பரிஸில் 35 ஆயிரம் மக்கள் திரண்டலாசப்பல் ஸ்ரீ மாணிக்க விநாயகர் தேர்த்திருவிழா

0
vm322


— எஸ்.கே.ராஜென்
பரிஸ்,பரிஸ் புறநகரங்கள், பிரான்ஸின் ஏனைய பகுதிகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து பரிஸில் 35 ஆயிரம் மக்கள் திரண்டு,பரிஸ் லாசப்பல் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய 28வது தீர்த்திருவிழாவைக் கண்டுகளித்தனர். அமரத்துவமடைந்துவிட்ட அளவெட்டி வைத்திலிங்கம் சந்திரசேகரம் தனது அயராத முயற்சியால் உருவாக்கியதே இந்த ஸ்ரீமாணிக்க விநாயகர் ஆலயம். இவர் தனது சொந்தப்பணத்தில் 1983ம் ஆண்டு இந்த ஆலயத்தை அமைத்தார். 1984ம் ஆண்டு பஞ்ச உலோகத்தால் வடிக்கப்பட்ட ஸ்ரீP மாணிக்க விநாயகர் திருவுருவச்சிலை கொழும்பு லீலா நிறுவன அதிபர் தேசபந்து அவர்களால் விமானம் வழியாக பரிஸ் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1984 பெப்ருவரி 4ம் திகதி தைப்பூச நாளில் ஆயளைழn னந ட’ஐனெநஇ ஊவைé ஐவெநசயெவழையெட ருniஎநசளவைé – பிரிஸிலுள்ள இந்திய கலாசார மண்டபத்தில் விநாயகர் பூசை ஆரம்பித்தது. இது வாரம் தோறும் நடைபெற்றது. இங்கு பரதம், இசைக்கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

1986 முதல் 1992 வரை பரிஸ் 11ல் அமைந்த ஒரு சிறிய மண்டபத்தில் இரண்டு காலப் பூசைகள் நடைபெற்று வந்தன. வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களில் ஆலயத்தில் அன்னதானமும் நடைபெற்று வந்தது. இந்து மதத் தலைவர்கள், கலை, கலாசாரத் தூதுவர்கள், இலங்கை, இந்திய நாடுகளின் பிரான்ஸ் நாட்டுத் தூதுவர்கள் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். 1988ம் ஆண்டு இலங்கைக்கலையகத்தால் பரிஸ{க்கு இசை நிகழ்ச்சிக்காக வரவழைக்கப்பட்டிருந்த ‘இசையரசர்’ ரி.எம். சௌந்தரராஜன் இவ்வாலயத்துக்குச் சென்று பக்திப்பாடல்பாடி வழிபாடு மேற்கொண்டிருந்தமை வரலாறு. இலங்கைக்கலையகத்தின் சார்பில் ரி.எம். சௌந்தரராஜனை இரா.சிறிதரன் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

1992ம் ஆண்டு முதல் பரிஸ் லா சப்பல் அருகாமையில் ஆலயம் அமைந்தது. பூசைகள், அன்னதானம் என்பன நடைபெற்று வந்தன.
1995ம் ஆண்டு முதல் நித்தியபூசைகள் நடைபெற்றன. சூரன் போர், தயிர் முட்டிப் பூசை, விஷ்ணு பூசை, கந்தசஷ்டி, கேதார கௌரி விரத பூசை, திருவெம்பாவை பூசைகள் என யாவும் நடைபெற்றன. தேர்த்திருவிழாவும் நடைபெற்றது.
முருகன், வள்ளி, தெய்வானை திருச்சுருவங்கள் சந்திரசேகரத்தின் சகோதரி மகேஸ்வரி கோபாலசாமி, அவரது குழந்தைகள் ஆகியோரால் கும்பகோணம் சாமிமலையில் வடிவமைக்கப்பட்டு திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.1999ம் ஆண்டு செப்ரம்பர் 12ம் திகதி முறைப்படி ஆலயத்தின் 4வது தேர்த்திருவிழா நடைபெற்றது.
2000; ஆண்டில் முருகன், வள்ளி, தெய்வானை என்று புதிதாகத் தேர் அமைத்து இரண்டு தேர்கள் வீதியுலா வந்தன. ஐரோப்பாவில் இரண்டு தேர்கள் வீதியுலா வந்த பெருமையை ஸ்ரீமாணிக்க விநாயகர் ஆலயம் பெற்றது. இந்த ஆண்டில் கந்த ஷஷ்டி திருவிழா, முருகன் திருக்கல்யாண உற்சவம் என்பன நடைபெற்றன.

2001ம் ஆண்டு ஆலயத்தின் 6வது தேர்த்திருவிழா தமிழ் ஊடகங்கள், பிரான்ஸ் ஊடகங்கள் என்பனவற்றின் கவனத்தை ஈர்த்தது. நேரஞ்சல்களும் நடத்தப்பட்டன. 15000 வரையான மக்கள் தேர்த்திருவிழாவில் பங்கு பற்றியிருந்தனர்.தமிழ்ப்பத்திரிகைகள்,பிரெஞ்சுப்பத்திரிகைகள் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய 6வது தேர்த்திருவிழா பற்றிச் செய்தி வெளியிட்டிருந்தன. பரிஸில் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை நிறுவிய வைத்திலிங்கம் சந்திரசேகரம் 2002ம் ஆண்டு சென்னையில் அகோலபீடம் ஜீயர்ஸ்வாமிகளால் ‘அருட்பணி அரசு’ என மாண் பேற்றப்பட்டார்.
2002ம் ஆண்டு 7வது தேர்த்திருவிழா, 2003ம் ஆண்டு 8வது தேர்த்திருவிழா, 2004ம் ஆண்டு 9வது தேர்த்திருவிழா எனத் தொடர்ந்தது. 9வது தேர்த்திருவிழாவில் 20ஆயிரம் மக்கள் பங்குபற்றினர்.2005ம் ஆண்டு 10வது தேர்த்திருவிழாவில் 25ஆயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள்.கடந்த 31.08.2025 அன்று 28வது தேர்த்திருவிழா நடைபெற்றது.35ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பற்றினர். பரிஸ் லா சப்பலில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. தேரேறி வீதியுலா வந்த விநாயகப் பெருமானை மக்கள் வீதிகள் தோறும் நின்று வழிபட்டனர்.

லா சப்பல் பகுதி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத் திருவிழாவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தன.வீதிகளில் வர்த்தக நிலையங்கள் முன்பாக மண்டகப்படி வைத்து பெரும் தொகையான தேங்காய்கள் அடிக்கப்பட்டன.பரிஸ் 18, 10 நகரசபைகள், காவல்துறையினர் ஆலய நிர்வாகிகளுக்கு தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர்.
தேர்த்திருவிழாவுக்காக பரிஸ் 10, பரிஸ் 18 வீதிகளில் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பு பிரான்ஸ் நாட்டில் விநாயகர் பக்தர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. தேர்த்திருவிழா மாலை 3 மணிக்கு நிறைவடைந்த பொழுதிலும் லா சப்பல் பகுதியில் இரவு 10 மணிவரை மக்கள் நிறைந்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *