வாராரு வாராரு… அழகர் வாராரு…!

அழகர் கோயில் மதில் சுவர்கள் மட்டுமே
ஒருமைல் சுற்றளவு கொண்டிருக்கிறது!
கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன்
தமிழகத்தில் நூற்றியெட்டு வைஷ்ணவத் திருத்தலங்களில் ஒன்றான “.. அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்..” மதுரை மாநகரில் அமைந்துள்ளது.
சுந்தரராஜ பெருமாள் எனும் திருநாமத்துடன் கையில் சங்கு, சக்கரம், வி ல், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் வலப்புறத்தில் திருமகள், இடப் புறத்தில் மண்மகள் கிழக்கு நோக்கியும், மூலவர் பரமஸ்வாமி நின்ற கோ லத்திலிலும் காட்சி தருகிறார். எம்பெருமானின் கையில் உள்ள சக்கரம் பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கணநேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் எ ன்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார்.தனிசன்னதியில் கல்யாண சுந்தரவல்லி தாயார் எழுந்தருளி பெயருக்கு ஏற்றவாறு ஏகசௌந்தர்யமாக விளங்கி அருள்பாலிக்கிறார்.
சுந்தரராஜ பெருமாளுக்கு பதினெட்டாம்படிக் கருகருப்பண்ணசாமியே தோ ள் கொடுக்கும் தோழன் அல்லது முதன்மை மெய்காப்பாளர் என அனைத் துமாக விளங்கி காவல் காத்துக் கொண்டிருக்கிற ஐதீகமாகும்..!
ஆகவே தான் அழகர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் பக்தர்கள் “..பதினெட் டாம்படிக் கருப்பண்ணசாமியை..” முதலில் கும்பிட்டு பிரசாதமாக வழங்கு ம் விபுதியை நெற்றி நிறைய பூசிக்கொண்டு அழகரை தரிசிக்கச் செல்கிறா ர்கள் இது காலம் காலமாக தொடர்கிறது.
அழகர் கோயில் மதில் சுவர்கள் மட்டுமே ஒருமைல் சுற்றளவு கொண்டிருக்கிறது, பலசிறிய மலைகள் நாலாப்பக்கமும் பிரிந்து ஒட்டு மொத்தமாக கழுகு பார்வையில் பார்க்கும் போது “..காளை வடிவம்..” போல காட்சி தருகிறது.
அழகர் மலை என்றாலும் கீழே தான் கோயில் அமைந்துள்ளது மலையி ல் உள்ள ராக்காயி அம்மனை தரிசித்து விட்டு நூபுரகங்கை தீர்த்ததிற்கு சென்று பக்தர்கள் நீராடுவது வழக்கமாக உள்ளது மலைக்கு செல்ல தே வஸ்தான பேருந்து வசதி உள்ளது.
முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் “..அருள்மி கு சோலைமலை முருகன் திருக்கோயில்..” ராக்காயி அம்மன் கோயிலுக் கு செல்லும் வழியில் அமைந்திருக்கின்றது முருகன் வள்ளி தெய்வானை யுடன் இணைந்து அருள்பாலிக்கிறார்கள். அழகர் கோயிலின் இரண்டு முக்கியத் திருவிழாக்களில் ஒன்று ஆடிமாதம் “..ஆடித்தேர்த் திருவிழா..” நடைபெறும் இன்னொன்று உலக பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா..” அழகர் கோயில் மற்றும் மீனாட்சி கோயில் சா ர்பாகவும் மொத்தம் 22 நாட்கள் நடைபெறுகிறது.
அழகர் கோயில் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் விடியற் காலையில் லட்சக்கணக்கில் வெள்ளமெனக் கூடியுள்ள பக்தர்க ளின் நடுவிலிருந்து “..கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி..” அருள்பாலி க்கிறார்.
ஒவ்வொரு மண்டகப்படியாக செல்லும் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம், தசாவதாரம் போன்ற அனைத்து புராண நிகழ்வினை ந டத்தியும், ஏற்றுக்கொள்ளும் கள்ளழகர் வழிநெடுகிலும் பக்தர்களின் வர வேற்பைப் பெற்றுக் கொண்டு திரும்பவும் அழகர் மலைக்கு திரும்புகிறார்.
அழகர் கோயிலின் “..பலவகை தானியங்களுடன் கருப்பு உளுந்தில் நெய் யுடன் சேர்த்து செய்து பெருமாளுக்கு படைக்கப்படும் சம்பா தோசை..” இக் கோயில் பிரசாத ஸ்டால்களில் கிடைக்கும் மறக்காமல் வாங்கி சாப்பிடுங்க அப்பத்தான் பெருமாளை தரிசித்த பலன் முழுமையாக கிடைத்த மாதிரி இருக்கும்..! மதுரையில் சித்திரைத் திருவிழா நாட்களில் “..வாராரு வாராரு அழகர் வா ராரு சப்ரம் ஏறி வாராரு நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு..” மற்றும் “..பல் லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி..” எனும் பாடல்கள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்கும் கேட்கும் போது பக்தர்களிடம் இறை பக்தி உடலெங்கும் புத்துணர்வாக தூண்டி விடும் என்பதில் ஐயமில்லை..!
இக்கோயில் எங்குள்ளது..?
மதுரை நகரிலிருந்து வடக்கே 22 கிஃமீ தூரத்தில் இக்கோயில் அமைந்தி ருக்கிறது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 44 ஆம் நம்பர் வழித்தடம் கொண்ட பேருந்து அடிக்கடி இயக்கப்படுகிறது. தமிழக அரசு இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக் கோயில் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மீண்டும் மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை.
என் கடன் பணி செய்து கிடப்பதே.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ள சிவபூமி அறக்கட்டளை பணிகளில் முக்கியமாக சிவபூமி மனவிருத்தி பாடசாலை அமைப்பதற்காக ஆரம்ப கட்ட வேலைகளை இன்று எமது சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் இன்று (19.03.2025) ஆரம்பித்து வைத்தவேளை.
திருக்கோணமலை திருக்கோணேஸ்வரம்.
இன்று இந்திய தூதரக உயரதிகாரிகள் திருப்பணி வேலைகள் தொடர்பாக நேரில் ஆராய்ந்து விபரம் பெற்றுச் சென்றனர்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என நாள்தோறும் சிந்;தித்து, இயன்றவற்றை செய்துவரும் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகனுக்கு எம் வாழ்த்துகள்.
5 total views , 1 views today