ஈழத்துத் தமிழியல்
த.சண்முகசுந்தரம் சுவடுகள் :
நூற்றாண்டுவிழாக்கால வெளியீடு
பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்
முன்னாள் துணைவேந்தர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
’மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள்’ என்ற தனித்துவமான தேடலின் வழி ஈழத்தமிழ் பண்பாட்டை எழுதிய முன்னோடிப் புலமையாளர் ,எங்கள் ஆசான் தமிழருவி மாவை த.சண்முகசுந்தரம்.
கலை வரலாறு ,சமய வரலாறு,ஆளுமைகள்,ஆக்க இலக்கியங்கள் என்ற வகைப்பாட்டுடன் அழகுற தொகுக்கப்பட்ட இந் நூலின் பொருண்மைகள் யாவும் எங்கள் பண்பாட்டுக்கருவூலங்கள் என்பேன். மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலைகள்,அவரது தனித்துவமான புலமைத் தேடலின் தடமானது. தந்தையார், தலைமை ஆசிரியர் தம்புச் சட்டம்பியார் வழி வாய்த்த அழகிய சமூகமயமாக்கம் இயல்பாகவே மக்கள் கலைகளின் வழி பண்பாட்டினை இனவரைவியல் பக்குவத்துடன் தேடி எழுதும் முன்னோடிப் புலமையாளனாக்கியது. அவருக்கு வாய்த்த பேராசான் கலையருவி க. கணபதிப்பிள்ளை, இறுதி வரை நெருக்கமாக வழிகாட்டிய துணை வேந்தர் சு.வித்தியானந்தன் மற்றும் அவர் நண்பர்களான கலையுலக ஆளுமைகளினால் ஆய்வுகளும் ஆக்கங்களும் செழுமை கண்டன.
ஆசிரியர்,அதிபர்,ஆய்வாளர்,ஊடகவியலாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர்,நாடகத் தயாரிப்பாளர் என பன்முக ஆளமையுடன் அவர் படைத்த ஆக்கங்கள் யாவுமே இன்றைய பண்பாட்டியல் கற்கை (ஊரடவரசயட ளுவரனநைள) அடிக்கோடிடும் மேலாண்மையில்லாத சமநீதிக் கருத்தியல் வழிப்பட்டன வாக கவனம் பெறுவன. பெரு மரபு (புசநயவ வசயனவைழைn),சிறு மரபு (டுவைவடந வசயனவைழைn) என்றவாறு அடுக்கமைவான ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் எழுத்துமுறையிலிருந்து மீண்டு அறிவார்ந்த முறையில் பண்பாட்டு வரலாற்றெழுத்தியலை (ஊரடவரசயட ர்ளைவழசழைபசயிhல) கட்டமைக்கும் காலப் பணியில் அவரது ஆய்வு அணுகுமுறைகளும் ஆக்கங்களும் நிறைந்த உள்ளொளியைப் பாய்ச்சுவன. தேசிய விழிப்புணர்வுக்கான எங்கள் மகாஜனக்கல்லூரி ஆசானின் ஈழத்து தமிழியல் தடங்களை அயரா உழைப்புடன் தேடித்தொகுத்த தமிழியல் ஆய்வாளர்கள் பா.மகாலிங்கசிவம்,சி.ரமேஷ் ஆகியோருக்கு தமிழுலகம் கடமைப்பட்டது. அப்பாவின் நூற்றாண்டு நினைவாக அம்மாவுக்கும் உடன் பிறப்புகளான சேகருக்கும் செல்விக்கும் இந்நூலை காணிக்கையாக்கும் பிள்ளைகள் அருள் முருகனார்,சிவதம்பு,அருள் மங்கையின் பணி போற்றுதற்குரியது.
![]()
