அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப உதிர்த்த வார்த்தை!
“அவர்கள் வெறும் குப்பை”
ரூபன் சிவராஜா – நோர்வே.
‘அவர்கள் வெறும் குப்பை. இந்த நாட்டுக்கு அவர்கள் எதனையும் பங்களிக்கவில்லை. அவர்கள் எமது நாட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை.’
மேலுள்ள கருத்துகளை உதிர்த்தவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்.
‘அந்த மாநிலத்தின் (Minnasota) பல பில்லியன் டொலர் நிதியை அவர்கள் விழுங்கிவிட்டனர். ஒவ்வொரு வருடமும் பில்லியன் கணக்கான நிதி அவர்களுக்காகச் செலவிடப்படுகின்றது. அவர்கள் வெறும் குப்பை. எமது நாட்டுக்கு அவர்கள் எந்தவித பங்களிப்பினையும் செய்யவில்லை. அவர்கள் எமது நாட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இது அரசியல் ரீதியாகத் தவறான கருத்து எனப் பலரும் சொல்லக்கூடும். நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.’
அமெரிக்கா வாழ் சோமாலிய குடியேற்றச் சமூகங்களை நோக்கி இந்த மானிடவிரோத, இனவாதக் கருத்துகளை ட்ரம்ப் கூறினார். அதுவும் அரசாங்கக் கூட்டமொன்றில் இவ்வாறு கூறினார்.
இன்றைய உலகின் ஆகப்பெரிய இன மேலாதிக்கவாதி யார் என்றால் எவ்வித தயக்கமும் சந்தேசமுமின்றிச் சொல்லக்கூடிய பெயர் டொனால்ட் ட்ரம்ப். ஒரு மக்கள் இனத்தினைக் குப்பை என்று ஒரு அவையிலே, அதுவும் நொடியில் உலகமெங்கும் கொண்டு சேர்க்கக்கூடிய ஊடக ஒலிவாங்கிகள், கமெராக்களின் முன்னிலையில் இவரால் சொல்ல முடிகின்றது. உலக ஒழுங்கின் தீர்மான சக்தியாக விளங்கக்கூடிய ஒரு நாட்டின் தலைவரால் இத்தகைய கருத்துகளைக் கூறிவிட்டுத் தொடர்ந்தும் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்க முடிகின்றதென்றால் இந்த உலகும் அதன் ஆட்சி முறைமையினதும் சட்டங்களினதும் மனித உரிமைகளினதும் பெறுமதியை அளவிடமுடியும்.
அந்தக் கூட்டத்தில் ட்ரம்ப் மேலும் கூறியவை:
எமக்கு அவர்களின் உதவி அவசியமில்லை. எமது நாட்டினை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். எமது நாடு ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இருக்கிறது.
நம்முடைய நாட்டிற்குள் குப்பபைகளை ஏற்கும் போதெல்லாம் நாம் தவறான வழியில் செல்கிறோம். அவர்களுடைய நாடு மோசமானது, நாற்றம் வீசுகின்ற நாடு அது. வேறு நாடுகளைப் பற்றியும் நான் அவ்வாறு கூறமுடியும அவர்களுடைய நாடு மோசமானதாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றார்.
மட்டுமல்லாமல் மின்னசூடா மாநிலத்தைச் நேர்ந்த 43 வயதுடைய சோமாலியப் பின்னணியைக் கொண்ட கொங்கிரஸ் அவை உறுப்பினர் இல்ஹான் ஓமர் (ஐடாயn ழுஅயச) அவர்களையும் பெயர் குறிப்பிட்டு ‘ஒரு குப்பை’ என்றார். 1995இல் தனது பதின்மூன்று வயதில் சோமாலியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த இல்ஹான் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்தலிற்போட்டியிட்டு 2017இல் அமெரிக்க கொங்கிரஸ் அவை உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு பேரினவாதியும் வெள்ளை மேலாதிக்க மனநிலை கொண்ட ஒருவரென்பது வெளிப்படுவது இது முதற்தடவையல்ல. அவர் இதற்கு முன்னரும் பல தடவைகள் நிரூபணமான ஒன்றுதான். இத்தகையவர் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியில் இருக்கப் போகின்றார்.
சமகால உலகம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் யாவும் நவதாராளவாத கொள்கைகளினால் தீவிரமடைந்தவை. இந்நெருக்கடிகளின் முடிவு இரண்டு தெரிவுகளை விட்டுச்செல்லும். ஓன்றில் சர்வாதிகாரம் தீவிரமடைந்த மோசமான அரசுகளை உருவாக்கும் அல்லது மானிட விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக மீள்கட்டமைப்புக்கு வழிகோலும் என்று 2020இல் கொரோனப் பெருந்தொற்றின் தொடக்கத்தில் அறிஞரும் விமர்சகருமான ழேயஅ ஊhழஅளமல ஒரு கருத்தினை வலியுறுத்தியமை நினைவிற்கு வருகின்றது.
ஆளுமைக்கோளாறுடைய சமூக விரோத மனநிலையுடைய ஆட்சியாளர்கள் கைகளில் எமது தலைவிதியைத் தொடர்ந்து அனுமதித்தால் கொரோனா வைரசைவிட மிகப்பெரிய ஆபத்தினை மானிடம் எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
னுநஅழஉசயஉல in நுரசழிந ஆழஎநஅநவெ 2025 (னுiநுஆ 25எனும் அமைப்பின் இணை நிறுவனர் ளுசநஉமழ ர்ழசஎயவ 30.03.2020 அவருடன் மேற்கொண்ட உரையாடலில் இவற்றை சோம்ஸ்கி பகிர்ந்துகொண்டிருந்தார்.
டொனால்ட் டிரம்ப் இனை ஒரு சமூகவிரோத பஃப்பூன் (ளழஉiழியவாiஉ டிரககழழn) என அந்த நேர்காணலில் சோம்ஸ்கி விளித்திருந்தார். இந்த முக்கியமான காலகட்டத்தில் டிரம்ப் தலைமையில் உலகம் இருப்பது துர்ரதிஸ்ரவசமானது என்கிறார்.
‘கொரோனா வைரஸ் ஆபத்தானதுதான். வைரஸ் பரம்பலின் மருத்துவ நெருக்கடியும் அது ஏற்படுத்தும் விளைவுகளும் பாரதூரமானவை. ஆயினும் அவை தற்காலிகமானவை. ஆனபோதும், மனிதகுல வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த எந்தவொரு பேரழிவுகளிலும் பார்க்க மோசமான இருபெரும் ஆபத்துகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்துகொள்ளுதல் அவசியமானது எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
நோர்வே போன்ற ஐரோப்பிய நாடொன்றில் இத்தகைய இனவெறிக் கருத்தினை ஓர் அரசதலைவர் கூறிவிட்டுச் சாதாரணமாகக் கடந்து சென்றிருக்க முடியாது. அரசியல், சட்டம், சமூக, ஊடகத் தளங்களில் அது பெரிய விவகாரமாக ஆகியிருக்கும். எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்திருக்கும். பதவிவிலகற் கோரிக்கைகள் வரை சென்றிருக்கும். சமூக இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் கண்டனத்திற்கு அப்பாலான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும். அமெரிக்கா இன்னும் இன-நிறவாத அரசாகவும் வெள்ளை ஆதிக்க மனநிலை மேலோங்கிய நிலையிலுமே இருக்கின்றது என்பதையே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது.
![]()
