தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசம்

பெண்களின் பாரிய பிரச்சினைகள்:
-கௌசி சிவபாலன் (யேர்மனி)
பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத் தாம் அறிந்து கொள்ளாமையும், தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசமும் பெண்களுக்குப் பாரிய பிரச்சினையை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.
பெண்கள் பலம்:
ஆண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிவதில்லை. பெண்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆண்களுக்கு மொழி மையத்தின் அளவும்; சிறிதாக இருப்பதாலே ஆண்கள் பேசுவது குறைவாகவே இருக்கின்றது. நிஜமாக ஆண்களுக்கு சமய சந்தர்ப்பம் அடைந்து சாமர்த்தியமாக பேசவும் தெரியாது. முகக்குறிப்புகளையும் இலகுவில் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், பெண்கள் இவ்விடயங்களில் சாமார்த்தியசாலிகள். அதேபோல் இதைவிட ஒரு விடயத்தை அவதானித்தல், மனநிலை, கவலை போன்றவற்றை வெளிப்படுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளையே தெளிவாகச் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதை அறியாத பெண்கள் யாரையாவது எதிர்பார்க்கின்ற தன்மையும் பாதுகாப்புக்காக ஏங்குகின்ற தன்மையும் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையும்
என்று பாரதியார் பெண்களைப் பற்றிப் பாடியிருக்கின்றார். ஞானம் என்பது பற்றி ஆறுமுகநாவலர் சொல்லும் போது பகுத்தறிவுச் சுடர் என்கிறார். ஆகவே பெண்களிடம் பகுத்தறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது என்னும் போது எதையும் பாகுபடுத்தி நல்லவை தீயவை பற்றி அறிகின்ற அறிவு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்புக்குப் போதுமானது. மனிதர்களுக்கு தாம் என்ன இனம் என்று அடையாளத்தை தருவதே தாய் தான். உதாரணமாக மிருகக்காட்சிச் சாலையிலே பணி செய்கின்ற ஒரு பெண்ணுக்குப் பிள்ளைகள் இல்லை. ஒரு குரங்கு குட்டியை எடுத்துப் பிள்ளை போல் வளர்த்தார். அந்த குரங்கு குட்டி மிகச் சிறப்பாகப் படங்கள் வரையக்கூடிய தன்மை உடையதாக இருந்தது. ஒரு மனித பெண்ணோடு வளர்க்கப்பட்ட குரங்கு தன்னை மனிதனாகவே நினைத்தது. சிம்பன்சி பெண்களை அந்த குரங்குக்குப் பிடிக்கவில்லை. அவற்றுடன் பழகுவதற்கு அது விரும்பவில்லை. ஆகவே என்ன இனம் என்று அடையாளத்தை ஏற்படுத்துவது கூட தாயே தான். எந்த இனமோ அந்த இனத்திலேயே துணை தேடுவது உயிரினங்களில் களவியல் லாஜிக்.
அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணே தன்னுடைய கணவனைத் தெரிவு செய்கின்றாள். காட்டுவாசிப் பெண் காம சுகம் விகிதத்தை வைத்துத்தான் ஆண்களைத் தெரிவு செய்தாள். குகை வாசியான பெண் வேட்டுவ வீரியத்தை வைத்து ஆண்களை தெரிவு செய்தாள். ஆதிவாசியான பெண் பாதுகாப்பு விகிதத்தை வைத்து ஆண்களைத் தெரிவு செய்தாள். இளவட்டக்கல்லைத் தூக்கித் திருமணம் செய்தது. சீதையை மணம் முடிப்பதற்காக சிவதனுசு வில்லை நாண் பூட்டி உடைத்தல் வீரமுடைய ஆண்மகளைத் தெரிவு செய்தமைக்கு அடையாளம். ஆரம்ப நாகரீக பெண் அறிவு விகிதத்தை வைத்து ஆணின் செல்வாக்கு செல்வத்தை வைத்து தேர்வு செய்தாள். ஆனால் இன்று பெண்கள் அந்தஸ்துள்ள ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்தாலேயே அவனுடைய உச்சகட்ட அந்தஸ்தைக் கொண்டு பிள்ளைகளை வளர்த்த ஆளாக்க முடியும் என்று நம்புகின்றாள். ஆனால், பொதுவாகத் தன்னுடைய வாழ்க்கையை சுயமாக வாழ முடியாத ஆண்களை எந்தப் பெண்களும் விரும்புவதில்லை. ஆனால், சில ஆண்கள் யாரையாவது தங்கி வாழுவார்கள். அம்மா சொல்வதைத்தான் கேட்பார்கள். இல்லையென்றால், மனைவியின் பேச்சுக்கு அடிமையாக இருப்பார்கள். இந்த வகையான ஆண்களை இப்போது பெண்கள் விரும்புவதில்லை. இதனாலேயே விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. இப்போது ஆண்களுடைய ஆண்மையைக் கொடுக்கின்ற ரெஸ்ரோஸ்ரீரோன் என்னும் ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதாகக் கூறப்படுகின்றது.
தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசம்:
மார்க்ரெட் மேலர் அமெரிக்காவில் பணியாற்றிய ஒரு மனநல மருத்துவர். தாய்சேய் உறவில் பல நிலை இருப்பதை ஆராய்ந்தாராம். ஒரு பிள்ளைக்கு மூன்றுமாதத்தின் பின் தாயை மட்டும் நன்றாகத் தெரியும். நான் என்றால் நான் என்பதும் அம்மா என்பதும் ஒன்றுதான். அம்மா என்னோடு இருந்தால் தான் என்னால் இயங்க முடியும். அம்மா என்னோடு இருந்தால் பாதுகாப்பு உணர்வை நான் பெறுகின்றேன் என்று ஒரு பிள்ளை நினைக்கும். ஆண் குழந்தைகள் எல்லாம் தன்னுடைய தாயைத்தான் முதலில் காதலிக்கிறார்கள். இரண்டு மூன்று வயதில் இவளை ரசித்து இவள் எனக்கே எனக்குத்தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் இதை எடிபெஸ் காம்ப்ளெக்ஸ் என்பார்கள்.
01.ஒரு ஆண் மகன் முதலாவது நிலையில் தாயை இவ்வாறு உணர்கின்றான். இதுதான் முதலாவது நிலை. 2 ஆவது நிலை ழடிதநஉவ உழவெயnஉல அதாவது தாய் கண்ணுக்கு முன்னே இல்லாவிட்டாலும் அம்மா என்னோடுதான் இருக்கிறாள். அவளைத் தேடத்தேவையில்லை என்று பிள்ளை நினைக்கும். 3 ஆவது நிலை நான் வேறு அம்மா வேறு என்று புரியும் நிலை ளுநிநசயவழைn – iனெiஎவைரயடயவழைn. இந்நிலையில் தான் ஒரு தனிமகன் தனக்கு என்ற ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று புரிகின்ற நிலை. ஆனால், தாயானவள் தன்னுடைய மகனை முதலாவது நிலையிலேயே வைத்திருக்க நினைத்தால், தன்னுடைய பாதுகாப்புக்காகத் தன் மகனை வளர விடாமல் வைத்திருப்பது Pநசளளைவநவெ ரnடிடைiஉயட உழசன ளலனெசழஅ என்று சொல்லப்படுகின்றது. இப்போது எங்கே சந்ததி விருத்தி ஏற்படும். நான் உன்னைப் 10 மாதம் சுமந்தேன் என்னும் மந்திரத்தைப் பயன்படுத்துகின்ற தாயானவள், யானை தன் குட்டியை 22 மாதங்கள் சுமக்கின்றதே அதையும் நினைத்துப் பார்க்க வேண்டுமே. இந்தத் தாய்மை உணர்வானது குரங்குக் குட்டி,கெங்காரு என்று அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்றது. தான் மட்டுமே 10 மாதங்கள் தாங்குவதாக மனிதத்தாய் நினைத்தல் கூடாது. தொப்புள் கொடி வெட்டப்பட்டால், அக்குழந்தை தனி மனிதன் என்ற உணர்வைத் தாய் கொண்டிருக்க வேண்டும். ஆண்குழந்தை ஒன்று பிறக்க வேண்டுமானால், அங்கு தந்தைக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. தாய்க்கு ஓஇஓ என்னும் இரண்டு குரோமோசோம்கள் மாத்திரமே இருக்கின்றன. தந்தைக்கு மட்டுமே ஓ.லுஎன்ற குரோமோசோம்கள் இருக்கின்றன. எனவே தந்தையினுடைய லுகுரோமோசோம் இருந்தால் மட்டுமே ஒரு ஆண்குழந்தையைத் தாயால் பிரசவிக்க முடியும். எனவே ஆண் குழந்தை பிறப்பதற்கு அம்மாவை விட அப்பா முக்கியம் என்னும் விடயத்தைத் தாய் கண்டு கொள்வதில்லை.
இந்தத் தாய் மகன் உறவினாலே தம்பதிகளின் உறவிலே விரிசல் ஏற்படுகின்றது. தன்னுடைய மனைவியைக் கணவன் தாயின் பேச்சைக் கேட்டு அடக்கி வைக்க முனைகின்றான். பாவப்பட்ட பெண்ணோ பொறுத்துக் கொண்டு அடிமையாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. கணவனுக்காக விதம் விதமாகச் சமைத்து வைத்துக் காத்திருக்கும் போது கணவன் தாய் வீட்டில் வயிறார உணவருந்தி விட்டு வருகின்ற போது “ஏன் சாப்பிட்டு விட்டு வந்தீர்கள்? என்று மனைவி கேட்கின்றாள்.அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிகின்றது. இங்கு ஆண் மகனின் தாய் வில்லி ஆகின்றாள். இங்கு பெண்ணுக்குப் பெண்ணே பிரச்சினையாகின்றாள்.