காற்றாலை மின்கோபுரங்களை உள்ளூர் மக்கள்ஏன் எதிர்க்கிறார்கள்? என்கிற கேள்வி எழுகிறபோது…
சர்மிலா வினோதினி இலங்கை.
எப்பொருளுக்கும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது எங்களுக்குத் தெரியும், அது 2018 அல்லது 2019 என்று நினைக்கிறேன், ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் யேவரசயட சநளழரசஉந யனெ நநெசபல அயயெபநஅநவெ தொடர்பாக விரிவுரைகள் நடந்து கொண்டிருந்தன, இலங்கையில் காணப்படுகின்ற புதுப்பிக்கக் கூடிய வளங்கள் தொடர்பாகவும் அவற்றில் இருந்து சக்தியை பெற்றுக்கொள்ளுவது தொடர்பாகவும் விரிவுரையாளர் விரிவுரைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அவற்றில் காற்றின் மூலமாக மின்சாரத்தை பெறுவது தொடர்பில் முன்மொழியப்பட்டு நடவடிகரகைகள் எடுக்கப்பட்டு வருகின்ற றுin வரசடிiநெ கள் தொடர்பாகவும் அவை அமைக்கப்பட இருக்கின்ற இடங்கள் தொடர்பாகவும் விளக்கப்படங்களையும் இணைத்திருந்தார். தலைமன்னார், நடுக்குடா, பூனரின் (Pழழசinin) (பூநகரியை பூனரின் என்றுதான் அனேகமான இடவிளக்கப்படங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்) என்று இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவை நிகழ்ந்து சில காலங்களின் பின்னர் வடக்கில் காற்றாலை கோபுரங்கள் உயர உயர எழுந்து இராட்சத இறக்கைகளை சுழற்றியபடி இயங்கத் தொடங்கின. இவை பொருத்தப்படுவதற்காக பாரிய ஊழவெயiநெசள இல் எடுத்து வரப்படுகிறபோது ஒரு நாள் நாங்களும் கள வேலைகளுக்காக சென்று கொண்டிருந்தோம், இது என்ன? என்றொரு கேள்வி எழுந்தபோது விடயத்தை சொல்ல முயன்றேன், கூட இருந்தவர்கள் இல்லை இது அது இது என்றார்கள், சரி பிறகு பார்த்துக்கொள்ளுங்கள் என்றுவிட்டு அமைதியாக இருந்து விட்டேன்.
ஏன் இதை இங்கு எழுதுகிறேன் என்றால் மன்னாரின் பேசாலை, நடுக்குடா போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய கரையோரப்பகுதியில் ஒரு தொகுதி காற்றாலை மின்கோபுரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு தொகுதி கோபுரங்களை அமைப்பதற்காக எடுத்து வரப்படுகிறபோது பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டு தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் இத் திட்டம் தற்காலிகமாக ஒருமாதத்திற்கு இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டிற்குள் இத்தகைய திட்டங்கள் உள்வருகின்றபோது அது வளர்ச்சியின் பாதை யினையே குறிக்கும், ஆனால் இங்கு உள்ளூர் மக்கள் இதனை ஏன் எதிர்க்கிறார்கள்? என்கிற கேள்வி எழுகிறபோது,
- பிரதேசத்தின் இட உயரம் கருத்தில் கொள்ளப்படாது பெரு மழைக்காலத்தில் மேலதிக கழுவுநீர் வழிந்தோடுகிற இயற்கையான வெள்ள வாய்க்கால்கள் அதாவது ஓடைகளை மறித்து குறித்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மழை காலத்தில் பேசாலை போன்ற பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி அனர்த்த பாதிப்புக்கள் எழுகின்றன.
2.தங்களுடைய கரை வலை மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் நம்புகிறார்கள்.
3.வேடந்தாங்கல் போன்ற பகுதிகளில் இருந்து வலசை வருகின்ற பறவைகளின் பறப்பு பாதை தடை செய்யப்படுவதாகவும், பறவைகள் கோபுர இறக்கைகளில் அடிபட்டு இறப்பதாகவும் சூழலியலாளர்கள் வாதிடுகிறார்கள்.
மேற்குறித்த கருத்துக்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டியவை. ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறபோது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (நுnஎசைழnஅநவெயட ஐஅpயஉவ யுளளநளளஅநவெ) சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (ளுழஉயைட ஐஅpயஉவ யுளளநளளஅநவெ), ஆகியவற்றோடு கூடுதலாக இடர் தாக்க மதிப்பீட்டு அறிக்கையினையும் மேற்கொள்ளுவது அவசியமானது. குறித்த காற்றாலை மின் உற்பத்தி விடயத்தில் இவை முறையாக நிகழ்த்தப்பட்டிருந்தால் வெள்ள அனர்த்த பாதிப்பு விடயமோ அல்லது பறவைகளுக்கான பாதிப்பு விடயமோ மேல் எழுந்திருக்காது. மீன்பிடியில் பாதிப்புக்கள் நிகழும் என்கிற விடயம் ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது செய்யக்கூடிய விடயம் ஒன்றிருக்கிறது.
இடவுயரங்களை கருத்தில் கொண்டு செயற்கையான வெள்ள வாய்க்கால்களை அமைத்தல் மற்றும் கோபுர இறக்கைகளில் சென்சார்களை பொருத்தி பறவைகளை பாதுகாக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படியானால் அரசு முன்வருவதை வைத்து இரண்டாவது தொகுதிகளையும் மன்னாரில் அமைக்கலாம்தானே என்று கேட்டால், புவியியல் கற்ற ஒருவராக ஓம் அமைக்கலாம் என்றே சொல்லுவேன், ஏனென்றால் ஒப்பீட்டளவில் சூழலுக்கு பாதிப்புக்கள் குறைந்த சக்தியை பெறும் முறைதான் இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள்.
ஆனால் இங்கும் ஒரு கேள்வி இருக்கிறது. இத்தகைய காற்றாலை கோபுரங்களின் இயக்கத்திற்கு மணிக்கு 8.5 கி.மீற்றர்களில் காற்று வீசினாலே போதுமானது, ஆனால் இலங்கையின் கரையோரங்கள் எல்லாவற்றிலுமே மணித்தியாலத்திற்கு 12.5 கி.மீ களில் காற்று வீசுகிறது. அப்படியானால் இலங்கையில் ஏனைய கரையோரங்களில் காற்றாலைகளை நிறுவாமல் ஏன் மன்னார்த்தீவு குறிவைக்கப்படுகிறது?
அதற்கும் விடையிருக்கிறது. தெற்கிலே அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரை சீனாவினுடைய ஆதிக்கம் காலூன்றியிருக்கிறது, புத்தளத்திற்கு அடுத்தது மன்னார்.ஆக சீனாவின் ஆதிக்கப்பரவலிற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் தன்னுடைய பலத்தை இருத்திக்கொள்ளுவதற்குமாக இந்திய அரசின் ஆசைக்குரிய இடமாக மன்னார் இருக்கிறது என்பதே தவிர்க்க முடியாத உண்மை.
இவை எல்லாவற்றையும் இங்கு ஏன் எழுதுகிறேன் என்றால்,காற்றாலை விடயத்தில் கவனத்தை குவித்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் மன்னார்த்தீவின் இல்மனைட் உட்பட்ட கனிய மணல் அகழ்வு முயற்சிகள் மன்னார் தீவையே அழித்தொழிக்கும் வகையில் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு எதிராக கருநிலம் என்கிற பெயரில் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. வாசியுங்கள், பகிருங்கள், சுதேசிகளின் நிலமீட்பிட்கு உதவுங்கள் நண்பர்களே !!
![]()
