முப்பத்தோரு ஆண்டுகள் !

0
09.page.sivakumaran.xviyar

வரலாற்றின் கல்வெட்டாய்
வழுவாத சொல்வெட்டாய்
வெற்றிமணியின்
மற்றுமொரு மைல்கல் !

தேசங்களின் எல்லை கடந்து
நேசங்களின் அன்பைக் கடைந்து
இலக்கியம் சமைத்த
இனிமையின் பயணம் !

கவிதைக் கம்பளங்களும்
கட்டுரைக் கைத்தடிகளும்
சிறுகதைகளும் சுவைத்த
கதம்பத்தின் களியாட்டம் !

வன்மத்தின் எல்லுடைத்து
பிரிவினையின் பல்லுடைத்து
அன்பினையே தருகின்ற
விருந்தின் பரிமாற்றம்

அன்பொழுகும் சிவகுமரன்
அயராது இழுத்து வந்த
சமத்துவ சமுதாய
இலக்கியத்தின் தேரோட்டம்

உள்ளூர வாழ்த்துகிறேன்.
நில்லாமல் பயணிக்க !

அன்புடன்
சேவியர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *