அறிவு: ஆற்றலின் நுட்பமான பயணம் 05

05.deepa

அறிவியலுக்கு எந்தக் கட்சித் தோலும் தேவையில்லை!

  • தீபா ஸ்ரீதரன் தாய்வான்

அடுத்து நவீன காலத்தில், எப்படிப் பல தத்துவஞானிகள் மனித முன்னேற்றத்தையும் உயர்ந்த பரிணாம வடிவங்களையும் இயற்கையில் இருந்து ஆற்றலைக் கையாளும் திறனின் மேம்பாட்டாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்பதைப் பற்றிச் சிறிது பார்க்கலாம். உலகப் புகழ்பெற்ற தத்துவஞானியான ஃப்ரிட்ரிக் நீச்சே (குசநைனசiஉh Nநைவணளஉhந) தனது “வில்டு பவர் ( றுடைட வழ pழறநச)” எனும் கருத்தின் மூலம், வாழ்க்கை எப்போதும் தன் சக்தி, செல்வாக்கு, திறன் ஆகியவற்றை விரிவாக்க முயலும் ஆற்றல்மிக்க ஓட்டமாக இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார். பின்னர்ப் பல தத்துவஞானிகள் இதை,உயிரினங்கள் தங்களின் சூழலிலிருந்து அதிக ஆற்றலை உறிஞ்சி மாற்றும் உள் மூச்சான விருப்பத்தின் ஓர் உவமையாகக் கருதினர்.

‘க்ரியேட்டிவ் எவல்யூஷன் (ஊசநயவiஎந நஎழடரவழைn)’ என்ற நூலில் ஹென்றி பெர்க்சன் (ர்நசெல டீநசபளழn), “ஏலான் வைட்டல் (éடயn எவையட)” எனும் ஒரு படைப்பாற்றல் உந்துதல் சக்தியைப் பற்றி விவரிக்கிறார். அந்தச் சக்தியே வாழ்க்கையை அதிகச் சிக்கலுக்கும் இயக்கத்திற்கும் தொடர்ந்து தள்ளுவதாக விளக்குகிறார். 20ஆம் நூற்றாண்டு தத்துவஞானி மற்றும் கணித மேதையான ஆல்ஃப்ரெட் நோர்த் வைட்ஹெட் (யுடகசநன ழேசவா றூவைநாநயன), ஒவ்வொரு உயிரும் உலகத்துடன் தனது தொடர்பை விரிவாக்கி தனது அனுபவத்தை உயர்த்த முயல்கிறது என்றும் அதன்மூலம் இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து விரியும் படைப்பாற்றல் கொண்ட செயல்முறையாக இருக்கிறது என்பது போன்ற கருத்தையும் முன் வைக்கிறார். அதேபோல் ஃப்ரென்ச் பாதிரியாரான தெயர்த் டி சர்டின் (வுநடihயசன னந ஊhயசனin), பரிணாமத்தை அதிகரித்த விழிப்புணர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கிச் செல்லும் இயக்கமாகக் குறிப்பிடுகிறார். இறுதியில் மனித மனங்கள் ஒன்றிணைந்து உயர்ந்த ஒழுங்கும் ஆற்றல்மிக்க நிலையும் அடையும் “ஓமேகா பாயிண்ட் (ழுஅநபய pழiவெ)” என அவர் பெயரிட்ட நிலையைக் குறிக்கிறார்.

சமீபத்திய சூழலியல் தத்துவத்தில் தோமஸ் பெர்ரி (வுhழஅயள டீநசசல) போன்ற சிந்தனையாளர்களும், ஜோசப் கேம்பெல் ( துழளநிh ஊயஅpடிநடட) போன்ற கலாச்சாரத் தத்துவஞானிகளும், மனிதர்களின் புராணங்கள், கலாச்சாரங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவை,நெருப்பு,மின்,டிஜிட்டல் உலகம் ஆகியவற்றின் வழியாக இயற்கையின் ஆற்றல்களைப் பயன்படுத்தி விரிவடையும் ஒரு பயணமாகவே இப்பபிரபஞ்சத்தைப் புரிந்துள்ளனர் என் நம்புகிறேன்.

இந்தத் தத்துவக் கருத்துகள் அறிவியல் உண்மைகளை நிரூபிக்காது; இருப்பினும் வாழ்க்கை, “இப்பிரபஞ்சத்திலிருந்து அதிக ஆற்றலைச் (சேகரித்த)அறுவடை செய்து படைப்பாற்றலுடன் மாற்றும் திசையில் உயர்ந்து செல்கிறது” என்ற என் கருத்துடன் அவை ஒத்தொலிக்கின்றன என்றே நான் புரிந்து கொள்கிறேன். அடிப்படையில், இவை அனைத்தும் மனித வாழ்க்கையின் தொடர்ச்சியான பரிணாமத்தைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சிகளின் பிரதிபலிப்பாகவே நான் பார்க்கிறேன். அறிவியல் ஆதாரமில்லாத இக்கருத்துகளும் கூட பரிணாமம் தொடர்ந்து அதிக ஆற்றல் திறன் கொண்ட வடிவங்களை நோக்கிச் செல்கிறது என்ற ஒற்றைப் புள்ளியையே வந்தடைகின்றன.

ஆனால் இவை அனைத்தும் தத்துவக் கருத்துகளேயன்றி நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சிந்தனையாளர்கள் “ஆற்றல்”, “சிக்கல்”, “உயர்வு” போன்ற கருத்துகளைப் பேசியிருக்கலாம் என்று தோன்றினாலும், அவர்கள் உண்மையிலேயே அதைத்தான் குறித்தார்கள் என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. மனிதனின் ஆர்வம் எல்லாக் காலத்திலும் இயற்கையை ஆழமாக நோக்க வைத்தது; அந்த ஆர்வத்தின் மூலம் சில சிந்தனையாளர்கள் பின்னர் அறிவியல் விளக்கியச் சில முறைமைகளை உளவியல் அல்லது உவமை வடிவில் உணர்ந்திருக்கலாம் என்று வேண்டுமானால் என்னால் சொல்ல முடியும். ஆனால் அந்தக் கருத்துகள் பொதுமக்களுக்குப் புரியும் மொழியாக மாறுவது அறிவியல் அவற்றைத் தெளிவாகவும் அளவிடத்த க்கதாகவும் நிரூபித்த பின்னரே முடியும். அதற்குப் பின் வேண்டுமானால், மக்கள் அந்தப் பழைய தத்துவ அல்லது ஆன்மீகக் கருத்துகளை இன்றைய அறிவியல் புரிதலின் ஒளியில் மறுபரிசீலனை செய்து சில ஒற்றுமைகளைக் காணலாம்.

துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இன்று இப்புரிதல் தலைகீழாகப் பார்க்கப்படுகிறது. அறிவியல் அறிவு அல்லது சிந்தனை என்பதற்கு ஒன்று காவி நிறத்தைப் பூசி (வலது சாரிகள்) கலாச்சார ஃ ஆன்மீகப் பெருமையை நிரூபிக்கும் கருவியாக அதைப் பேசுகிறார்கள், இல்லையெனில் கருப்புச் சாயத்தைப் பூசி (இடது சாரிகள்) நாத்திகத்தைப் பேசுவதை மட்டுமே அறிவியலறிவின் வெளிப்பாடாக ஃ இயக்கமாக ஆக்கப் பார்க்கிறார்கள். இந்த இரண்டு மீறல்களுமே உண்மையான புரிதலைத் தடுக்கும். அறிவியலுக்கு எந்தக் கட்சித் தோலும் தேவையில்லை அது தெளிவு, ஆதாரம், திறந்த விசாரணை ஆகியவற்றை மட்டுமே தேடுகிறது என்பதை இங்கே அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறேன்.

எந்தவொரு தத்துவமும், அது ஆன்மீகமாக இருந்தாலும் சரி, நாத்திகமானாலும் சரி, சுயமாக அறிவிக்கப்பட்ட கோட்பாடு மற்றும் சார்புகளிலிருந்து விடுபட்டு அறிவியலின் உதவியோடு அதை அணுகத்துணியும்போதுதான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். அப்போதுதான் அது கேள்விகள்,ஆவல்கள் மற்றும் மனித அர்த்தத்தின் உண்மையான தேடலுக்கானத் தளமாக மாறும் .
தொடரும்…

Loading