ஜெர்மனி மண் சஞ்சிகை 35 ஆவது ஆண்டுவிழா

0
vm253

ஜெர்மனியில் 05.04.2025 அன்று Claubetghalle> kampstr- 23,Duisburg இன்னும் இடத்தில் கல்வி,கலை, இலக்கிய, சமூக, மாத சஞ்சிகையாகிய “மண்” என்னும் சஞ்சிகை தன்னுடைய 35 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இச்சஞ்சிகையின் ஆசிரியர் வைரமுத்து சிவராஜா அவர்கள் மனிதநேயப் பணியை இலங்கையில் செய்து வருகின்றார். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பணத்தை சேகரித்து இலங்கையில் வாழுகின்ற வறிய மக்களுக்கு உதவி செய்கின்ற பாரிய பணியை இவர் செய்த வருகின்றார். அப்பணிக்கு செலவு செய்கின்ற பணம் பற்றிய விபரங்களை இச்சஞ்சிகையில் வெளியீடு செய்து வருகின்றார்.
தமிழரின் பழம்பெரும் கலையாகிய பறை இசையுடனும் மங்கல விளக்கேற்றலுடனும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. வரவேற்புரை, வரவேற்பு நடனம் போன்றன இடம்பெற்றன. வரவேற்புரையை மண் சஞ்சிகை ஆசிரியரின் மகள் சிவதர்சினி பிராங்களின் நடத்தியிருந்தார். தலைமையுரையை கவிஞரும் எழுத்தாளர் சங்க உபதலைவருமான அம்பலவன் புவனேந்திரன் நிகழ்த்தினா. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சுவிஸ் நாட்டில் இருந்து எழுத்தாளர் திரு.க.அருந்தவராஜா கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிகளை சிவவிநோபன், சாந்தினி துரையரங்கன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தார்கள். கர்நாடக இசை, நடனம், பியானோ இசை, பாடல்கள், பட்டிமன்றம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர் அரங்க மாணவர்கள், ஆடற்கலாலய மாணவர்கள், கனகசபை கலாலய மாணவர்கள் நிகழ்ச்சிகளை வழங்கி இருந்தார்கள்.
இச்சஞ்சிகையில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், இச்சஞ்சிகைக்கு எழுதி வருகின்ற எழுத்தாளர்களுக்கும், ஜெர்மனியை தடம் பதித்த எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும், தமிழில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனிதநேயப் பணிக்கு உதவியவர்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும், மறைந்த எழுத்தாளர்களுக்கும், மண் சஞ்சிகை ஆசிரியர் விருது வழங்கிக் கௌரவித்தார். நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாணவ மணிகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. மண் சஞ்சிகை ஆசிரியரையும் அவர் மனைவியையும் பல நிறுவனங்கள் பொன்னாடை போர்த்திப் பாராட்டி கௌரவமும் அளித்தனர்.மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிவடைந்தது. கௌசி ஜெர்மனி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *