பிரபஞ்சம் உண்மையில் 1300 கோடி ஆண்டுகள் பழமையானதா?
Dr.நிரோஷன் தில்லைநாதன்.(யேர்மனி)
பிக் பேங்க் – இந்த வார்த்தையை கேட்டதுமே நம் மூளையில் வெடிக்கும் ஒரு அசாதாரண கற்பனை. சுமார் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் எதுவும் இல்லாத நிலையிலிருந்து, ஒரு குறுநொடியிலும் கூட குறைவான தருணத்தில், நமது பிரபஞ்சம் உருவானதாக நாம் பள்ளிகளில் கற்றது. இது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை என்று சொல்லப்படும் ஒன்றாகும். ஆனால், இந்த எண்ணிக்கையே தற்போது சிக்கலில் உள்ளது. புதிய ஆய்வுகள் மற்றும் வலுவான மாற்று கோட்பாடுகள், பிரபஞ்சத்தின் உண்மையான வயதை பற்றி ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. மனிதன் எப்போதுமே கடந்த காலத்தின் எல்லைகளைத் தொட்டுத் திரும்பிப்பார்க்க முயன்றிருக்கிறான். ஆனால்… எது உண்மையான தொடக்கம்?
பரிணாம அளவீடு என்றழைக்கப்படும் cosmic expansion rate என்பது, நமது பிரபஞ்சம் எவ்வளவு விரைவாக விரிவடைந்துவருகிறது என்பதனை அளவிடுகிறது. இந்த அளவீட்டின் அடிப்படையில் பின்வாங்கி கணக்கிடும்போது, நமது பிரபஞ்சம் சுமார் 1379.7 கோடி ஆண்டுகள் பழமையானது என 2021ல் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இங்கேதான் விஷயம் சுவாரசியமாகிறது.
2013ல் கண்டுபிடிக்கப்பட்ட Methuselah Star (HD 140283) எனும் நட்சத்திரம், கணிப்புகளின்படி சுமார் 1446 கோடி ஆண்டுகள் பழமையானது. அதாவது, அது பிரபஞ்சத்தின் தற்போதைய வயதைவிட முதியதாக தோன்றுகிறது! இது எப்படி சாத்தியம்?
மேலும், நமது பிக் பேங்க் நடந்த 30 கோடி ஆண்டுகளுக்குள், ஏற்கனவே முதிர்ச்சியடைந்த பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் மண்டலங்கள் இருந்துள்ளன என்பதும், இந்த குழப்பத்தை தீவிரப்படுத்துகிறது. பிரபஞ்சம் இவ்வளவு வேகமாக உருவாக முடியுமா?
இந்நிலையில், பழைய ஓர் ஆய்வுக்கோட்பாடு மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது. அது Fritz Zwicky என்கிற வானியலாளரின் “தயார்ட் லைட்” கோட்பாடு. அதன்படி, ஒளிக்கதிர்கள் (photons) நீண்ட தூரம் பயணிக்கும்போது அவை ஆற்றலை இழக்கின்றன, எனவே தூரவிரைந்த விண்மீன்களில் காணப்படும் சநனளாகைவ (சிவப்பு மாற்றம்) அவற்றின் வேகமான நகர்வால் அல்ல, ஒளிக்கதிர்களின் ஆற்றல் இழப்பால் ஏற்படுகிறது.
இக்கோட்பாட்டினைப் பயன்படுத்தி தற்போது சில வானியலாளர்கள் ஒரு புதிய விளக்கத்தை முன்வைக்கிறார்கள். அதன்படி, பண்டைய விண்மீன்களின் உருவாக்கம் ஒரு சில கோடி ஆண்டுகள் அல்ல, பல்லாயிரம் கோடி ஆண்டுகள் ஆனது என்றும், அதனால் தான் அவை இவ்வளவு விரைவாக முதிர்ந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த கோட்பாடு பிரபஞ்சத்தின் உண்மையான வயது 2670 கோடி ஆண்டுகள் என நமக்குத் தெரிவிக்கின்றது!
இது சாத்தியம் என்றால், நம்முடைய காலக் கணிப்பு முறைகளில் பெரும் திருத்தங்கள் தேவைப்படும்.
இது விஞ்ஞானத்திற்கான ஒரு முக்கிய நினைவூட்டல்! நாம் அறிந்திருக்கிற விஷயங்கள் நிலையானவை அல்ல. புதிய தரவுகள், வலுவான கேள்விகள், மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் தான் அறிவியலை முன்னோக்கி அழைத்துச் செல்கின்றன.
ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், நாம் ஒவ்வொரு இரவிலும் பார்க்கும் cosmic microwave background (CMB) என்பது, பிக் பேங்க் நடந்த 380,000 ஆண்டுகள் பிறகு வெளியான ஒளி. அதனை பார்ப்பதன் மூலம் நாம் நேரடியாக, பிரபஞ்சம் உருவான தருணத்தை “கண்ணால்” காண்கிறோம்!
இந்த அனுபவம் நம்மை அச்சமூட்டும் அதிசயத்துக்குள் இழுத்துச் செல்கிறது. நாம் வாழும் பிரபஞ்சம், இன்னும் மிகப் பழமையானதா? நம் அளவீடுகள் தவறாகவா இருக்கின்றன? இவை அனைத்தும் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய கேள்விகளாகவே உள்ளன.
2025 இல் சந்திரனில் கால் வைக்கும் முதல் பெண்ணை நீங்கள் காணத்தான் போகின்றீர்கள். அதுபோல் முதல் விண் வெளி ஹோட்டல் 2027 இல் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் முதல் விண்வெளி ஹோட்டல், வாயேஜர் ஸ்டேஷன( Voyager Station;,) 2027 இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியிலிருந்து சுமார் 1,200 மைல்கள் உயரத்தில், குறைந்த பூமி சுற்றுப்பாதையில் அமைந்திருக்கும், மேலும் இது ஆர்பிட்டல் அசெம்பிளி கார்ப்பரேஷனால் வடிவமைக்கப்பட்டது. இந்த ஹோட்டலில் 400 விருந்தினர்களுக்கான அறைகள், பார்க்கும் தளங்கள், ஒரு சினிமா, ஒரு ஸ்பா, ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் பல உள்ளன. இது செயற்கை ஈர்ப்பு விசையை உருவாக்க சுழலும், (It will also spin to create artificial gravity, simulating about a sixth of Earth’s gravity) பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கை உருவகப்படுத்தும்.
அனைத்துக்குமே ஒரு விஞ்ஞானப் பதில் ஒன்று இருக்கலாம். ஆனால், அதைப் பெற நாம் நிறையக் கற்க வேண்டும், அதை விட எல்லாவற்றிற்கும் மேலாக, கேள்விகளை கேட்கத் தயங்கக்கூடாது. என்ன்…? நான்; சொல்வது சரி தானே?
![]()
