யேர்மனியில் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய தலைசிறந்த மிருதங்கவித்துவான் சங்கீதரத்தினம் பிரணவநாதன் அவர்கள்.

0
vm289

இசைப் பாரம்பரியம் மிக்க கலைக் குடும்பத்தில் தோன்றியவரும், தன்னைப் போல் தனது வாரிசுகளையும் இசைத்துறைக்கே இனிதுவக்கத் தந்தவரும், 20ம் நூற் றாண்டின் ஈழத்தின் இசை முன்னோடிகளில் ஒருவரும், ஈழத்தின் இசை மரபு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிப் பெருமை தேடித் தந்தவருமான, இசைப்புலவர் இசை வேந்தர், இசைமாமணி, கலைச்சுடர், ஏழிசைக்குரிசில், ஈழத்து இசைத்தந்தை என்ற பெருமைக்குரிய மறைந்த இசை மாமேதை, திரு.என்.சண்முகரத்தினம் அவர்களின் மைந்தர்களில் ஒருவரே, லயகுமாரன் சங்கீதரத்தினம் பிரணவநாதன் அவர்கள்.

சிறு வயதிலிருந்து தந்தையிடம் மென்முளவு வாத்திய இசையை முறைப்படி பயின்று, தொடர்ந்து சங்கீத பூசணம் திரு. ஏ.எஸ்.ராமநாதன் அவர்களிடம் மேலும் பயின்று, யாழ் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரியில், சங்கீத இரத்தினம் என்கின்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் அதிவி;சேடப் பிரிவில், 13 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவரும், யேர்மனி கலை பண்பாட்டுக் கழகக்தின் மூத்த தாள வாத்தியக் கலைஞரும், புலம்பெயர் மண்ணில் வாழும் தாளஞானம் இசைஞானம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு, மென்முளவு வாத்திய இசையை அயராது போதித்து வருபவரும், ஐரோப்பிய மேடைகளில், நமது தாயகக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாது, தமிழகத்தின் முன்னணிக் கலைஞர்களுக்கும் இசைமுழக்க மிட்டு, இசைப்பிரியர்களின் இதயத்தைக் கவர்ந்தவரும், தாயகத்திற்கு பெருமைசேர்த்து வருகின்ற மூத்த கலைஞர்களில் ஒருவருமான புகழ்பூத்த மிருதங்க வித்துவான், லயகுமாரன் சங்கீதரத்தினம் பிரணவ நாதன் அவர்கள்.தான் கற்ற கலையை பல மாணவர்களுக்கு புகட்டி அவர்களை இன்று பெரும் கலைஞராக்கிய பெருமைக்குரிய வித்துவான் சங்கீதரத்தினம் பிரணவநாதன் அவர்கள்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *