பிரியாத பிரியாவிடை முத்தங்கள்.
- தீபா ஸ்ரீதரன் தைவான்
செய்தித்தாள்கள் (புகைப்படங்கள்) மற்றும் செய்தித்திரைகளில் பதிவான போருக்கு முன் (முதலாம் ஃ இரண்டாம் உலகப்போர்) கொடுத்துக் கொள்ளப்பட்ட சில பிரியாவிடை முத்தங்கள்.
ஆசை, காதல், காமம் இவற்றைத் தாண்டி இந்த முத்தங்களில் எத்தனை வகையான உணர்வுகள் இருந்திருக்கும். மீண்டும் வந்து இணைவதற்கான உறுதிப்பாடு, காலத்தின் இழுவையைத் தாங்கிக் கொள்வதற்கான ஆற்றல், வாழ்ந்த இடத்தின் ஈரம்,நிலையாமை குறித்த பயம், குறிப்பாக ஒரு புகைப்படத்தில் உள்ள நான்கு குழந்தைகளையும் மனைவியையும் விட்டுச்செல்லும் கணவனின் அழுத்தமான மனநிலை என்று…. ஆனாலும் அவர்களின் புன்னகை முத்தம் மனிதர்கள் தங்களுக்குத் தானே வகுத்துக்கொண்ட சமூகக் கடமையையும், அக்கறையையும் பறைசாற்றுகிறது. நாம் கடந்து வந்த பாதையில் இந்த முத்தங்கள் எமக்கும் புதிதல்ல.
![]()
