கனடா-மட்டக்களப்பு நட்புறவுப்பண்ணையில் முருங்கை பதனிடும் ஆலை திறப்பு

0
vm259

இவரை 2,000-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள்

“Made in Mullaitivu உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம்”

கனடிய தமிழர் பேரவை (CTC) மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையம் (NEED Center) இணைந்து 2025 பிப்ரவரி 27,மட்டக்களப்பில் முருங்கை பதனிடும் ஆலையை திறந்து வைத்துள்ளது. இது கனடா-மட்டக்களப்பு நட்புறவுப்பண்ணையின்-கைல் டி.ராஜா திட்டத்தின் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வேளாண்மை துறையை வலுப்படுத்துவதோடு, முருங்கை உற்பத்தியை அதிகரித்து உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகமான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க உதவும்.

2024 பிப்ரவரியில் திறக்கப்பட்ட கனடா-மட்டக்களப்பு நட்புறவுப்பண்ணை – கைல் டி. ராஜா திட்டம் தற்போது கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதன் மூலம் முருங்கை உற்பத்தி உயர்ந்துள்ளதுடன், பலருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளது. முருங்கை ஊட்டச்சத்து மிகுந்ததும் வர்த்தக ரீதியாக அதிக மதிப்புள்ளதுமான ஒரு பயிராக இருப்பதால், இந்த இரண்டாம் கட்டமாக முருங்கை இலையை பதனிடும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற இந்த புதிய பதனிடும் ஆலையின் திறப்பு விழா பாரம்பரிய தமிழ் வரவேற்புடன் நடைபெற்றிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, CTC நிர்வாக இயக்குநர் டாண்டன் துரைராஜா, மூத்த உதவி அரசாங்க அதிபர் திருமதி முகுந்தன், NEED மையத் தலைவர் யோகேஸ்வரன் மயில்வாகனம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் சரவணபவன் தியாகராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் உதவியாளர் விமலநாதன் மதிமேனன் ஆகியோர் இணைந்து முருங்கை பதனிடும் ஆலையை திறந்து வைத்தனர். இந்த திட்டம் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என பலரும் பாராட்டினார். முருங்கை தூள் தயாரிப்பு அதிகரிக் கப்படுவதன் மூலம், சர்வதேச சந்தையில் தமிழ் விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

கனடிய தமிழர் பேரவையின் உதவியுடன் வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையம் நடத்திவரும் “Made in Mullaitivu உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம்” காட்சியறை முல்லைத்தீவு புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இயங்கிவருகின்றது.

நம் தாயக உள்ளூர் ஊற்பத்தியாளர்களால் தரமான வகையில் உருவாக்கப்பட்ட அனைத்துவிதமான உள்ளூர் பொருட்களையும் சிறந்த விலையில் நீங்கள் இங்கு பெற்றுக்கொள்ள முடியும். தனித்துவமான நம்மக உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்களை வாங்குவதன் மூலமும் அவற்றை ஆதரிப்பதன் மூலமும் தாயக உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தையும் சிறந்த சந்தை வாய்ப்பையும் அவர்களிகு பெற்றுக் கொடுக்க முடியும். இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து புலம்பெயர் உறவுகளையும் முல்லைத்தீவு புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள “ஆயனந in ஆரடடயவைiஎர உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம்” காட்சியறைக்கு சென்று பார்வையிடுமாறும் அங்குள்ள எம் தாயக உற்பத்திப்பொருட்களை வாங்குமாறும் அதை அனைவரிற்கும் பரிந்துரை செய்து ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த செயற்திட்டம் எம்மவர் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மாற்றும் வல்லமையுள்ளது. அதில் நாம் அனைவரும் ஒரு பங்கை எடுக்குக்கொள்வோம். எமது விடுமுறைகளை உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கவும் பயன் படுத்துவோம். கைகொடுக்கும் உறவுகளுக்கு எமது வாழ்த்துகள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *