யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்றசர்வதேச பெண்கள் தின விழா.

யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் சர்வதேச பெண்கள் தினம் ( பங்குனி 08) டோட்மூண்ட் பெண்கள் மன்றத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. நிகழ்ச்சி தொகுப்பு ராஜி அவர்கள் சிறப்புற வழங்கினார்.வரவேற்ப்புரை குமுதா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து,சகனா அவர்கள்” பெண்களுக்கான உரிமைகள் என்ன?” என்பது பற்றி உரை நிகழ்த்தினார். அமரா ஸ்ரீதேவி, ஆகனா சகாதேவி, ஆகியோரது நடங்கள் பெரிதும் கவர்ந்தன. வெற்றிமணி பத்திரிகை, சர்வதேச பெண்கள் தினம் சிறப்பிதழில் வெளியான, கவிதா லட்சுமியின் ‘பெண்மை விலங்கில்“ என்ற கவிதை ஒன்று சிவவினோபன் சிவகிருஷ்ணநாதன் அவர்களால் அவையில் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, அரசியல் ஆளுமைப் பெண்கள் படங்கள் திரையிட அவர்கள் பற்றிய உரையை முறையே மிதிலா – “தாய் இங் வென்”அன்னலஷ்மி-“2ம்எலிசபெத் மகாராணி”யோகா- “இந்திரா காந்தி”குமுதா-“மாகிறட் தச்சர்”தயா-“அங்கெலா மார்க்கெல்”பிரியா-“கமலா ஹாரீஸ்”றாஜி-“அம்மு சுவாமிநாதன்”ஆகியோரின் தனித்துவம் பற்றி எடுத்துரைத்தார்கள்.
விளையாட்டுக்களை தயா, மிதிலா,றாஜி மூவரும் சிறப்பாக பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்தினர். கவிதை நிகழ்வில், ஜெகதீஸ்வரி மகேந்திரன், யோகா, கலந்து சிறப்பித்தனர், அதனைத்தொடர்ந்து, உரைநிகழ்வு இல், இரவீந்திரன் தர்மலிங்கம், நேசக்கரம் சாந்தி, டயானி பாலேந்திரா,மீனா உதயகுமார், கரிணி. கண்ணன், கௌசி சிவபாலன், நகுலா சிவநாதன் சறோஜினிதேவி – தங்கரட்னம் சிறீஜீவகன் – பொன்னுத்துரை, சிவவினோபன் – சிவகிஷ்ணநாதன்,நடராஜா திருச்செல்வம், சபேசன் விமலசேகரன், தவம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்.
பட்டி மன்றம் : பெண்களின் உயர்வுக்குத் திருமணவாழ்க்கை சவாலா? சாதகமா? என்ற தலைப்பில் இடம் பெற்றது.
நடுவராக பொன்னையா – புத்திசிகாமணி அவர்களும், „திருமணவாழ்க்கை சவாலே“: என, நகுலா சிவநாதன், தேவராணி, ராஜகுலசிங்கம், சாந்தினி.துரையரங்கன் ஆகியோரும். „திருமணவாழ்க்கை சாதகம்“ என குமுதா மனோகரன், ரவீந்திரன் தர்மலிங்கம், ரவீந்திரன் வெற்றிவேலு, குழுவினரும் கருத்தால் மோதினர். சர்வதேச பெண்கள் விழா என்றால் பெண்களுக்கானது மட்டுமல்ல என்பதனை மெய்பிப்பதுபோல் கூட்டத்தில் ஆண்கள் பலர் கலந்துகொண்டதும் சிறப்பு. பல ஆண்டுகளாக இவ்விழா தொடர்ந்து தமிழர் அரங்கத்தில் இடம் பெற்று வருகின்றது. இவற்றை ஒழுங்கமைக்கும் பெண்கள் மன்றத்தினரை வாழ்த்துகின்றோம். நன்றியுரை தயா நிகழ்த்த விழா இனிதே நிறைவடைந்தது. சிற்றுண்டி, இராப்போசனம் வழங்கப்படது. படங்கள் கஸ்தூரி.