சிறப்பாக நடைபெற்ற செல்விகள். நிருபமா, நிருஜனா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

0
vm326

.
நிருத்திய நாட்டியாலய அதிபரும் ஆசிரியையுமான பரதசூடாமணி, திருமதி.அமலா அன்ரனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகளான நாட்டிய கலாஜோதி நிருபமா நகுலேந்திரன், நிருஜனா நகுலேந்திரன் சகோதரிகளின் அரங்கேற்றம் 20.09.2025 ஆம் திகதி யேர்மனியில் சோஸ்ற் (ளுழநளவ) நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. முதலில் ஹம் காமாட்சி அம்பாள் ஆலயகுரு ஸ்ரீபாஸ்கர குருக்கள் அவர்களின் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடனமங்கையர்களின் அம்மா திருமதி.கலைமதி நகுலேந்திரன் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். காமாட்சி அம்பாள் ஆலயகுரு ஸ்ரீபாஸ்கர குருக்கள் ஆசியுரை வழங்கினார்.
பக்கவாத்தியக் கலைஞர்களின் கடவுள் வாழ்த்துப் பாட்டு இசையுடன், புஸ்பாஞ்சலி வணக்க நடனத்துடன் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. நடன மங்கையர் செல்விகள். நிருபமா, நிருஜனா மிகச்சிறப்பாக உடல் அமைப்பும், உடல்உறுதியும், உடல்அழகும் கொண்டவர்களாக, தங்களின் அங்க அசைவுகள் மூலம் உடல்மொழியை மிகச்சிறப்பாக வெளிக்காட்டிய தன்மை சபையோரை மெய்மறக்க வைத்தது என்றால் மிகையாகாது. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் அறிவிப்புத் திலகம் திரு.லோப் வலன்ரையின் தனது மதுரக்குரல் மூலம் மிகவும் சிறப்பான முறையில். நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார அவருடன் இணைந்து. யேர்மன் மொழி அறிவிப்பாளர் சகானந்தி பூவேந்திரநாதன் அவர்களும் சிறந்த முறையில் அறிவிப்பை மேற்கொண்டார்.

தலைமை விருந்தினர் யேர்மனி தமிழ்க் கல்விச் சேவைப் பொறுப்பாளர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பொ.சிறீஜீவகன் தனதுரையில், பெற்றோரின் இடைவிடாத அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டையும், நடன ஆசிரியை திருமதி.அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் திறமைகளையும் விளக்கமாகக் எடுத்தியம்பி, அவரின் நீண்ட கால நடன ஆசிரிய சேவையைப் பாராட்டி வாழ்த்தி “நடனவித்தகி” என்ற பட்டத்தையும் வழங்கினார். தொடர்ந்து உரையாற்றிய சோஸ்ற் தமிழாலயப் பாடசாலையின் பொறுப்பாளர் திரு. சசிமோகன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் செல்விகளின் நடனத்தை மிகச் சிறப்பாகப் பாராட்டியதோடு, அவர்களின் எதிர்கால வாழ்வுக்குப் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து, அவர்களின் தமிழ்மொழி வளர்ச்சியும், உச்சரிப்புத் திறனையும் போற்றினார்.

பிரதம விருந்தினர் முதுகலைமானி, நடனஆசிரியை திருமதி.நிமலினி ஜெயக்குமார் உரையாற்றும் போதும், இருசகோதரிகளும் சிறந்த முறையில் உன்னதமாக இந்த நடனங்களை ஆடினார்கள். ஆடவைத்த ஆசிரியையும், நடனமாடிய மாணவர்களையும் பாராட்டி மகிழ்வு கொள்கின்றேன் என்று கூறினார். தொடர்ந்து. வாழ்த்துரை கூறிய நடன ஆசிரியை திருமதி.சாவித்திரி சரவணன் அவர்கள், நடனச் சகோதரிகளின் ஊக்கத்தையும், நடனமாடி பாங்கினையும் விதந்து கூறியதோடு, பக்கவாத்தியக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக நடன அரங்கேற்றத்தை மிளிர வைத்தனர் என உரையாற்றினார். திருத்திய நாட்டியாலய அதிபரும் ஆசிரியையுமான நாட்டியக்கலைமணி, திருமதி.அமலா அன்ரனி சுரேஷ்குமார் அவர்கள் தனதுரையில் அவர்கள் தமிழ் மொழியைச் சிறப்பாக கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தமையும், இவை எல்லாவற்றுக்கும் உந்து சக்தியாக அமைந்தன எனக்கூறினார். பக்கவாத்தியக் கலைஞர்களாக, நட்டுவாங்கம் நாட்டிய கலைமணி, பரதசூடாமணி,திருமதி.அமலா அன்ரனி சுரேஸ்குமார். பாடகர் சங்கக் கவி ரத்னா பவானி திரு.கிஷோர்குமார் சுப்பிரமணிய ஐயர். மிருதங்கம் லயசூடாமணி, லயபிரவாகம், கலாஜோதி திரு.பிரணவநாதன் பிரசாந்த். வயலின் வாழ்நாள் சாதனையாளன், இரட்டைவயலின் சாம்ரட் டாக்டர்.நெய்வேலி ராதாகிருஷ்ணன். நட்டுவாங்கம் உதவி நடன ஆசிரியரின் மாணவியும், மருமகளுமான திருமதி.யாதவி அன்ரனி சுரேஸ்குமார் ஆகியோர் பங்களித்தனர்.நிகழ்ச்சிப்படங்களை திரு.கோணேஸ் அவர்கள் அற்புதமாக எடுத்து உதவினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *