என்னோட விருமாண்டி இங்கேதான் இருக்காரு என்ற அன்னலட்சுமி!
தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் 18.04.2025 சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் வெளியானது. இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அழகாய் ஜொலித்த அன்னலட்சுமி: விருமாண்டி படத்தில் அன்னலட்சுமியாக நடித்திருந்த அபிராமியை பார்த்தது ரசிகர்கள் அனைவரும் விருமாண்டி அன்னலட்சுமி என கத்த தொடங்கினர். அப்போது அழகாய் ஜொலித்த அபிராமி, என்னோட விருமாண்டி இங்கேதான் இருக்காரு என தெரிவித்ததும் கமலின் முகம் புன்னகையில் மலர்ந்தது. மேலும், அரங்கமே அதிர ரசிகர்கள் கைதட்டினர். பின்னர் பேசிய அபிராமி, இங்கிலீஸ்ல பேச சொன்னாங்க. தமிழ்நாட்டுக்கு வந்துட்டு தமிழ் ஆடியன்ஸ் முன்னாடி எப்படி ஆங்கிலத்தில் பேச முடியும் என்றார். நிஜமாவே கை நடுங்குது என்ன சொல்றதுன்னு தெரியலை. நான் பார்த்து வளர்ந்த ஜாம்பவான்கள் முன்னாடி நான் நிற்கிறேன். நான் 11 வயதில் நடிக்க வந்தேன். நிஜமாக என் கனவு நிறைவேறியிப்பதை உணர்கிறேன் என அபிராமி தெரிவித்தார்.
02.
மாதவன் – நயன்தாரா நெஞ்சுல படுத்துக்கொண்ட காட்சி நெஞ்சைத் தொட்டது.
மாதவன் – நயன்தாரா கெமிஸ்ட்ரி: இதற்குமுன் மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் எப்படி இப்படியொரு ஜோடி மிஸ் ஆனது என ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு டெஸ்ட் படத்திலும் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்களை அந்தளவுக்கு ஈர்த்துள்ளது. விக்ரம் வேதா படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் – மாதவன் கெமிஸ்ட்ரிக்கு பிறகு மாதவனுக்கு சரியான ஜோடியாக டெஸ்ட் படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் என்கின்றனர்.
நெஞ்சுல படுத்துக்கொண்டு: நயன்தாராவை மாதவன் போட்டு அடிப்பதும், மாதவனை நயன்தாரா போட்டு அடிப்பதுமென இருவருக்கும் சமமான வாக்குவாதங்கள் மற்றும் அடிதடி காட்சிகள் கொடுக்கப்பட்டாலும், அதையும் தாண்டி மாதவனை காதலுடன் நயன்தாரா கட்டிப்பிடிப்பதும், அந்த நைட் பிரியாணி மேட்டரும், மாதவன் நெஞ்சின் மேல் நயன்தாரா படுத்திருக்கும் அந்த சீனும் ரசிகர்களை ரொம்பவே டச் செய்துவிட்டது. இருவரும் சேர்ந்து இன்னும் சில படங்களிலும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர்.
அஜித்தின் அடுத்த இயக்குநர்
அஜித் நடித்து அண்மையில் வெளிவந்த”குட் பேட் அக்லி”படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜித் கொடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை மைத்ரி நிறுவனமே தயாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். இதற்கிடையில் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு இயக்குநர் ஒருவருக்குத் தரலாம் என்றும் அந்த நிறுவனம் விரும்புகிறதாம். பொதுவாக ஒரு இயக்குநர் அல்லது ஒரு தயாரிப்பு நிறுவனம் தனக்குப் பிடித்துவிட்டால் அவர்களுடன் அடுத்தடுத்து படங்கள் செய்வார்
சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி
சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில், அதாவது நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.மேலும், இந்த படத்தை கார்த்தியின் பல படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.அது மட்டும் இன்றி, பையா மற்றும் தோழா படங்களுக்கு பிறகு, நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் கார்த்தி ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
![]()
