவளை அல்லது அவனை படுக்கைக்கு வரச் செய்வதற்கு. வெறுமனே இசைவது மட்டுமல்லாமல் மற்றவரிடம் தாப உணர்வைக் கிளர்தெழச் செய்யும் வல்லமையும் அதில் உள்ளது.
ஒரு ஆய்வைப் பெண்களில் செய்தார்கள். அவர்களின் தாப உணர்வைக் கண்டறிவதற்காக. ஆனால் கேள்விகள் கேட்டு இந்த ஆய்வைச் செய்யவில்லை. அவர்கள் பேசுவதை வைத்துக் கண்டறியவில்லை.
கண்களை வைத்துச் செய்தார்கள். அதுவும் முழுமையான கண்களை வைத்து அல்ல. கண் மணியின் விட்டத்தை வைத்து. அது விரியும் அளவை வைத்து மட்டும் செய்யப்பட்டது. நோர்வேயில் உள்ள University of Troms ,y; Laeng, Falkenberg ஆகியோரால் செய்யப்பட்டது
ஆனால் அந்த ஆய்வு உடல்மொழி பற்றியது அல்ல. ஹோர்மோன் சுழற்சி மாற்றங்களுக்கு ஏற்ப பாலியல் விருப்பங்கள் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதைக் கண்டறிவதற்கானது. அது பற்றி பின்னர் பேசுவோம்.
மிருகங்களில் உடல்மொழி
ஆனால் இந்த உடல் மொழிகள் மனிதர்களுக்கு மாத்திரமானவையா அல்லது மிருகங்களிலும் உள்ளனவா.
மிருகங்களுக்கு மொழி இருக்கிறதோ இல்லையோ நாம் அறியோம். ஆனால் அவை சத்தம் எழுப்புகின்றன. அதனை அவற்றின் சகாக்கள் புரிந்து கொள்கின்றன. காகங்கள் கரைந்து தம் கூட்டத்தை அழைக்கிறது. குயில் தாபத்துடன் இசைக்கிறது, பூனையின் மியாவ் எங்களுக்கு புரிவதில்லை. ஆனால் அதன் சோடிகளுக்கு புரியும். நாய்கள் குலைக்கின்றன.
ஆனால் குலைக்காமல் கத்தாமல், இரையாமலும் இருந்தபோதும் அவை தங்கள் சகபாடிகளின் உடல் மொழிகளைப் புரிந்து எதிர்வினையாற்றுகினறன என்பதை ஒரு ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
மனிதர்களில் கண்களில் ஆய்வு செய்தார்கள். இப்பொழுது நாய்களின் வாலில் ஆய்வு. வால் என்றால் அதன் நீளம் அகலம், பற்றியது அல்ல. அவை அசையும் விதம் பற்றியது.
நய்கள் வால் அசைப்பதை நாம் எல்லோருமே கண்டிருக்கிறோம். எசமானைக் கண்டால் மகிழ்ச்சியில் வாலாட்டுவது தெரியும்.
எங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு மட்டுமே. ஆனால் ஒரு நாயானது மற்ற நாயின் வால் ஆட்டும்; விதத்தை வைத்து அதனது உணர்வுகளை மட்டுக்கட்டுகின்றன என்கிறார்கள் இத்தாலியைச் சார்ந்த ஆய்வாளர்கள்.
ஒரு நாயானது தனது வாலை இடது பக்கமாக அசைக்கும்போது அதைப் பார்த்திருக்கும் ஏனைய நாய்களின் மனங்கள் பதற்றமடைகின்றனவாகும். நாய்கள் பதற்றமடைவதை அவற்றின் இருதயத் துடிப்பு வேகமாவதைக் கொண்டு கண்டறிந்தார்கள். ஆனால் வலது பக்கமாக ஆட்டினால் ஏனைய நாய்கள் பதற்றமடையவில்லையாம்.
வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ தமது வாலை ஆட்டவேண்டும் என அவை திட்டமிட்டுச் செய்வதில்லை. அது இயல்பாக நடக்கிறது. தன்னிச்சையின்றி நடைபெறுவதாகும். இயற்கையின் கொடை எனலாம். அல்லது கூர்ப்பில் எட்டப்பட்டது எனவும் கொள்ளலாம்.
இதை முன்பு செய்த மற்றொரு ஆய்வு எடுத்துக் காட்டியிருந்தது. தனது எசமானைக் கண்டது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெறும்போது அதன் மூளையின் இடது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்ததாம். அந்த நேரத்தில் வால் வலது பக்கமாக ஆடினவாம். மாறாக மற்றொரு நாய் அக்கிரோசமாக இதைக் கடிக்க நெருங்கும்போது இதன் மூளையின் வலது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்து, வால் இடதுபுறமாக ஆடுமாம்.
ஆனால் நாய்கள் தங்கள் வால்களை ஒரு பக்கமாக மட்டும் ஆட்டுவதை நாம் கண்டதில்லை. இதற்குக் காரணம் அது வேகமாக ஆட்டுகிறது. அதனால் அது எமக்குப் புரிவதில்லை. வீடியோவில் எடுத்து சிலோ மோசனில் பார்க்கும்போது இது தெரிந்தது என்கிறார்கள்.
இப்பொழுது செய்த ஆய்வின் போது வாலை ஆட்டும் வேறு நாய்களின் வீடியோக்களை ஆய்வுக்கு உட்பட்ட நாய்களுக்குக் காட்டினார்கள். வீடியோ பட நாய்கள் எந்தப்பக்கமாக வாலை ஆட்டுகின்றன என்பதைப் பொறுத்து இந்த நாய்களின் இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்பட்டது.
சில நாய்கள் பெரிதளவு எதிர்வினை காட்டாதபோது மீண்டும் மீண்டும் வீPடீயொ போட்டுக் காட்டிய போது அவை எதிர்வினை காட்டின. எதிர்வினையை அவற்றின் நாடித் துடிப்பின் மூலமாகக் கண்டறிந்ததற்கு மேலாக வேறு அறிகுறிகள் மூலமும் கண்டறிய முடிந்தது.
வாலை இடது பக்கமாக அசைப்பதைப் பார்த்த நாய்ககளில் மனஅழுத்தமும் எச்சரிக்கை உணர்வும் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. நாய்கள் டென்சானாகும் என்ன செய்கின்றன என்பதை நீங்களும் நானும் அறிவோம். அவற்றைத்தான் அவர்களும் அவதானித்தார்கள். அவற்றின் காதுகள் நிமிர்ந்தெழுந்தன, மூச்சிரைத்தன, தாக்குதலுக்கு தயாராவது போல உடலைச் சுருக்கின. கண்கள் விரிந்தன.
கண்மணி விரிதலும் பாலியல் உணர்வும்
பெண்களின் தாப உணர்வு
இந்தக கண்கள் விரிவடையும் தன்மையானது ஏனைய விலங்குகளில் இருப்பது போவே மனிதர்களிடமும் காணப்படுகிறது. இது தாங்களாகச் செய்வது அல்ல. தன்னை அறியாமல் நடக்கும் செயலாகும். 1975 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்ஸமானது.
![]()
