தனிநிலை வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய சில சவால்கள்:
தீபா ஸ்ரீதரன் (தைவான்)
மே மாத தொடர்ச்சி….
முந்தைய காலங்களில், திருமணக் கட்டமைப்புகள் பெண்களுக்கே அதிகமான உளவியல் மற்றும் வீட்டுப் பொறுப்புகளைத் திணித்தது. இன்று, பெண்கள் சமரசங்களை விடச் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். மேலும் மருத்துவ முன்னேற்றங்கள், குழந்தைப்பேற்றுக்கான வாய்ப்புகளை வெவ்வேறு வழிகளில் அதிகரிக்கச் செய்துவிட்டது. பொருளாதார ரீதியாகப் பெண்கள் தனித்து இயங்க வாய்ப்புகள் அதிரித்துவிட்டன. எனவே சில பெண்கள் குழந்தைகளிடம் பெற்றுக்கொள்வதற்குத் திருமணம் மற்றும் உறவுகள் அவசியம் இல்லை என்ற கருத்து குறைந்து வருகிறது. முற்காலத்தில், உறவுகள் என்பது பெண்களைப் பொறுத்தவரையில் வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குழந்தை வளர்ப்பைச் சுற்றியே இருந்தன. அதே நேரத்தில் ஆண்கள் தங்களுக்கான நேரத்தைப் பெரும்பாலும் சமூக வாழ்க்கையைத் தொடர்வதற்கே செலவழித்தனர். அதுவும் வீட்டிற்கு வெளியே தனித்துவமாக அதைப் பராமரித்து வந்தனர். எத்தனை ஆண்கள் தங்கள் சமூக வாழ்க்கை குறித்த அனுபவங்களைத் தங்கள் மனைவியுடனோ காதலியுடனோ பகிர்ந்து கொண்டார்கள் என்பது கேள்விக்குறியே.
ஆனால் பெண்கள் இன்று அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை முறை, பயணம், பொழுதுபோக்கு, மற்றும் தனிமனிதஃ சமூக விழுமியங்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் தங்கள் கருத்துக்களை வலுவாக வெளிப்படுத்துகிறார்கள். இதனால் உறவுகள் முன்பு போல எளிமையாக இல்லாமல், மிகவும் சிக்கலானதாக மாறியிருக்கின்றன. தங்கள் கடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது இவை போன்றவற்றிலும் கருத்தியல் ஒற்றுமை இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். பல ஆண்களால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பல பெண்கள் தங்கள் சொந்த வளர்ச்சி மற்றும் தொழில்ஃவேலை முன்னேற்றத்தை முன்னிலைப் படுத்துகிறார்கள். இது ஒரு விதத்தில் பல ஆண்டுக் காலமாகச் சேர்த்து வைத்த உணர்வு அழுத்தத்தினின்றும் வெளிவரும் முயற்சியின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
இன்றைய தலைமுறை ஆண்களோ இளம் வயதிலேயே தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதிகளவில் தங்கள் நேரத்தை முதலீடு செய்யப்படுகிறார்கள். தொழில்ஃ வேலை வளர்ச்சி பெரும்பாலும் உறவுகளை விட முன்னுரிமை பெற்றிருக்கிறது. சில ஆண்கள் முற்றிலும் தனிமையான வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்றாலும், பெரும்பான்மையானவர்கள் ஓபன் ரிலேஷன்ஷிப்பை நாடுகிறார்கள் (பெரும்பாலும் திருமணத்தின் கட்டமைப்பிற்கு வெளியே).
இதற்கான முக்கியக் காரணங்களை ஆராய்ந்தால் திருமணம் மற்றும் விவாகரத்திலிருக்கும் சட்டச் சிக்கல்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையுடன் தொடர்புடைய பொருளாதார நெருக்கடியாக இருக்கின்றன. திருமணம் நீடிக்காத பட்சத்தில், விவாகரத்துடன் இணைந்து வரும் ஜீவனாம்சம், குழந்தை ஆதரவு மற்றும் பிற பொருளாதாரக் கடமைகள் என்பது தலைமுறை தலைமுறையாக ஆண்கள் மீது சுமத்தப்படும் பெருஞ்சுமைகளாகவே இருக்கின்றன. ஜீவனாம்சம் என்ற பெயரில் ஓர் ஆணின் பெரும்பான்மையான உற்பத்தி காலம் ( ( productive period ( carrier/family setting/ reproduction) முழுவதும் உறிஞ்சப்படுவதைப் பலர் வாழ்வில் பார்க்கிறோம். மேலும், இன்றைய ஆண்கள் பலர் ஒருதார மணம் இல்லாத (non monogamous), மன அழுத்தமில்லாத உறவுகளுக்கான தங்கள் விருப்பத்தைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கின்றனர். இது உறவு விதிமுறைகளின் பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது (அங்கு உணர்ச்சி மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் பெருகிய முறையில் தனிப்பட்ட தேர்வுகள் வடிவமைக்கப்படுகிறது )
சமீப வருடங்களில் பாலினங்கள் சார்ந்த பொறுப்புகளும் ( gender roles) பொதுவாக மாறி வருகின்றன, இது பல ஆண்களைப் பயமுறுத்துகிறது. அவர்கள் தங்கள் இணையர்கள் பொருளாதார ரீதியாக ஆதரவளிப்பதை விரும்பினாலும், இத்தனை வருடங்களாகப் பெண்களுக்கானது என முத்திரை குத்தப்பட்ட சில பொறுப்புகளையும் வேலைகளையும் மனதளவில் இன்னும் ஏற்கத் தயாராகவில்லை என்றே நினைக்கிறேன். இவை போன்ற பல காரணங்களால் இன்றைய இளைய தலைமுறையினர் தனிமை வாழ்க்கையைப் பெரிதும் விரும்புகிறார்கள். அடுத்து எல்லாவற்றையும் போலவே தனிமை வாழ்க்கையிலும் சில நன்மைகளும், சில சவால்களும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.
நன்மைகள் :
சுதந்திரம்- சமரசம் இல்லாமல் நம் வாழ்க்கை முடிவுகளையும் தேர்வுகளையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். தனிப்பட்ட வளர்ச்சிக்கு அதிக நேரம் – பொழுதுபோக்குகள், தொழில், பயணம் மற்றும் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தலாம். நேர மேலாண்மையை எளிமையாகக் கையாளலாம். குறைவான உணர்ச்சி மன அழுத்தம் – உறவு மோதல்கள், முறிவுகள் அல்லது உறவுச் சிக்கல்களில் ஏற்படும் சுமைகளைத் தவிர்த்துவிடலாம்.
பொருளாதாரக் கட்டுப்பாடு – ஒரு துணைக்கான செலவுகள் இல்லாமல் நம் பணத்தை நமக்கான தேவைகள் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வகிக்கலாம். வலுவான நட்பு மற்றும் சமூக வாழ்க்கை – அர்த்தமுள்ள நட்புகள் மற்றும் சமூக வலைப்பின்னல்களை உருவாக்க அதிக நேரம் ஒதுக்கிக்கொள்ளலாம்.
தனிமை வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய சில சவால்கள்:
வாழ்க்கைத் துணை இல்லாதது சில நேரங்களில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர வைக்கும். சமூக ஊடகங்களும் நண்பர்களும் உணர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றாலும், துணை இல்லாமல் மனிதர்கள் இன்னும் தங்கள் பாலியல் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்துகொள்ளப் பரிணாமமடையவில்லை. கே{வல் உறவுகளில் ஈடுபட விரும்பாதவர்களுக்குப் பாலியல் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.
சமூக அழுத்தம்ரூகளங்கம்- சில கலாச்சாரங்களில்,தனித்து வாழ்தல் இன்னும் குற்றமாகவே விரும்பத்தகாததாகவே பார்க்கப்படுகிறது. அவர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்த அவதூறான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
அதிகப் பொறுப்பு – பொருளாதாரம், வீட்டு வேலைகளை நிர்வகித்தல் மற்றும் முக்கிய முடிவுகளை நிர்வகிப்பது என் அனைத்தையும் தனியாகச் செய்வது காலப்போக்கில் (மனம்ஃ உடல்) சோர்வடையச் செய்யும்.
வயதான காலத்தில் தனிமை சவாலாக மாற வாய்ப்பு இருக்கிறது – நீண்ட காலமாகத் தனிமையில் இருப்பவர்கள், மனத்திற்குத் திருப்திகரமான செயல்களில் தீவிரமாக ஈடுபடவில்லை என்றால், நேரத்தை சமாளிப்பது கடினமாகி விடும். உடல் தளர்ச்சியும் மனத் தளர்ச்சியும் சேரும்போது புறக்கணிக்கப்பட்ட ஓர் உணர்வு ஏற்படும். அப்போது ஒரு துணை இல்லேயே என்ற சுயபரிதாபத்துக்குள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
இவை அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கையில், என்னைப் பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்ணோ ஆணோ தனியாக வாழ்வதென்பது கடினமானதொன்றும் இல்லை என்றே நினைக்கிறேன். நேரம் மற்றும் உணர்வுகளைச் சாமர்த்தியமாகக் கையாளத் தெரிந்து கொண்டால் தனிமை வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே வாழலாம். அதுமட்டுமின்றி வருங்காலத்தில் இப்படி வாழ்பவர்கள் எண்ணிக்கை கூடும் பட்சத்தில் நாம் தனித்து இருக்க மாட்டோம். (றுந றழn’வ டிந யn ழனன அயnஃறழஅயn ழரவ) தனி மனிதர்கள் இணைந்தியங்கும் கூட்டத்தில் வலிமை மிக்கத் தனிப் பாலினமாகவே இருப்போம் என நம்புகிறேன்.
![]()
