அவன் மைசூர் மன்னன் ஆனான். நான் வெறும் சைபர் ஆனேன்.
-மாதவி –யேர்மனி
மைசூர் மகராஜாவின் அரண்மனை முன்பு நானும் அவளும். அவளுக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்வேன். கேட்டால் அது என் விருப்பம் தனி என்பேன். சில நேரம் சண்டையில் என்ன பார்த்தோம் என்பதே மறந்தும் போகும்.
எதையுமே ஒருவருக்குகொருவர் பிழை என்று தெரிந்தாலும் விட்டுக்கொடுக்காத விசித்திரமான காதல் எமது.
ஒருவன் உல்லாசப் பயணிகள் மத்தியில் அவன் எங்களை விடாமல் பின்தொடர்ந்த வண்ணம் இருந்தான். எம்மை ஏமாற்றிப்பிழைப்பவன் அவன். அவனுக்கு இடம் கொடுத்தால் எம்மை மடக்கிப்போடுவான், திரும்பி பார்க்காதே என்று அவளையும், எச்சரித்தபடி அவனை அசட்டை பண்ணியதாக நடந்தோம். இதில் மட்டும் எப்படிக் கருத்தொருமித்த காதலர் ஆனோம் என்பது புரியவில்லை.
அவன் எதோ வழியில் எம்மை குறுக்கிட்டு, நிறுத்தி இந்த செப்புவளையலை வாங்குங்கள் 500 ரூபாதான் என்றான். நாம் ‘இது தேவை இல்லை எமக்கு“ என்றோம். அவன் விடுவதாக இல்லை.
எமக்கு படங்களில் வரும் வளையல்காரன் ஞாபகம் வந்தது.ஆனால் அவன் போல் இவன் தலைப்பா கட்டி இல்லை. ஒல்லியாய் காய்ந்துபோய் இருந்தான்.
நாம் வேகமாக நடந்தோம். அவன் மீண்டும் குறுக்கிட்டு இந்த வளையலை நீங்கள் சொல்லும் விலைக்கு தருகின்றேன். எனக்குப் பணம் அவசியம் தேவை என்றான். அவன் முகத்தில் ஒரு தேவையின் ஏக்கம் தெரிந்தது. இருந்தாலும் இவங்கள் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்ற முத்திரை எம்மனதில் ஆழக்குத்தப்பட்டு விட்டதால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லலை.
அவன் திரும்பிவிட்டான். நாம் திரும்பித் திரும்பிப் பார்த்தோம். அவனைக் காவில்லை. அந்த ஏக்கமான முகம் மட்டும் எமக்குத் திரும்பத் திரும்ப தெரிந்த வண்ணமே இருந்தது.
அரண்மனை பார்த்து முடித்துவிட்டு திரும்பினோம். அதே முகப்பில் அவன் நின்றான். என்னவள் சொன்னாள் ‘அவன் பாவமாக இருக்கிறான் ஒரு 200 ரூபாவை சும்மா கொடுத்துவிட்டு வாருங்கள்“ என்று.
நான் அவனிடம் சென்றேன் 300 ரூபாவை கொடுத்தேன். அவனுடைய அந்த முகத்தில் சோகம் இருந்தது ஏக்கம், இருந்தது ஆனால் ….அவன் சொன்னான் எனக்கு பொருள் விற்காமல் காசு வேண்டாம்.
இரக்கத்தால் வேண்டாம். „அது என் காதலிக்குப்;பிடிக்காது‘ என்றான்.
அவன் என்னை விட்டு வேகமாக அடுத்த சுறுறுலாப் பயணியிடம் சென்றான்.
அவன் மைசூர் மன்னனானன் நான் சைபர் ஆனோன்.
இருபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவன் முகம் என்நெஞ்சில் ஆழப்பதிந்தே உள்ளது. அவனை என்வாழ்வில் என்றுமே சந்திக்மாட்டேன் என்பது மட்டும் நிச்சயமாக இந்த வில்லனுக்குத் தெரியும்.
![]()
