அதிசயக் குறிப்புகளும் அதிரவைக்கும் குசும்புகளும்!
-வெற்றிமைந்தன்
ஒவ்வொரு மணி நேரமும் நமது உடலில் ஒரு மில்லியன் அணுக்கள் மாற்றப்படும். (அடேங்கப்பா… ஒரு பெரிய நிறுவனமே இயங்குது போல. லே ஆஃப் பிரச்சினை வராதா ? )
நமது கண்ணுக்கு 50 வகையான சாம்பல் நிறங்களைப் பிரித்தறிய முடியும். (அடக் கடவுளே ! அப்போ நமக்கு புடிச்ச கலர்ல எல்லாம் எப்படி ? )
மனிதனுடைய தொடை எலும்புகள் காங்கிரீட்டை விட வலிமையானவை ( சந்தேகம் இருக்கிறவங்க மட்டும் தொடையால காங்கிரீட்டை உடைக்க டிரை பண்ணுங்க.. நான் எஸ்கேப் )
மனித இதயம் முப்பது அடி நீளத்துக்கு இரத்தத்தைப் பீச்சியடிக்கும் வலிமை கொண்டது ( நல்ல வேளை ஒலிம்பிக்ல இதைச் சேக்கல )
நமது கண்கள் பிறந்த நாளில் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு தான் இருக்கும் ஆயுள் முழுதும். அளவு மாறாது. ஆனா மூக்கும் காதும் கட்டும் காலம் பூரா வளந்துட்டே இருக்கும் ( ஐயையோ… அப்போ யானைக்காது மாதிரி ஆயிடுமா )
நமது இருமலுக்கு மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் உண்டு ( அட.. நம்ம ஸ்கூட்டியை விட அதிகம் )
நம்ம உடல்லயே அதிக வேகமாக வளரும் முடி, தாடி தான். ஷேவ் பண்ணாமலேயே இருந்தால் நம்ம சராசரி வாழ்நாளில் முப்பது அடி நீளம் வரை வளரும். ( சீக்கிய நண்பர்கள் டிரை பண்ணாதீங்க, எட்டு மீட்டர் தொப்பி தேவைப்படும் )
பிறந்த ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது ( அதுக்காக சும்மா சும்மா அழ வெச்சு டெஸ்ட் பண்ணாதீங்க )
கைவிரல்களைப் போல நாக்கிலும் தனித்துவமான ரேகைகள் உண்டு ( நல்ல வேளை கைநாட்டுக்குப் பதிலா நாக்கு நாட்டு வைக்கல… )
ஒரு புன்னகைக்கு நமது முகத்தில் ஐந்து முதல் ஐம்பத்து மூன்று ஜோடி தசைகள் செயலாற்றும் ( எவன்டா இதெல்லாம் எண்றது ? )
இருபது பேர்ல ஒருத்தருக்கு ஒரு எக்ஸ்ட்ரா விலா எலும்பு இருக்கும் ( ஓ… தயாரிப்புப் பிழை ? )
கருப்பு நிறம் உடையவர்களுடைய தோல் விரைவில் சுருங்காது. ( அட… அதான் சூப்பர்ஸ்டார் இந்த வயசுலயும் இப்டி இருக்காரு )
மனித உடலில் இரத்தம் ஒரு நாள் ஓடும் தூரம் 60 ஆயிரம் மைல்கள் ! ( அடேங்கப்பா… ஒரே நாள்ல உலகத்தையே சுற்றி வரலாம் போல )
பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாகத் துடிக்கும் ( உன்னை விட அதிகமாய் துடிக்கும் இதயம் எனக்கு.. என்று பெண்கள் கவிதை எழுதலாம் )
நாளொன்றுக்கு ஒரு இலட்சம் தடவை இதயம் துடிக்கும் ( அட..சுளுக்கு கிளுக்கு புடிக்காதா ? )
தலைமுடியும் நகமும் ஒரே மூலக்கூறிலிருந்து உருவாகிறது ( நல்ல வேளை கையில முடியும், தலையில நகமும்
வளரல… )
![]()
