எமது வீட்டில் அதிகம் அடிபட்ட நெல்லிமரம்.நோய்களை நெருங்கவிடாத நெல்லி!

0
vm311

– அமரர் பொ.கனகசபாபதி (முன்னாள் அதிபர் மகாஜனாக்கல்லூரி)

வளவின் பின்வேலிக்கு அண்மையாக அந்த மரம் நின்றது. நெடித்துயர்ந்த மரம். புத்து பதினைந்தடி உயரத்தில் நாலாபக்கமும் கிளைகளைப் பரப்பி நின்றது. இலைகளைக் கூட்டிலை என்போம். மத்தியில் காணப்படும் நடு நரம்;பின் இரு பக்கங்களிலும் சீறிலைகள் ( Leaflets) ஒழுங்காக அடுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். சீறிலைகள்.
அடுக்கப்பட்ட விதத்தினை சிறைப்பிரிப்பான் ( Pinnate) ஒழுங்கு என்பார்கள். கூட்டிலையின் காம்புகள் மிகவும் குறகியவையாக உள்ளமையாலே இலைகளின் கக்கங்களிலே குலை குலையாகத் தோன்றும் காய்கள் இலைக் காம்புகளில் இருந்தே தோன்றுவது போலத் தெரியும். காய்கள் துளிர்ப்பச்சை நிறமுடையவை. கோள வடிவானவையாகப் பரப்;பிலே ஆறு நீளப்பக்கமான சால்களைக் கொண்டவையாக இலைகளுடன் இலையாய் மறைந்து காணப்படும்.
உயரமான மரம் மரத்திலேறிக் காய்களைப் பிடுங்குவது எனது கூட்டாளிகளுக்கு அவ்வளவு சாத்தியமில்லை. நன்றாக முற்றிய காயைச் சாப்பிட்டாலதான் அதன் சுவையை அனுபவிக்கலாம். சாப்பிடும் போது சற்றுக் கசக்கும்;. பின்னர் தண்ணீர் குடித்தால் தொண்டையுள் இனிப்பாக இருக்கும். அது ஒரு தனிச்சுவை. பழம் பழுத்தால் கீழே விழும்தான் அப்பொழுது அதன் தனித்தன்மையான சுவையும் வீழ்ந்து விடும். வீதியால் போகும் பெடியள் கூட்டத்திற்கு சடைபரப்பி நிற்கும் எமது நெல்லியைக் கண்டால் நாக்கில் ஐலம் ஊறவே செய்யும். தமக்குத் தெரிந்த வித்தையைக் கையாண்டு ஒரு முயற்ச்சியை மேற் கொள்ள ஆவல் எழும் மாங்காயாக இருந்தால் கல்லால் அடிக்கலாம் இது சிறியநெல்லிக்காய். எங்கே உள்ளது என்பது கூடத் தெரியாத நிலை ஆகவே குருடன் பெண்டாட்டிக்கு அடித்தமாதிரித்தான். கோப்புகளை இலக்குவைத்து கட்டையான தடிகள் பறக்கும் என்றால். பல்வேறு முற்றிய நிலைகளிலே காய்கள் பொலு பொலு எனக்கீழே விழும். வேலியில் பொட்டு வைத்து மெல்ல உள்ளே புகுந்து தமக்கத் தேவையானதை அவர்கள் எடுத்தக்கொண்டு போவார்கள். பொட்டுக்கள் அவர்கள் தலையைக்கண்டால் அம்மவின் வசவு நிச்சயம்.

ஆதியமனதன் என்ற கடையெழு வள்ளலில் ஒருவர் தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த நெல்லிக்காயினை ஒளவையாருக்கு கொடுத்தமை தமிழ் இலக்கியத்தில் வருகின்ற ஒரு கதை. மற்றைய கடையெழுவள்ளல்களின் கொடையிலே ஒரு அசட்டுத்தனம் இருப்பதை எமது பிள்ளைகள் எடுத்துகாட்டுவது உண்டு. ஆனால் அதியமானின் கொடையில் ஓர் அர்த்தம் உள்ளதை விஞ்ஞானரீதியாக உணரமுடிகிறது. நெல்லிக்காயில் முதுமையை அண்டவிடாமல் தடுக்கும் பதார்த்தம் ஒன்று (Aejubenating) உள்ளது என்பது இன்றைய உணவியல் விஞ்ஞானிகள் கண்டுகொண்ட உண்மை.
எமது குருதியின் பாய்பொருளிலே பல்வேறு கொலஸ்ரோல் வகைகளிலே ( Triglyceride, Lipoprotein Cholestrol) ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட வைகையோ அதிகளவிலே காணப்படுமாயின் அந்த நிலையினை அதீத கொழுப்புடமை ( Hyperlipidaemia) என்கிறார்கள். இதுவேதான் உடல் முதுமை நிலை எட்டுவதற்குக் காரணமாகின்றது. இக்கொலஸ்ரோல் வகைகளை ஒட்சியேற்றி செயல் இழக்கவைக்கும் திறன் நெல்லிக்காயில் உள்ள அப்பதார்த்தத்திற்கு உள்ளதாம். அகவே ஒளவையார் முதுமை அடையாமல் இளமையுடன் தமிழ்த்தொண்டு செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தமக்கு வந்ததை அதியமான் தானம் செய்தது அவரின் வள்ளல்த்னமையைக் காட்டவே செய்கின்றது. ஆடுகின்ற மயிலைக்கண்டு அது குளிரால் நடுங்கிற்று என்று எண்ணி தனது போர்வையை வள்ளல் பேகன் கொடுத்தார் என்பதும், பற்றிக்கொண்டு வளர தண்டு தளையில்லாமல் காற்றில் அலைந்தாடிய முல்லைக்கொடிக்குத் தன் தேரினை வள்ளல் பாரி கொடுத்தார் என்பதும் சிலருக்கு இழக்காரமாகத் தெரிகின்றது. ஆண்மையில் மழைவரவுள்ளது என்ற ஆனந்தத்தில் ஆடுகிறது என்பது அந்த வள்ளலுக்குத் தெரியவில்லையா? காற்றில் அசைந்தாடும் முல்லைக் கொடிக்கு ஒரு தளையினை நட்டுவிட்டு பிரச்சினையைத் தீரத்துக்கொள்ளாமல் தேரினை அங்கேயேவிட்டு பாரிசெல்ல வேண்டும்.? எனக் கேட்பவர்களும் உள்ளனர். உளவியல் ரீதியாக விளக்குவதாயின் அவர்களது நடத்தையை திடிர் உணர்வு நடத்தை. (ஐஅpரடளiஎந டிநாயஎழைரச) எனலாம். தீடீர் உணர்வு நடத்தையின்போது ஒருவர் பக்கவிளைவுகளையோ, காரணகாரியங்களையே ஆராய்வதில்லை. சடுதியாக ஒரு நிகழ்ச்சியைக் கண்டதும் வேறு ஏதும் சிந்தனை ஏற்படாமல் அதனைத் தீர்ப்பதற்கே முனைவார். தீடீர் உணர்வு நடத்தையை சாதரணமாக உணர்ச்சியைத் தூண்டும் ஒரு சம்பவத்தின் போது காண்பிக்கபட்ட ஒரு பிரிதிவினையாகவே கருதுவார்கள். ஊளவிலாளர்கள் இதனைக் கூட ஒரு உளநோய் எனக்கூறுகின்றார்கள். (டீழசனநச டiநெ Pநசளழயெடவைல னுளைழசனநச- டீ:P.னு)வள்ளல்களின் செயற்பாடுகள் , அதியமான் உட்பட எல்லாரதுமே, தீடீர் உணர்வு நடத்தையேதான். நெல்லிக்காயை ஆங்கிலத்தில் (புழழளநடிநசசல) என அழைப்பார்கள். அதன் தாவர இயல் பெயர் Phலடடயவொரள நஅடிடiஉய Phலடடயவொநஉநயந குடும்பத்தினைச் சேர்ந்து.

இந்த நெல்லியைத்தவிர வேறும் இரண்டு நெல்லிகளின் பெயர்கள் நம்மவர்களுக்க பரீட்சியமாக இருக்கும். ஆவை அரை நெல்லியும் ,கீழ்க்காய் நெல்லியும் ஆகும். இந்த மூன்று வகைநெல்லிகளையும் பார்ப்போர் இவை எப்படி ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவையாக இருக்கமுடியும் என ஆச்சரியப்படுவார்கள். கீழ்க்காய் நெல்லி என்பது ஒரு அடி உயரத்திற்குமெல் வளராத இரண்டும் கெட்டான் தாவரம். பூண்டு எனவும் இதனை அழைப்பார்கள். இதனை எவரும் பயிரிடுவதில்லை ஆனால் வீட்டிலே ஒருவருக்கு செய்கைமாரி (துயரனெiஉந) வந்தால் மாத்திரம் இதற்கு பெரும் மவுசு வந்துவிடும். வீட்டுக்குவீடு கோடிகள் எல்லாம் தேடத்தொடங்கிவிடுவார்கள். செங்கைமாரினிபோது ஈரல்கலங்கள் பாதிக்கப்படுகின்றன. ஈரலைப் பேணுவதற்கு இதனை அவித்துக்குடிப்பார்கள். மிகச் சிறந்த ஒளவிடதம் என்கிறார்கள். அரை நெல்லி சிறுமரம். ஆரை நெல்லிக்காய் புளிப்பாக இருக்கும். நேல்லிக்காயில் கசப்பு இல்லை மருத்துவக்குணங்கள் அதிகம் இல்லை. ஊறுகாய்போடப்பாவிப்பார்கள்.அரை நெல்லியின் தோற்றுவாயாக மடகாஸ்காரையும்,கீழ்க்காய்நெல்லியினுடையதை கிழக்காசியநாடுகளும் என்கிறார்கள். ஆப்படிப்பார்க்கின் நெல்லி இந்திய உபகண்டத்தினையே தனது பிறந்தகமாகக்கொண்டது என்பது உறுதி. குலாநிதி சிவகடாட்சம் நிறையவே ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்துவைத்துள்ளார்.ஆயள்வேதம் சம்மந்தமாக ஆய்வு செய்பவர். நுல்ல வழக்கறிஞர் ஆயுள்வேதம் சம்மந்தமாக பல நூல்களை எழுதியுள்ளார். ஆதில் ஒன்று ஆங்கிலத்திலும்; பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஏட்டுச்சுவடிகளில் யாழ்ப்பாணத்து மன்னன் செகராசசேகரனால் ஆக்கப்பட்டவையும் உண்டு. அதனில் நெல்லிக்காய்பற்றிய பாடலைத் தந்துள்ளேன்.

அரோக்கியமாமாம் அவை பித்தம், சேட்டுப்போம்
பாரோக்கியமாம் தலைவலிபோம்- நேரான
வல்லிக்கனிமொழியே மாநிலத்தின்
நெல்லிக்காய் தின்னும் நெறி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *