தாய்மையின் அர்த்தம் அவள் செயலில்

0
vm271

கொத்மலையில் கோர விபத்து!

பு.சௌமியாராஜனி.இலங்கை.
தாயின் அன்பு தன்னலமற்றது,தியாகமற்றது. இதனை நிருபித்து தரும் பல சம்பவங்கள் உலகெங்கிலும் நிகழ்ந் துள்ளன. அந்த வகையில் விபத்தில் தன் உயிரை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய தாயின் நிகழ்வு, தாய்மையின் உண்ணதத்தை மேலும் ஒரு முறை உணரச்செய்கிறது.

கடந்த 11.05.2025; திகதி அன்னையர் தின கொண்டாடத்தில் முழு நாடும் லயித்திருந்த வேளை கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. கொத்மலையில் கெரண்டியெல்ல பகுதியில் நிகழ்ந்த ஒரு சோகமான பேருந்து விபத்தில்;, ஒரு தாயின் இறுதி கட்ட தைரியமும் தன்னலமற்ற தியாகமும் தனது 9 மாத குழந்தையின் உயிரை காக்க முக்கிய காரணமாக இருந்தது. கதிர்காமத்திலிருந்து குருநாகலைக்கு செல்வதற்காக புறப்பட்ட இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று கம்பளை வீதி வழியாக பயணித்து கொண்டிருந்த போது விடியற்காலை 4.30 மணியளவில் கெரண்டியெல்ல பகுதியில் சாரதியின் உடல்சோர்வு, தூக்க கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி 350 அடி பள்ளத்தில் வீழ்ந்தது. அப்பேருந்தில் பயணித்த சுமார் 75 பயணிகளின் கனவுகளையும், தூக்கத்தையும், ஏக்கத்தையும், காதலையும் சுமந்து வந்த பேருந்து ஒரு கணப்பொழுதில் பள்ளத்தின் கீழே கிடந்தது. பல சந்தர்ப்பங்களில் ஒரு கணப்பொழுதில் ஏது நடந்து விடப்போகின்றது என்று பேசுவதுண்டு. கண்ணிமைப்பொழுதில் நடைபெறும் விபத்தில் காவு கொள்ளப்படும் இழப்புகளின் போது மட்டுமே ஒரு நிமிடத்தின் பெறுமதி தெளிவாகின்றது.

22 பயணிகள் விபத்தில் இறந்ததுடன் பலரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் தந்தையும் உட்பட 21 பேர் மரணித்தனர்; மீரியபெத்த எஸ்.கே டிவிசன் கொஸ்லாந்தையை சேர்ந்த திரு.திருமதி எஸ்.காசிராஜன், ஜி.தனலட்சுமி தம்பதிகளே அவர்களாவர். தனலெட்சுமியின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் குழந்தை காப்பாற்றப்பட்டது. பலத்த காயங்களுடன் தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தன்னுயிர் நீத்தாள். ஆனால் தான் மரணமடைவதற்கு முன்னர் தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் தான் அனுபவித்த உடல்வலிகளை பொருட்படுத்தாது தன்னையும் தனது குழந்தையையும் விபத்து நிகழ்ந்த போது சிக்கி கொண்ட நிலையில், உடலை சுற்றிப் பிழைத்து பிடித்து தன்னை ஒரு பாதுகாப்பு கவசமாக மாற்றியுள்ளார்.தன் குழந்தைக்காய் உயிர் தந்தாள் அந்த தாய். தன்னுடைய துணிச்சலான தியாகத்தை அந்த தாய் உலகத்திற்கே பறைசாற்றி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *