சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் மகளிர் தின ஒன்றுகூடலில்மூன்று பெண்கள் ”விழிசைச்சிவம் நல்ல பெண்மணி விருது பெற்றனர்.

08.03.2025 இல் நடைபெற்ற சோலைக்குயில் அவைக்காற்றுக்களத்தின் மகளிர் தின ஒன்றுகூடலின்;; ஆரம்பத்தில் விருந்தினர்கள் ஆரத்தி சுற்றி மலர் கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். விருந்தினர்களாக தேசியகலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த பதில் நீதிபதி,சிரேஷ்ட சட்டத்தரணி திரு சோ.தேவராஜா, தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலர் திருமதி நேசரத்தினம் செல்வகுமாரி, அளவெட்டி அருணோதயக்கல்லூரி அதிபர் திரு த.தயானந்தன். பிள்ளைகள் ஜிந்துஷா விளம்பிதன்,ஹரிணிகா கௌரிதரன் ஆகியோர் யாவருக்கும்; பன்னீர் தெளித்து, நடனமாடி அழைத்துவந்தார்கள். நிகழ்வின் ஆரம்பத்தில் புலவர்.ம.பார்வதிநாதசிவம் இயற்றிய ”கனிமொழியே ,தனிமொழியே ”என்று தொடங்கும் தமிழ் வாழ்த்து மாண்டு ராகத்தில் இசைக்கப்படுகிறது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.
அன்றையதினம் ‘ஒரு சோகம் இறுகும்போது ” சிறுகதா நிகழ்வும் இடம்பெற்றது. மகளிர் தின ஒன்றுகூடலில் மூன்று பெண்கள் ”விழிசைச்சிவம் நல்ல பெண்மணி விருது ”பெற்றுக்கொண்டார்கள். குழந்தை மருத்துவ நிபுணர் பேராசிரியர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ் ,எழுத்தாளர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம்,ஆசிரியர் திருமதி ராஜி கெங்காதரன் ஆகியோரே அவர்கள் .இந்தப்புகைப்படத்தில் மருத்துவநிபுணர் அவர்கள் தனது விருதை, பிரதமவிருந்தினர் திரு சோ.தேவராஜா,தெல்லிப்பழைப் பிரதேச உதவிச் செயலர் திருமதி நேசரத்தினம் செல்வகுமாரி ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.அரிய நிகழ்வுகளை அழகாக நடத்திவரும் கோகிலா மகேந்திரன் அவர்களுக்கும் அவைக்காற்றுக் களத்தின் உறுப்பினர்கள் யாவருக்கும் வெற்றிமணியின் வாழ்த்துகள்.