’அம்பிகையின் பரத நிருத்திய அரங்கப்பிரவேசம்யாழ்ப்பாண சமூகத்துக்கான பரிசு ’
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி
கொக்குவில் கலாபவனம் கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் அவர்களின் மாணவியும் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் – கலாநிதி கௌரி சண்முகலிங்கன் ஆகியோரின் தவப்புதல்வியுமான செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் பரத நிருத்திய அரங்கப்பிரவேசம் இம்மாதம் 5ம் திகதி மாலை ,யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம் பெற்ற வேளை ஆசியுரை வழங்கிய செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் ’தெய்வக்குழந்தை அம்பிகையின் ஆற்றல் வியப்பினைத்தருகின்றது. அவரின் குனித்தபுருவமும் ,கொவ்வைச்செவ்வாயின் குண்சிரிப்பும் தனித்துவமானவை என்றார்.மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தமது தலைமை உரையில் அம்பிகையின் கலைத்துறை ஈடுபாடினையும் நடனச்சிறப்பினையும் பாராட்டினார்.
முதன்மைவிருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி அவர்கள் ‘தமிழர் பண்பாட்டு இதயத்தின் மையத்தில் உள்ள கலைவடிவத்தினை நேர்மையுடன் பயின்று பக்குவமாய் அளிக்கை செய்த அம்பிகையின் இன்றைய நிகழ்ச்சி யாழ்பாண சமூகத்துக்கான பரிசு என்பேன் என்றார்.
.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்கள் தமதுரையில் ’சிறந்த கலைஞரான மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் – நல்லாசிரியை கலாநிதி கௌரி சண்முகலிங்கள் ஆகியோரின் செல்வக் குழந்தையான அம்பிகை கலைமகளின் குழந்தை என்பதனை உறுதிப்படுத்துவதாய் இந்த நிருத்திய அரங்கப்பிரவேசம் மன நிறைவினைத் தருகின்றது. இன்று எம் பல்கலைக்கழகதின் கலைப்பீட மாணவியாக இணைந்துள்ள அம்பிகை எதிர்காலத்தில் எமக்கு பல பெருமைகளை சேர்ப்பாள் ’ என்றார்
சிறப்பு விருந்தினர்களக்க கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணப்பல்கலைக் கழககலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்களும் தமிழ்நாடு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் ஒ.முத்தையா அவர்களும் அம்பிகையின் அபிநய சிறப்பினையும் பகுவமான பாவ வெளிப்பாடினையும் நயந்து வாழ்த்தினர். ’அம்பிகையின் ஆடல் அரங்கேற்றம் மிகமிக நேர்த்தியானது ; தத்துவபூர்வமான அவரின் பாவ வெளிப்பாட்டினை கண்கலங்கிட ஆசையாக ரசித்தேன் ; கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் அவர்களின் அரங்கேற்றங்களின் நிறைகுடமாக அம்பிகையின் அரங்கேற்றம் அமைந்தது என கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட ஈழத்து மூத்த பரதக்கலை ஆளுமையான கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரக்குமார் தமதுரையில் குறிப்பிட்டார்
குருவான கலாகீர்த்தி ஸ்ரீமதி சாந்தினி சிவநேசன் அவர்களுடன் அணிசெய் கலைஞர்களாக நட்டுவாங்கம் -நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முதுகலைமாணி ஸ்ரீமதி தேவந்தி திருநந்தன்,பாட்டு –இராம நாதன் ஆற்றுகை, கான்பிய கலைகள் பீடாதிபதி முதுகலைமாணி திரு தவ நாதன் றொபேட் ,மிருதங்கம் – நடனத்துறை விரிவுரை யாலர் முதுதத்துவமாணி திரு க. கஜன் ,வயலின் , வாத்தியத் துறை விரிவுரயாளர் ன நுண்கலைமாணி திரு கே. வேலதீபன்.புல்லாங்குழல் – வாத்தியத்துறை விரிவுரையாளர் நுண்கலைமாணி திரு சி. யூட் ஆகியோருடன் ஒப்பனைக் கலைஞரான கிழக்குப்பல்கலைக்கழக நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு எஸ்.சோபிதன் ஆகியோர் இசைந்திருந்தனர்.
![]()
