இறந்தகாலமும் நிகர்காலமும் கை குலுக்கிய நேரம்.

0
vm306

-மாதவி – யேர்மனி
குழந்தைப்பருவம் யாவரும் இரசிக்கும் பருவம். யாவரும் பரவசம் கொள்ளும் காலம் அது.
சில பொருட்களை பார்க்கின்றபோது எமக்குள் பல நினைவுகள் அசை போடும். அந்தப் பொருட்களுக்கு அந்த அளவு சக்தி உண்டு.

கடந்த மாதம் யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் இடம்பெற்ற தமிழர் தெருவிழாவில். (05,06,07,-09.2025)
தமிழர் ஆவணக்கண்கட்சி இடம் பெற்றது.
இக்கண்காட்சியினை பல வருடங்களாக பல நாடுகளில் திரு அன்ரன் அவர் நடத்தி வருகிறார்.

அவரது பணிக்கு தமிழ் மக்களாகிய நாம் தலைவணங்கிடவேண்டும். அத்தகைய பெரும் பணி அது.

அதிகமானோர் இக் கண்காட்சியை தங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.
பாட்டி அன்று தான் பாவித்த பொருட்களை கையிலெடுத்து பேத்திக்கு காட்டிக் காட்டி உருகியகாட்சி மனங்கொள்ளத்தக்கது.

தாய்ப்பால் மறந்து போச்சியில் பசுப்பால், மாப்பால் குடித்த தருணம்,
அந்தப் பால் போச்சியில் பிஞ்சுக்கரங்கள் தாளமிட்டபடி பால் பருகும்.
அன்று தாளமிட்டபடி பால் பருகிய அந்தப் பிஞ்சுக் குழந்தை, இன்று பாட்டியாக, பாட்டனாக, அந்தப் பால் போச்சியை கையில் எடுத்து பேரக்குழந்தைகளுக்கு காட்டும்போது கண்கலங்கினர்.

அது மட்டுமல்ல அங்கு காட்சியில் இருந்த மூக்குபேணி, கைவிளக்கு, காசுமாலை, ஏட்டுச் சுவடி (எமது யாதகம், யாவும் அன்று ஏடுகளில் எழுதப்பட்டு இருந்தது.) இவையாவும் எம்மை வiஅந வசயஎநட செய்யவைத்து, நாம் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.

கண்காட்சி கூடத்தில் கூடிநின்ற மக்கள் 1960 பின் பிறந்தவர்களும், 2015 பின் பிறந்தவர்களுமாக இருந்தார்கள்.

இறந்தகாலமும் நிகர்காலமும் கை குலுக்கிய நேரம் அற்புதமான தருணமாக யாவருக்கும் அமைந்து.
நீங்களும் இறந்தகாலத்திற்கு பயணித்து மகிழ இங்குள்ளவற்றை உன்னிப்பாக பாருங்கள். உங்கள் தோள்களில் சிறகுகள் முளைப்பதை உணர்வீர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *