யேர்மனியின் CDU கட்சியின் புதிய தலைவராகவும்;, கான்சிலர் வேட்பாளராகவும் தெரிவானர்!
(Germany Nord Rhein Westfalen) மாநிலத்தின் முதலமைச்சர்
(Armin Laschet) ஆர்மின் லஸ்செற்
- வைரமுத்து சிவராசா -யேர்மனி
தற்போது யேர்மனியின் மிக உயர்ந்த அரசியல் பதவியில் இருப்பவரான அங்கலா மேக்கல் (Angela Merkel) அவர்கள் இந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் இளைப்பாறுவதால் கட்சியின் புதிய தலைவராக நோத் றைன் வெஸ்பாளின் (Nord Rhein Westfalen) முதலமைச்சராகத் தற்போது இருந்துவரும் ஆர்மின் லஸ்செற் (Armin Laschet) அவர்கள் தெரிவாகியுள்ளார். இவர்தான் 2021 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள கான்சிலர் பதவிக்குப் (Bundes Chancellor) போட்டியிடுவதற்குத் தெரிவாகியுள்ளார்.
யேர்மனியின் பலம்பொருந்திய அரசியல் கட்சியின் ஊனுரு (Christ dememokratische Partai) மத்திய குழுக்கூட்டம் முதன்முறையாக இணையவழியில் 16.1.2021 அன்று நடைபெற்றது. 1001 அங்கத்தவர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருக்க மூன்றுபேர் இதில் போட்டியிட்டனர். இறுதியில் 521 வாக்குகளைப் பெற்று ஆர்மின் லஸ்செற் அவர்கள் வெற்றிபெற்று கட்சியின் தலைவராகத் தெரிவானார். எதிர்வரும் 26.9.2021 நடைபெறவுள்ள கான்சிலர் பதவிக்கான வேட்பாளராக இவர் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் யேர்மனியிலுள்ள 16 மாநிலங்களில் அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட நோத் றைன் வெஸ்பாளின் மாநிலத்தின் முதலமைச்சராக 27.6.2017தொடக்கம் இருந்துவருகின்றார். முன்னர் இந்த மாநிலத்தின் குடும்பநல அமைச்சராகவும் (2012 -2017) இருந்ததுடன் இந்த மாநிலத்தின் கட்சித்தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது இந்த நாட்டின் CDU கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
18.2.2021அன்று 60 வயதை அடையும் இவர் முன்சன (München) பொண் (Bonn) நகரங்களிலுள்ள பலகலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தவர். மனைவி 3 பிள்ளைகளுடன் ஆகன் (Aachen) நகரை வதிவிடமாகக் கொண்டவர்
உலகின்; அதிகாரம் மிக்க பெண்மணி
எதிர்வரும் 26.9.2021 அன்று யேர்மனியின் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. 2005 ஆண்டு தொடக்கம் 2021 வரை 16 வருடங்கள் கான்சிலராகப் பதவி வகித்த உலகின்; அதிகாரம் மிக்க முதல் பெண்மணியாக விளங்கிய அங்கலா மேக்கல் அரசியலில் இருந்து ஓய்வுபெற இருக்கிறார். விடைபெறும் அம்மையாரை வாழ்த்துவோம்!..
![]()
