இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும்

0
vm273


இந்திரா விழாவில் சிதம்பரா கணிதச் சமர்- 2025

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடத்தப்படும் இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும். ஊறணி முதல் ஊரிக்காடு வரை 3 கிலோமீற்றர் நீளத்திற்கு வாழை மரங்களும் தோரணங்களும் வர்ண விளக்குகளும் இசை நிகழ்ச்சிகளும் நாட்டிய நடன இசை மேடைகளும் சொல்லி மாளாத இன்ப இரவாய் அமைந்தது.

இதிலே அறிவுலகத்தின் அற்புதப் போட்டியாய் தேசிய அளவில் பல முன்னணிப் பாடசாலைகள் பங்குபற்றிய அற்புதக் கணிதச் சமர் பிரமாண்டமாய் அமைந்திருந்தது. பல சுற்றுப் போட்டிகள், கௌரவிப்புக்கள், பரிசுகள், கேடயங்கள் என்பவற்றுடன் நேர்த்தியான ஒழுங்கமைப்பு நேரம் சாமம் 12 ஐ தாண்டியும் களைப்பில்லாம் நிகழ்வை நிறைவு செய்த அர்ப்பணிப்பு. அனைவருக்கும் உணவு வழங்கி அற்புதமாய் வரவேற்றார்கள்.

பல மணித்தியாலங்கள் பல பாடசாலைகள் பங்குபற்றிய இப்போட்டிகளில் முதலிடத்தினை திருகோணாமலை ஸ்ரீP சண்முகா இந்து மகளிர் கல்லூரியும், யாழ் அளவெட்டி அருணோதயக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றார்கள். மூன்றாம் இடத்தினை அல் அக்ஷா தேசிய பாடசாலையும் பெற்றுக் கொண்டது. இது ஒரு அற்புதமான அறிவுச்சமர் எனக் கூறலாம். செய்தி. குரும்பசிட்டி கவிஞர் த.ஐங்கரன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *