இலண்டன் பாராளுமன்றத்தில் தமிழ் அறிஞர்களின் விருதுவிழா

0
vm294

யேர்;மனியிலிருந்து சந்திரகௌரி சிவபாலன்; செந்தமிழ்ச் சான்றோர் விருதைப் பெற்றுக் கொண்டார்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் – சென்னை, குராய்டன் தமிழ் சங்கம் -இலண்டன், இலண்டன் கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகம் இணைந்து செந்தமிழ் சான்றோர்க்குப் பெருமை சேர்க்கும் விழா கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி இலண்டன் வெஸ்மினிஸ்ரர் ஹவுஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் மூத்த தமிழ் மொழியின் பண்பாடு, கலாசாரம், தமிழ் மொழியின் ஆழ்ந்த ஞானம் என்று செந்தமிழுக்குப் பெருமை சேர்க்கின்ற பங்களிப்புக்களைச் செய்கின்ற அயலகத் தமிழர்களான 100 பேராளர்களை 24 நாடுகளில் இருந்து அழைத்திருந்தனர். அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமுகர்களின் கைகளினால் கேடயங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இ,ந்நிகழ்ச்சியினைப் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களான சியோபினி மக்டோனா, நடாஷா அயோர்ன்ஸ், குரோய்டன் மாநகராட்சி மன்றத்தின் பிரதி மேயர் அப்பு ஸ்ரீநிவாசன், ஆ.கோ.மோ. தமிழியல் ஆய்வு மையத்து முனைவர் பாட்டழகன், கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழக திரு.கே.சிவாப்பிள்ளை ஆகியோர் ஒழுங்குபடுத்தியிருந்தனர். திரு.அப்பு ஸ்ரீநிவாசன் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். முனைவர் பாட்டழகன் வரவேற்புரையாற்றினார். நன்றியுரையை அகிலன் பாட்டழகன் அவர்கள் வழங்கினார்.

இலண்டன் பாராளுமன்றத்தில் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது பெருமையாக இருந்தது. பிரிட்டிஸ் கொமன்வெல்த் விவகார அமைச்சர் ஸ்டீவ் ரீட், பாராளுமன்ற உறுப்பினர் ஜாஸ் அதுவெல், நடாஷா அயோர்ன்ஸ்,குரிண்டர் சிங்,முதல் தமிழ் எம்.பி. உமா குமரன், மாநகராட்சி மேயர்கள், கவுன்சிலர்கள், வழக்கறிஞர்கள்,கல்வியாளர்கள்,கலைஞர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துச் சிறப்புரையாற்றினார்கள். திரு.விசு செல்வராஜா–பிரான்ஸ், திரு.சுப்பையா ராமு – சிங்கப்பூர், திரு. சதீஸ் சிவலிங்கம் – இலங்கை, திரு. ராட்டோ முத்திரட்டினம் – மலேசியா, திருமதி. பிரேமளா நாகேஸ்வரராஜ் – தென் ஆபிரிக்கா, திருமதி சந்திரகௌரி சிவபாலன் – ஜெர்மனி, திரு. ராஜசுந்தரராஜன்-மொரீசியஸ். திரு. பி.எஸ். அகிலன் – இந்தியா,திருமதி.பி.சங்கமித்திரை–தமிழ்நாடு ஆகியோர் ,ந்நிகழ்ச்சியின் அயலக ஒருங்கிணைப்பாளர்களாவர்.

ஜெர்மனி நாட்டிலிருந்து சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் சிறப்பு அதிதி பாராளுமன்ற எம்.பி. நாட்ஷா அயோர்ன்ஸ், குரொய்டன் மேயர் அப்துல் இஸ்லாம், குரோய்டன் மாநகராட்சி மன்றத்தின் பிரதி மேயர் அப்பு ஸ்ரீநிவாசன் ஆகியோர்களிடமிருந்து செந்தமிழ்ச் சான்றோர் விருதையும் கௌரவத்தையும் பெற்றுக் கொண்டார். விழா முடிவுற்றதும் அனைத்து பேராளர்களும் இல்பார்ட் நகரில் அமைந்திருக்கும் பிரபா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டதுடன் அனைவருக்கும் கலைநிகழ்வுகளும்,விருந்துபசாரமும் அளித்துக் கௌரவிக் கப்பட்டது. மனம் நிறைவான நிகழ்வான இவ்விழா அனைவருக்கும் அமைந்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *