அற்புதம் ஒன்று நிகழ்ந்ததென்பேன்

0
18

-நிரா. சுரேஷ். இங்கிலாந்து.

“கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம்”

“கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம் கலை ரசிகர்கள் அரங்கம் நிறந்திருக்க இனிதே இன்று 20.07.2025 சனிக்கிழமை கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மாண்புமிகு திரு. சந்தோஷ் ஜா அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் மதிப்பிற்குரிய ஞானபாநு டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயா அவர்களின் இசையில், அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குனர் “கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்களின் நெறியாள்கையில், பேராசான்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மேடையில் இந்திய இலங்கைக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து கதிர்காமக் கந்தனின் புராண வரலாறுக் கதைகளை முத்தமிழ் சுவைபட, கண் வழி, செவி வழி சென்று கண்ணீர் சொரிய மெய் மறக்கவைக்க மிகச்சிறப்பாக நாட்டிய நாடகம் இடம்பெற்றது.

அரங்க மண்டபத்திலும், மேடையிலும் நிறைந்திருந்த கலைஞர்களும், கலாரசிகர்களும், உணர்வில் ஒன்றாகி ஒன்றிப்போன காட்சியைக் காணமுடிந்தது. இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி மேடையில் சில மணித்தியாலங்கள் நடைபெற்றது என்றாலும், மேடைக்குப்பின்னால் ஒத்திகே மணிக்கணக்கு அல்ல நாள்கணக்காக, வாரக்கணக்காக, மாதக்கணக்கில் நடைபெற்றது. அதன் விளைவாகத்தான் இப்படி ஒரு காவியம் படைக்க முடிந்தது. கலாசூரி திவ்யா சுஜேன் வாழ்கைப்பயணத்தில் இன்று நடந்தது ஒரு அற்புதமான தருணம். உண்மையில் அற்புதம் ஒன்று நிகழ்ந்ததென்பேன். அத்தருணம் கிட்ட உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் வெற்றிமணி யின் வாழ்த்துக்கள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *