நெநர்லாந்தில் மகளிர் தின விழா

0
vm232

08.03 2025

யாவரும் கேளிர் யாவையும் வெல்லும் முகமாய் அனைத்துலக மகளிர் நாளை, முதல் முறையாக நெதர்லாந்தின் துழரசந நகரில் ஆரம்பிக்கப்பட்டு, அறிவாலயம் தமிழ் பாடசாலை சிற்றார்ட், ணநளைவ நகரிலும் கொண்டாடப்பட்டது.
இம்முறை 2025 ம் ஆண்டை வரவேற்கும் முகமாக நெதர்லாந்தின் சுநநரறதைம நகரில் மிகவும் கோலாகலமாக எம் பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிலும் இம்முறை 108 குடபவனியோடு,சிகப்புநிற சேலையுடன் பெண்கள் பவனி வந்தமை கண்கொள்ளாக்காட்சியாக காணப்பட்டதுடன், நாதஸ்வர ஓசை, மேளதாள பவனியோடு அரங்கத்தை அதிர வைத்து மேலும் கோலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம்,பரதம் என பல்வேறு நிகழ்வுகள்; கண்ணுக்கு விருந்தாய் அமைந்திருந்தது.

இவ் விழாவின் முக்கிய பொறுப்பிலிருக்கும் யாவரும் குழுவைச்சேர்ந்த திருமதிகளான ராதிகா ஈஸ்வரசோதி, சுஜிரமேஷ், பவானி தில்லைநாயகம், சாந்தாபாலகிருஸ்ணன் போன்றோர்கள் முன்னின்று நிகழ்ச்சிகளை கொண்டு செல்வதற்கு முன்னோடியாக திகழ்ந்தார்கள். அத்தோடு இவ் நிகழ்வுக்கு பிரதான அனுசரணையாளர்களாக KUGAN BAU, SLA CATERING போன்ற நிறுவனங்களின் பேருதவியோடும். இன்னும் நல் உள்ளங்களின் உதவிகளும் ஒருங்கே அமையைப்பெற்ற “மகளிர் விழா” சிறப்பாக அமைந்தது.

மண்டபம் நிறைந்த மக்களுமாய், நெதர்லாந்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும்.வருகை தந்திருந்தனர். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதைப்போன்று இவர்களின் வெற்றிகளுக்குப்பின் ஆண்களும் துணை நின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: க.சிறிதாஸ் (நெதர்லாந்து.)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *