ஏன் வாங்குகின்றோம் ? எதற்காக வாங்குகின்றோம் ?

0
Shopping online concept - Shopping service on The online web. wi

Shopping online concept - Shopping service on The online web. with payment by credit card and offers home delivery. parcel or Paper cartons with a shopping cart logo on a laptop keyboard


பிரியா.இராமநாதன் (இலங்கை)

சர் சர் என்று அடிக்கடி ஏறும் விலையுயர்வும் , அதிகப்படியான பணவீக்கமும் காணப்படும் இன்றைய காலகட்டத்தில் பொருட்களை வாங்கும் திறன் இதுவரை இருந்திராதளவுக்கு மிகவும் முக்கியமானதாய் கருதப்படுகின்றது . தேசத்துக்குத் தேசம் பொருட்களின் விலை அச்சுறுத்துமளவுக்கு உயர்ந்துவிட்டிருக்கிறது, எதிர்காலத்தில் விலைகளில் சரிவு ஏற்படும் என்று எள்ளளவும் எதிர்பார்ப்பதற்கில்லை. அநேக குடும்பங்களில் செலவை சமாளிப்பதற்கு கணவன் மனைவி இருவருமே வேலை செய்யவேண்டியதாயிருப்பதுடன், மேலதிக வருமானத்திற்காக இன்றெல்லாம் பலரும் முதலீடுகள் , பகுதிநேர வேலைகள் என செய்வதும் அதிகரித்துள்ளது.

வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருள்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், சிலரோ செலவுகளைக் குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்கின்றனர். தவிர்க்க முடியாத அத்தியாவாசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மிகப்பெரிய மனோதிடம் வேண்டும் என்பதுதான் உண்மை. ஏனெனில் ஒன்றை வாங்கச் செல்லும் நமக்கு கண்ணில் படும் இன்னொன்றையும் வாங்கும் ஆசை அதிகமாகவே எழுவது யதார்த்தம்தான் இல்லையா ? குறித்த அந்த பொருள் ஏதாவது ஒரு தேவைக்காக நம்மை வாங்கத்தூண்டுவதாக நம் மனம் நம் ஆசையை தூண்டும் . அதிலும் குறிப்பாக குழந்தைகளை நம்முடன் அழைத்துச் சென்றிருந்தால் சொல்லவே வேண்டாம் ! டிவியில் அல்லது மொபைலில் தாங்கள் பார்த்ததை வாங்குவதற்கு அவர்களது மூளை அவர்களை உந்தித்தள்ளும்.

அதற்கேற்றாற்போல கடை வாசலில், பில் கவுண்டரில் பிள்ளைகளே கைநீட்டி எடுத்துக்கொள்வதற்கு வசதியாக வைக்கப்பட்டிருக்கும் அவசியமில்லாத விளையாட்டு பொருட்களையும், வேண்டாத உணவுவகைகளையும் வாங்கிக் கொடுக்கும் நிர்பந்தத்திற்கு பெற்றோர்கள் ஆளாவதுண்டு.குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்தாலோ அல்லது பாக்கெட் மணி கொடுத்துப் பழக்கினாலோ அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் மேனியா எனப்படும் பிரச்சினை ஏற்படுமாம் . அதாவது இன்றைய குழந்தைகள் அதிகப்படியான ஸ்மார்ட் போன் பாவனையாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு இந்த விளைவு ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது.

அதிகப்படியாக பொருட்களை வாங்கிக்குவிப்பதென்பதனை ஓர் மனநலப் பிரச்னையாக இப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓனியோமேனிய (Oniomania) அல்லது கம்பல்ஸிவ் பையிங் டிஸ்ஆர்டர் (Compulsive buying disorder-CBD) என இந்த மனநலப்பிரச்சினை அடையாளப்படுத்தப்படுகின்றது. கடைகடையாக ஏறி இறங்கி விலை விசாரித்து வாங்கும் வழக்கங்கள் இப்போது அரிதாகி door delivery செய்யப்படுவது, பணத்தை கையால் எண்ணி செலவழிக்காமல் Credit card debit card swipe செய்வது போன்ற நடவடிக்கைகளினால் கண்ணுக்கு தெரியாமலேயே நம்முடைய செலவுகள் அதிகரித்துள்ளன.

எனவே பொருட்களை எப்படி, எங்கே, எப்பொழுது வாங்க வேண்டும், நம்முடைய பணத்தை அதிக விவேகத்துடன் செலவு செய்வது எப்படி என்பதைத் தெரிந்திருப்பது அதி முக்கியம்! அநேக நேரங்களில், நாமெல்லாம் மலிவானவை, தள்ளுபடி போட்டிருக்கிறார்கள் என தேவையோ இல்லையோ பொருட்களை வாங்கிக் குவிப்பதுண்டு.
இந்தத் தள்ளுபடிப் பொறிகளில் சிக்கும்போது, இந்தப் பொருட்களை ஏன் வாங்குகிறோம் என்பது குறித்த சிந்தனை தள்ளிப்போய், அடுத்த விற்பனை எப்போது வரும்? எவ்வளவு தள்ளுபடியில் வாங்கலாம்? என்பதில் கவனமாக இருப்போம். ஆனால் இந்த “ளயடந ழிவழைn” என்பதை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது கேள்விக்குறியே ! எல்லா அங்காடிகளிலும் கழிவுத் தள்ளுபடி (clearance sale) என்று விரைவில் கெடக் கூடிய பொருட்கள், கடையில் நீண்ட காலம் தங்கிவிட்ட பொருட்களை அதிக கழிவு விலையில் விற்பனைக்கு வைத்திருப்பர்.
அந்த பகுதிக்கு சென்றால், அவசியமில்லாத பொருட்களை வாங்க நேரிடலாம். எனவே நமக்கு தேவையில்லாதவிடாது நாம் அவற்றை கடந்து சென்றுவிடுவது நமக்கு நல்லது.

மாதத்திற்கான மளிகைப் பொருட்களின் பட்டியலை தயார் செய்து, மளிகைக் கடைக்கு சென்று வாங்கும்போது நிச்சயமாக பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது அநேகர் அறிந்த உண்மை. ஏனெனில் சூப்பர் மார்க்கெட்டுகளில் அடுக்கடுக்காக பல்வேறு பிராண்டுகளில் பொருட்களை பார்த்து வாங்குவது வசதியாக உள்ளது என்றாலும், பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிக்கும் பழக்கமும் தேவையில்லாதவற்றை வாங்கிக்கொள்ளவேண்டும் எனும் உந்துதலும் இந்த சூப்பர் மார்கெட் கலாசாரத்தால் பெருகி விட்டது என்பதால் முடிந்தவரை சூப்பர் மார்க்கெட் கொள்முதலை தவிர்ப்பது, ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடுவதற்கு முன் கடந்த காலங்களில் தேவையில்லாமல் செய்த செலவுகள் என்னென்ன? அந்த செலவை இந்த மாதத்தில் எப்படி குறைப்பது? போன்றவற்றை கவனத்தில் கொள்ள முடியுமானால் நல்லது. “ iஅpரடளந டிரலiபெ “ எனப்படும் கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கிற மனநிலையினை இந்த சூப்பர் மார்கெட்டிகள் செய்துவருகின்றன என்கின்றன ஆய்வுகள்.

ஏதோ ஒரு உந்துதலில் வாங்கிவந்துவிட்டு, ஏன் ? எதற்காக? இதனை பொருட்களை வாங்கிவந்தோம் ? என குற்றவுணர்விற்கு ஆளாகாமல் நிதானமாக நமது வாங்கும் திறனை மேம்படுத்திக்கொள்வதென்பது நம் எதிர் காலத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் நல்லது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *