பெண்களின் பாரிய பிரச்சினைகள்

0
vm255

  • ஆணுடைய பலவீனத்தைச் சாதகமாகப்
  • பயன்படுத்துகின்ற பெண்களும் உண்டு!
  • கௌசி சிவபாலன் (யேர்மனி)
    பெண்களின் பாரிய பிரச்சினைகளைத் தொடர்ச்சியாகப் பார்க்கின்றோம். சென்ற மாதம் பெண்களுக்குப் பெண்களே பிரச்சினை என்றும் ஆண்பிள்ளைகளில் அதீத பாசம் வைத்திருக்கின்ற தாய்மாரினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களைப் பற்றியும் பார்த்தோம். இன்று

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினை பற்றியும் இன்று ஆராயலாம் என்று இருக்கின்றேன்.
உலகத்தில் பெண்களுக்குப் பிரச்சினை எல்லாம் ஆண்களாலேதான் வருகின்றது. ஆண்களே பிரச்சினைதான் என்று கூறுகின்ற இளந்தலைமுறைப் பெண்களைத்தான் நாம் அதிகமாகக் காண்கின்றோம். ஆண்களே இல்லாத உலகில் வாழ வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஜெர்மனியிலே ஒன்றுவிட்ட ஒருநாளுக்கு ஒரு பெண் இறப்பதற்கு ஆண் காரணமாகின்றான் என்று புள்ளிவிபரம் கூறுகின்றது. பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்தல், தற்கொலைக்குத் தூண்டுல், ஆத்திரம் கொண்டு அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்தல் என்று பல காரணங்களால் உலகநாடுகளில் பெண்கள் இறக்கின்றார்கள். பெண்ணின் முள்ளந்தண்டை உடைத்து படுக்கையில் போட்டு வைக்கும் ஆண்களின் மிருகக் குணத்தையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இயல்பாகவே வேட்டைக் குணம் கொண்ட ஆடவர்கள், யுகம் யுகமாகத் தொடருகின்ற மரபணுக்களைத் தாங்கி வருவதனால், தம்முடைய கோபம், ஆத்திரம் என்னும் குணத்திலிருந்து விடுபட முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

பெண்கள் சில இடங்களில் பேசுவதற்கு ஆசைப்பட்டாலும் பேச்சு சுதந்திரம் கிடைப்பதில்லை. ஏன் வீடுகளில் எத்தனை பெண்கள் தாம் விரும்பியதைப் பேசக்கூடியதாக இருக்கின்றது. உனக்கு ஒன்றும் தெரியாது. பேசாமல் போ என்றுதான் பல வீடுகளில் பெண்கள் நிலைமை இருக்கின்றது. பேச்சு உரிமை கிடைக்கின்ற போது கூட சில சந்தர்ப்பங்களில் ஊமையாகி விடுகின்றார்கள். பொருத்தமில்லாத துணையைப் பணம் இருந்தால் வாழ்வு இனிக்கும் என்று திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றார்கள். இதனாலேயே பெண்ணும் ஆணும் இணைந்து சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமை இல்லாமல் போகின்றது.

செங்கமல வாள்விழியாட்
சேர்க்கக் கருதுமுவன்
மங்கை தனக்கேற்ற
மணவாளனோ புகலாய்
நங்கை நிலைக்கேற்க
நடக்கவலனோ புவியில்
கொங்குமலர் மாலை
குரங்கிற் களிப்பாரா
கோதையிட மிம்மாற்றங்
கூறுதியாற் பைங்கிளியே

என்று கிளியிடம் தூது சொல்லி வருமாறு தலைவியிடம் அனுப்புவதாக இப்பாடல் அமைகின்றது.

பணத்துக்காகப் பெண்களைப் பேதையர்க்குத் திருமணம் செய்து கொடுத்து மண்ணில் அவர்கள் வாழுகின்ற காலமெல்லாம் வருந்தித் துன்புறுவதற்கு புலியின் வாயில் மானைக் கொடுக்கும் தந்தையர்கள் நரகத்திற்குரியவர்கள் என்றும் கூட்டுக்குள் கிளியை அடைத்து வைப்பதுபோல் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து பூட்டித் திறக்கும் பொருளாகப் பெண்ணை நினைக்கின்றார்கள். உண்பதும், உறங்குவதும், ஊர்க்கதைகள் பேசுவதும் பெண்கள் தொழில், பெண்களுக்குத் தமது கணவனே கடவுள், பெண்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு இல்லை என்று உளமார எண்ணுகின்றார்கள். ஆனால், பெண்கள் இல்லாவிட்டால் வீடு ஒரு காடாகும். பெண்கள் இருந்தால் காடும் ஒரு வளம்பொருந்திய வீடாகும். ஆனால் பெண்களோ இந்த உலகத்தில் வருந்துகின்றார்கள் என்பதை தத்தைவிடு தூதிலே சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.

மாதரார் தாமிலரேல்
மனையும் வனமா நல்
மாதரார் தாமுளரேல் வனமும் வளமனையாம்
மாதரன்றோவிவ் வாழ்விற் கருங்கலமாம்
மாதரன்றோ
வருந்துலரிம் மாநிலத்தில்
மாது சிரோன் மணிக்கிவை நீ
வகுப்பாய் பசுங்கிளியே

ஆனாலும் தற்காலத்தை எடுத்துப் பார்க்கின்ற போது அது எதிர்மாறாக நடப்பதையும் அவதானிக்க் கூடியதாக இருக்கின்றது.
ஆணுடைய பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற பெண்கள்:

ஆணுடைய பலவீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற பெண் வர்க்கம் அவர்களை அடக்கி ஆள்வதையும் நாம் புலம்பெயர்ந்த மண்ணிலே அறியக்கூடியதாக இருக்கின்றது. பெண்ணின் பெருமைகள் எவ்வளவு இருந்தாலும் ஆண்களின் நிலைமையையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனையே நான் வெற்றிமணியில் கத்தியின்றி இரத்தமின்றிக் கொலை என்று எழுதியிருக்கின்றேன். தற்கால ஆய்வுகளின் படி ஆண்கள் நீண்ட பயணத்தை மேற்கொள்வதாலும், அதிகமாகப் பெண்களைத் தங்கி வாழ்வதாலும், பெண்களுக்கு அடங்கிப் பின்னே செல்வதாலும் ஆண்களுக்கு ஆண்மையைக் கொடுக்கின்ற ரெஸ்ரோஸ்ரிரோன்; (வுநளவழளவநசழநெ) என்னும் ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால் தற்காலத்தில் ஆண்களின் வலிமை குறைந்த தோற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் திரைப்படங்களில் ஆண்களை தீவிர வீரர்களாகக் காட்ட முற்படுகின்றார்கள். அதனையும் மீறி நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற கதாபாத்திரங்கள் பெண்மையின் வீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் திரையில் தோன்றுகின்றார்கள். இவர்களை விடச் சிறப்பாக மாவல்(ஆயசஎநட) போன்ற அமெரிக்க திரைப்படங்கள், ஹிந்தி, கொரியா திரைப்படங்கள் பெண்களின் அதீத வீரத்தை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்க முன்வருகின்றார்கள். ஆண்களின் அச்ச உணர்வுகளும், இயலாமையும் ஒரு சந்தர்ப்பத்தில் நிலைதடுமாறுகின்றது.

நலிவடைந்த ஆண்வர்க்கம் தவறான வழிமுறைகளைக் கையாள்வது அதிகரித்துள்ளது. பெண்களை ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், உண்மையை மறைத்தல், பெண்கள் அறியாமல் அவர்களை தவறான முறையில் புகைப்படங்கள் எடுத்தல், பெண்களின் படங்களை எடுத்து போட்டோ சொப் மூலம் மாற்றி தவறான முறையில் சமூகவலைத் தளங்களில் இடல் போன்ற தகாத காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் உலகம் முழுவதும் போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற ஆண்கள், பெண்களை மானபங்கப்படுத்தி உடல் முழுவதையும் சீரழித்து கொலை செய்கின்ற வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களின் உறுப்புக்களினாலும், ஆடைக் குறைப்பினாலும் ஈர்க்கப்படுகின்ற காரணத்தினாலேயே ஆண்களின் வன்புணர்வு ஏற்படுகின்றது என்று குறைகூறுகின்ற மக்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு ஏன் அவ்வாறான வன்புணர்வு எண்ணம் தோன்றுவதில்லை ஆண்களுக்கு மட்டுமே அந்த எண்ணம் ஏற்படுகின்றது என்று கேள்வி எழுப்புகின்றனர்.இவ்வாறான உடற்கவர்ச்சியானது மறைத்து வைப்பதனாலேயே ஏற்படுகின்றது என்று எதிர்த்து நிற்கும் பெண்கள் தற்போது உடலின் அங்கங்கள் வெளிப்படுகின்ற ஆடைகளை அணிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது கலாசார சீர்கேடாகப் பேசப்பட்டாலும், மனிதர்களின் ஆரம்ப காலகட்ட நிலைக்கு எம்முடைய எண்ணப் போக்கைக் கொண்டு செல்கின்றது. மேலாடைக்காக உண்ணாவிரதம் இருந்ததும் பெண்களே, மேலாடை ஆண்களுக்கு மோகத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆடையில்லாது, அரைகுறை ஆடையுடனும், மார்புக்கச்சையை மட்டுமே அணியத் தொடங்கியுள்ளதும் பெண்களே.அவரவர் மனநிலைக்கு ஏற்றபடி இவ்வாறான ஆடைக்கலாசாரத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். திருமணம் பற்றி பெண்கள் கொண்டிருக்கின்ற கருதுகோளை அடுத்த மாதம் பார்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *