காசு என்ன நிறம்.

0
vm220

எமது வயதிற்கு கட்டாயம் உறைப்பு இல்லாமல் ஊர் சுற்ற முடியாது.

  • மாதவி (யேர்மனி)
    பாலி நகரில் ஒரு வீதி, இந்திய உணவகம் அந்த வீதியில் இரண்டு மட்டுமே உண்டு. காசு மாற்றும் ஆழநெல ஊhயபெந இடம் முழத்திற்கு முழம் உண்டு. எந்த பெரிய நட்சத்திர விடுதியில் இருந்தாலும் எமக்கு காசு மாற்றவும், நாக்குச் செத்துபோகாமல் இருக்கவும் வெளியே வந்துதான் ஆகவேண்டும்.

அதுவும் எமது வயதிற்கு கட்டாயம் உறைப்பு இல்லாமல் ஊர் சுற்ற முடியாது.

நானும், மனைவியும், எமது நீண்ட நாள் நண்பர் ஒவர் குடும்பமும் பாலியைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறோம். காலை உணவு ஸ்டார் ஹோட்டல், மதிய உணவு சுற்றும் இடங்களில் உள்ள தெருக் கடை இளநீர் வழுக்கல் தேங்காய். இரவு வந்தால் இந்திய உணவகம்.

எம்மோடு கூட வந்தவர்களுக்கு சற்று தடிமன். உணவை சுவைத்து உண்ண மனம் இல்லை, அதனால் எம்மை சென்று வாருங்கள் என்றனர். நானும், மனைவியும், வெளியே நடந்து, இந்திய உணவகத்தில் இரவு உண்ணச் சென்றோம். செல்லும் வழியில் ஒரு பேக்கறி வாசம் வர நான் உள் நுழைந்து பார்த்தேன். சுடச் சுட கொசோன் (croissants) எடுத்து வைக்கிறார்கள்.

அட நண்பருக்கு தடிமன் இது என்றாலும் இரண்டு வாங்கி கொடுப்போம் என வாங்கினேன்.

ஏன் மனைவி கூறினா’நாம் இந்திய உணவகம் சென்று உண்டபின் இந்தக் கோசோனை கொண்டுபோய்க்கொடுத்தால் சூடு ஆறிப்போடும்’ என்றா.
நான் தெருவில் இந்தக் கடைக்கு முன்னால் நிற்கிறேன் நீங்கள் கொடுத்திட்டு வாங்கள் என்றா.
நான் மனைவியை கடைக்கு முன்னால் தெருவில் விட்டு விட்டு நண்பருக்கு சுடச் சுட உணவு கொடுக்க விறு விறு என்று நடந்தேன்.

ஹோட்டல் வாசலில்… தெருவில் வந்த ஒரு 40 வயது இளைஞர் ஏதோ உதவி கேட்க என்னை நெருங்கினார்.

‘இங்கு எங்கு இந்திய உணவகம் உண்டு’ என்று கேட்டார்.
நான் ‘ 300 மீற்றர் நேரே நடவுங்கள்’ என்றேன்.
அவர் தான் துபாயில் இருந்து வந்துள்ளேன் என்றார்.
‘ நீங்கள் எந்த நாடு’ என்றார்.
நான் இலங்கை என்றேன்.

உடன் அவர் நான் ‘நாளை இலங்கை செல்கிறேன், பயணம் எவ்வளவு நேரம்’ என்றார். நான் 6 மணிநேரம் என்றேன்.
உடன் ஒரு டொலர் இலங்கையில் எவ்வளவு என்றார். நான் நண்பனுக்கு உணவு சூடு ஆறப்போகுது என்ற அவசரத்தில் கிட்ட முட்ட சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அப்போ உடன் கேட்டார் ‘காசு மாற்றும் இடம் அது இங்கே எங்கே உண்டு’ என்றார்.
நான் அந்த இடமும் நான் காட்டிய இந்திய உணவகம் பக்கமே என்றேன்.

மன்னிக்கவும் 20 டொலர் என்ன நிறம் இருந்தால் காட்டவும், என்னிடமும் இருக்கு சரிபார்க்க என்று சொல்லி தனது பேச்சை நிறுத்தி, நான் காசெடுத்து காட்டப்போகிறேன் என்ற ஆவலோடு என் கரங்களை பார்த்தவண்ணம் நின்றார்.

நான் சட்டென என்னை சுதாரித்து கொண்டு நண்பனிடம் ஓடிச் சென்று சுட சுட உணவைக்கொடுத்துவிட்டு திரும்பினேன்.

அப்பதான் அட மனைவியை தெருவில் விட்ட ஞாபகம் வர ஓட்டமும் நடையுமாக சென்றேன்.
என்னிடம் காசின் நிறம் கேட்டவர் மனைவியை நிற்கச் சொன்ன பக்கத்தால் திரும்ப வந்துகொண்டு இருந்தான்.

மனைவியை தெருவில் காணவில்லை.
அவ பாதுகாப்பா துணிக் கடைக்குள் எந்த நிறம் பேத்திக்கு நல்லது என்று பார்த்தபடி நின்றா.
அவன் மறு முனையில் வேறுயாரிடம் காசின் நிறம் கேட்கலாம் என்று நடந்துகொண்டு இருந்தான்.

மறு நாள் நண்பர் குடும்பம் சுகமாக இரவு உணவுக்கு வெளியே சென்று திரும்மபினோம்.

அப்போது ஓரு ஆணும் பெண்ணும் காரில் எம்முன் வந்து இறங்கி எம்மிடம் இந்திய உணவகம் எங்கே உண்டு என்று கேட்டனர்.
தாம் தூபாயில் இருந்து வந்துள்ளோம் என்றனர். அடுத்து நாம் இலங்கை நாளை செல்கிறோம். என்றனர். ஒரு டொலர் இலங்கையில் எத்தனை ரூபாய் என்றனர்.
எமக்கு லீக்கான எக்ஸாம் பேப்பர் போல் இருந்தது அவர்கள் கேள்விகள்.

நான் சற்றும் அவர்கள் எதிர்பார்க்காத நிலையில் ‘உங்கள் டொலர் என்ன நிறம்’ என்றேன். அவர்கள் முகம் நிறம்மாறி வெளுத்து விட்டது.

கவனம் நீங்கள் பேச்சைத் திறந்து காசின் நிறம் காட்டும்போது , அவன் நல்லவன் என்ற நிறம் மாறிவிடும்.
விடுமுறைக்கு எங்கு சென்றாலும் நம்ப நட, நம்பி நடவாதீர்கள்.

எவர் மறித்தாலும் நின்று
கண்பார்த்து கதைக்காதீர்கள்.
காதலுக்கு மட்டுமல்ல, திருடனும் கண்வழியேதான் புகுவான்.
கண்டவன் நிண்டவன் எல்லாம்
உங்கள் காண்டம் வாசிப்பான்.

பி குறிப்பு. துபாயில் இருந்து வந்தவன் என்று சொன்னவர் பாலி நாட்டவர் இல்லை. ஆனால் எவராக இருந்தாலும் நாம்தான் அவதானமாக இருக்கவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *