எமக்கு அருகில் அவர் சீட்டு இலக்கம் இருக்கப்படாதுஎனப் பயணிகள் வேண்டத் தொடங்கினர்.

0
vm281


மாதவி – யேர்மனி

அன்றைய மக்கள் குடியைவெறுக்க காரணம் என்ன. திருமணம் என்று சொன்னால் முதல் கேள்வி பையன் எப்படி குடி கிடி இல்லைத்தானே! நண்பர்கள் என்றால் எப்படி அவன் நண்பர்கள் குடி புகை என்று இல்லைத்தானே! இப்படி சேரும் இடம் அவை அறிந்தே அன்று சேர்ந்தனர். இன்று உலகில் மது அருந்துபவர்கள், அருந்தாதவர்கள் என்று பிரித்துப்பார்த்து கணிப்பது அரிது. காரணம் மருந்துபோல் மது அருந்துபவர்களும்,விருந்துகளில் மட்டும் அருந்துபவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும் அன்று குடிகாரனுக்கு இருந்த வரவிலக்கணம் இன்று இல்லை.

அப்போ குடிகாரன் என்றால் உடுப்பு, அரையில் நிற்காது. வாய் சும்மா இருக்காது. உலகத்தில் உள்ள அத்தனை கெட்வாத்தைகளின் அகராதிகளும் அவன் வாயுக்குள்ளால் வரும். சாதிச்சண்டை, வேலிச்சண்டை,வாய்க்கால் சண்டை என்று எல்லாமே இந்தக் குடியால் உச்சம் பெறும். இன்று அவை முற்றாக மறைந்து விட்டன என்று இல்லை, என்றாலும் அன்றுபோல் அவை பெரும் பேசும் பொருளாக இல்லை.

விமானப்பயணம் இன்று குடும்பத்துடன் செல்கின்ற ஒரு திருமணவீடு, அல்லது விருந்தினர் வீடு போல் ஆகிவிட்டது. அங்கு நமம்மவர்களும், பிற இனத்தவர்களும் சில மணி நேரம் ஒன்றாக மகிழ்வாக பயணிக்கும் இடமாகவுள்ளது. அங்கு அந்த சில மணித்தியாலத்தில் நாம் எம்மினத்தின் பண்பாட்டை ஒழுக்கத்தை, எடுத்துக்காட்டும் ஓர் அரங்காவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எப்படி நாம் ஒழுக்கமற்ற பண்பாடு அற்ற இடங்களுக்கு பிள்ளைகளை அழைத்தச்செல்வதை தவிர்க்கின்றோமே அதுபோல் விமானப்பயணத்ததையும் அங்கு ஒழுக்கமில்லை என்று தவிர்க்க முடியாது.
நமது நாட்டில் இருந்து ஒருவர் கோடைவிடுமுறையைத் கழித்துவிட்டு வெளிநாடு திரும்ப, குடிபோதையில் கையில் தேசிக்காயால் முகத்தை தேய்த்தபடி விமான நிலையத்தில் இருந்தார். வாய்க்குள் கெட்ட வார்த்தைகள் பல, மள மள வென வந்து போயின. இவ்வளவு நாளாக எங்கோ ஒளிந்திருந்த கண்ணி வெடிகள் மள மளவென வெடிப்பதுபோல், வெடித்தன. நம்மினப் பெண்கள் பலர் தமது பிள்ளைகளுடன் அங்கு இருந்தனர். அவர்களுக்கு அவனது செயல் பெரும் நாணத்தைக் கொடுத்தது.

விமானம் சுகமே பறந்து நாடு செல்ல வேண்டும் என வேண்டியவர்களைவிட, கடவுளே இவன் எனது சீட்டுக்கு பக்கத்தில் அமரப்படாது என வேண்டியவர்களே அதிகம். விமானத்தில் ஏற பணிப்பெண் அழைத்தார். விமானப்பணிப் பெண் சீட் இலக்கத்தை கேட்க, அவர் பதில் இல்லை. விமானத்தில் உள்ளே சீற்றோடு சாய்ந்த படி நித்திரை. அது குடிவெறியில் என்று பயணிகளுக்கும், பணிப் பெண்ணுக்கும் தெரியும். பின்பு சீட்டில் அமர முயற்சித்தார். தானகவே குடி அமர்த்திவிட்டது. ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள் வைத்து எமது இனத்தின் உயர்வைக் காட்டினாலும், இந்த ஒரு நிகழ்வு அவற்றை அடியோடு மாற்றிவிடும் என் எண்ணத்தோன்றியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *