இன்றைய சூழலில் பலரும் உடல் எடையைக் குறைப்பது பற்றிமட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Fitness girl lifting dumbbell in the morning.
நீங்கள் எதை உண்ண வேண்டும், எந்த விதமான பயிற்சி வேண்டும் என்பதை
உங்கள் உடல் தௌ;ளத் தெளிவாகக் காண்பித்துக் கொடுக்கும்.
-தீபா ஸ்ரீதரன்.(தைவான்)
நாம் hunter gatherer வாழ்க்கை முறையிலிருந்து விவசாயம் செய்து வாழும் முறைக்கு மாறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே முற்றிலும் புரதச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. தொடர் பேலியோ, கீட்டோ டையட் காலப்போக்கில் சிறுநீரகத்திற்கு அதிகப் பாரத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. நம்முடைய மரபணுக்கள் நாம் வாழும் நிலத்தின் தட்பவெப்ப நிலைக்கும், அங்கே கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கும் தக்கவே அமைந்திருக்கும். இதுவும் ஒருவகை எப்பிஜெனிடிக்ஸ் (Epigenetics). உலகமயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பல விதமான உணவுப் பதார்த்தங்கள் நமக்குப் பரிச்சயமாகின்றன. எல்லாவற்றையும் உண்டு மகிழ்ந்து கொள்ளலாம். ஆகவே எதையும் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவைப் பொறுத்தவரையில் அளவு மிகவும் முக்கியமானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எதையும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடாமல், அதன் தன்மை அறிந்து சமச்சீரான nutrient சேரும் வண்ணம் சாப்பிட்டால் நல்லது.
ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் உணவின் தன்மையையும் அதில் இருக்கும் நியூட்ரிஷனல் வேல்யூ பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அது குறித்த அறிவியல் காணொளிகளைப் பாருங்கள். அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசியுங்கள். அவை ஓரளவு நம் உடலியங்கும் தன்மையைப் புரிந்து கொள்ள உதவும். அதற்குத் தக்க உணவை உண்பது சாலச் சிறந்தது. எனக்கு எந்தவித உணவு ஒவ்வாமைகளும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் (வெஜிடேரியன்) அளவாக உண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அடுத்தது உடற்பயிற்சியைப் பற்றிச் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக நான் வாரத்திற்கு மூன்று முறை ஜிம் செல்கிறேன். லேபில் மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் இடைவெளி கிடைக்கும். அதில் நாற்பது நிமிடங்கள் ஜிம்மிற்கு ஒதுக்கி வைத்திருக்கிறேன். (அதற்கு முந்தைய வருடங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வெளியே ஓடிக்கொண்டிருந்தேன்) பெரிய பெரிய உடற்பயிற்சிகளை எல்லாம் செய்வதில்லை. என் உடலுக்கு எது பொருத்தமானதோ ஓரளவு அதைச் செய்து கொள்கிறேன். வாரத்திற்கு ஒரு முறை முடிந்த வரையில் ஓட்டம் கடைப்பிடிப்பதுண்டு. லிஃப்ட் உபயோகிக்கும் இடத்தில் அதைத் தவிர்த்து விட்டுப் படிகளை எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய வேலையில் இயல்பாகவே நிறைய நடக்க வேண்டியிருப்பதால் அதற்கென்று தனியாக நேரம் எடுத்துக் கொள்வதில்லை.
உணவைப் பொறுத்தவரையில் எல்லா உணவையும் நானே வீட்டில் சமைத்துத்தான் உண்கிறேன். அதற்கான காய்கறிகள் பழங்கள் வாங்குவதிலும், நல்ல தரமான மளிகை சாமான்களை வாங்குவதிலும் அதிகக் கவனம் செலுத்துவேன். சமைக்கும் போதும் மிதமான தீயில் அதிக எண்ணெய்யோ அல்லது அதிக வெண்ணெய்யோ சேர்க்காமல் பொறுமையாக நேரம் எடுத்துச் சமைப்பேன். பெரும்பாலும் கசழணநn உணவுகளையும், ரெடிமேட் பொருட்களையும் தவிர்த்து விடுவேன் பொடியோ, இஞ்சி பூண்டு பேஸ்ட்டோ எல்லாமே வீட்டிலேயே நானே தயார் செய்து கொள்வேன். சமைக்கும் பாத்திரங்களிலும் கவனம் செலுத்துவேன். பெரிய கயnஉல பாத்திரங்களையெல்லாம் உபயோகிப்பதில்லை. ழேn-ளவiஉம அதிகம் உபயோகிப்பதில்லை. பாத்திரங்களைச் சுத்தமாகக் கழுவுதல் எனக்கு மிக முக்கியம்.
அடுத்து வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் எனக்கு அதிக நேரம் செலவாகும். ஒரு நாளைக்குச் சமையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்வதற்குச் சராசரியாக 4-5 மணி நேரங்கள் செலவிடுவேன். இரண்டு முறை குளிப்பது இரண்டு முறை பல் தேய்ப்பது ஆகியவற்றைப் பல வருடங்களாகச் செய்து கொண்டிருக்கிறேன். வாரத்திற்கு இரண்டு முறையாவது உப்பு வைத்து பல் தேய்த்துக் கொள்வேன். நான் மது அருந்துவதில்லை. அது அளவாக இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதில்லை. புகைப்பிடிப்பதில்லை. எனக்கும் என் மகளுக்குமான தரமான நேரம் எனக்கு மிகவும் முக்கியம்.
ஏதாவது ஒரு படைப்பாற்றல் மிகுந்த செயலில் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஈடுபடுவேன்.
6-7 மணி நேரம் உறக்கம். இவையெல்லாம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உதவுகிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான். அவற்றை நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகத் துல்லியமாக உணர்கிறேன்.
இன்றைய சூழலில் பலரும் உடல் எடையைக் குறைப்பது பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான உடற்பயிற்சி எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அதைக் கடைப்பிடிக்க முடியாமல் போகும் நேரத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்லாமல் உணவை உண்ணும்போது அதை ரசித்து உண்பதை விட அதிகக் குற்ற உணர்வுக்கே தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். சில பிடித்த உணவு வகைகளைக் கான்ஷியஸாகத் தவிர்க்கும் போது அதன் மீது அதிக நாட்டமும் அதை உட்கொள்ள முடியாமல் தவிக்கும் மனநிலைக்கும் தேவையில்லாமல் தங்களைத் தள்ளிக் கொள்கிறார்கள். இது காலப்போக்கில் ஆரோக்கியமற்ற மனநிலையையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு தவறான அணுகுமுறை. உடல் எடை குறைப்பு என்பது ஆரோக்கியத்தின் ஒரு சிறிய அம்சம், அதுவே மொத்த உடல் ஆரோக்கியம் ஆகிவிடாது. எனவே உங்கள் குறிக்கோளை எடைக் குறைப்பு என்று வைத்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் என்று வைத்துக் கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
எடை குறைப்பு என்பதை மட்டுமே அளவு கோலாகக் கொள்ளாமல், உங்கள் சிறுநீர், நீங்கள் கழிக்கும் மலத்தின் தன்மை அவற்றின் கசநஙரநnஉல, உங்கள் நாக்கில் படியும் வெள்ளைப் படலத்தின் தன்மை, உங்கள் மூச்சுக் காற்றின் வாசனை, உங்கள் தூக்கத்தின் நேர அளவு, உங்கள் உடலின் பேலன்ஸ், ஆற்றல் அளவு, ஆகியவற்றைக் கவனியுங்கள்.
நீங்கள் எதை உண்ண வேண்டும் உங்களுக்கு எந்த விதமான பயிற்சி வேண்டும் என்பதை உங்கள் உடல் தௌ;ளத் தெளிவாகக் காண்பித்துக் கொடுக்கும். அதை உற்று நோக்கும் நுண்ணறிவை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட வாழ்க்கை முறையைச் சுமார் பத்து வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் என் உடல் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இவை எல்லாவற்றையும் செய்வதால் எனக்கு எந்த நோயும் வரவே வராது என்று என்னால் உறுதி அளிக்க முடியாது. ஆனால் எனக்குக் காய்ச்சல் சளி, அஜீரணப் பிரச்சனைகள், (97மூ) மலச்சிக்கல் (100மூ) போன்றவை பெரும்பாலும் வருவதில்லை. இதுவரை பெரும்பாலான ஆண்டுகளில் மருத்துவமனைக்கான என்னுடைய செலவு 0. ஊழபெநnவையட pசழடிடநஅஆக இருதயம் மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறேன். சில மரபணு சார்ந்த வியாதிகளை நம்மால் தவிர்க்க முடியாது. அதற்கான தனிக் கவனம் செலுத்த வேண்டும். எனவே இதுதான் சிறந்த முறை என்று என்னால் எதையும் உறுதியாக இங்கே சொல்ல முடியாது. முடிந்த வரையில் நம் உடலைப் பற்றிய இயக்கங்களை அறிந்து கொண்டு, அதற்குத்தக்க வாழ்க்கையை வாழ்ந்து உடலை ஆரோக்கியமான முறையில் பேணிக்கொள்வது மிகவும் முக்கியம்.