உயிர்ப்பு ஞாயிறு. (Easter)

- வாமினி (Gevelsberg Germany)
நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படி, அவர்தாமே நமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேதுரு 3:24 )
பாவம் என்பது இருள். ஒரு மனிதனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று பிரிவுண்டு. இந்த ஆத்துமா இருளில் இருந்தால், எல்லாம் இருந்தும் ஒன்றுமில்லை. ஓர் நடைபிணம். ‘ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன லாபம்’ என்று வேதம் எம்மை கேள்வி கேட்கிறது. ஆத்துமா பாவத்திலிருந்தால் அவன் வாழ்கையில் நிம்மதியிலை. இந்த பாவத்திலிருந்து விடுதலை தரத்தான் இயேசுகிறிஸ்த்து இந்த பூமிக்கு வந்தார். அவர் சொன்னார் ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்’ என்று அவர் சொன்னார் அதை செய்தார், செய்துகொண்டிருக்கிறார்.
நமக்குள் பாவமில்லை என்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். நமக்குள் சத்தியம் இருக்காது. பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி பரம்பரை பாவ, சாபத்திலிருந்து கழுவி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
உலகத்தையும், அதில் உள்ள யாவற்றையும்; படைத்தவர். ஜனங்கள் மகிழ்ந்திருக்கும்படி யாவையும் செய்துமுடித்தார். ஜனங்களின் ஆறறிவற்ற அன்பில்லாததினால், உலகில் பாவம் சாபம் பெருகிட, ஜனங்களின் கூக்குரல் பரலோகம் சென்றிட இயேசு கிறிஸ்து பூமிக்கு இறங்கி வந்தார். அவர் சத்தியவான், பரிசுத்தவான், நீதிமான், அன்பிற்கு முடிவில்லாதவர். எங்களுடைய பாவ, சாப, அக்கிரமங்களுக்காக அவர் மனுஷரால் அசட்டை பண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு,அவமானப்பட்டு, காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, வலி, வேதனையை எங்களுக்காக சரீரத்தில் சுமந்து, எங்கள் மீறுதலினிமித்தம் வாதிக்கப்பட்டர். எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் தண்டனையும் அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகின்றோம்.
மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்று மரித்த மூன்றாம் நாள் எழுந்து, ‘சமாதானம் உண்டாவதாக’ என்று சொன்னவர். சத்தியத்தின்படி நடக்கும் பரிசுத்தவான்களை அழைத்து செல்ல வருவார்.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவNர் நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். (1 யோவான் 2:2)
Gevelsberg Germany