கனடாவில் உடலுக்கும், உள்ளத்திற்கும்ஆரோக்கியம் தந்த நிகழ்ச்சி

0
vm334

மறந்துபோகுமா மண்ணின் வாசனை!

கடந்த புதன்கிழமை 08.10.2025 மாலை 5.00 மணிக்கு கனடா பொக்குறூஸ் முதியோர் நலன்புரிச் சங்கம் மார்க்கம் அமைப்பினர் நடத்திய ஆரோக்கியமான நிகழ்வு. முதல் நிகழ்வாக மூத்தகுழந்தைகளான 55 வயது முதல் 80 வயதானவர்களுக்கு யோகா அப்பியாசங்களை மாலினி பரராஜசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் சிறப்பாகச் செய்தனர்.

ஆலயங்களில் எங்கு தூண் இருக்கும் என்று தேடி அத்தூணைப்பிடித்து எழும்ப வசதியாக இடம்பார்த்து தூணடியில் இருப்பார்கள். (இருந்து எழும்பமுடியாதவர்கள்) சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பதற்கு இணங்க அவர்களது அப்பியாசங்கள் உடலாரோக்கியம் பேணும் வண்ணம் அமைந்திருந்தது.

தொடர்ந்து சிறப்பு அமர்வாக யேர்மனியில் இருந்து வருகை தந்த வெற்றிமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நிகழ்வுகள் தொடர்ந்தன. விழா அமைப்பின் தலைவி சுந்தரேஸ்வரி. யோகராஜா அவர்களும், காரியதரிசி நவநீதன் அவர்களும் வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் பற்றியும் அவர் கனடாவில் பெற்ற கௌரவ விருதுகள் பற்றியும் வியந்துபேசினர்.

வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் தனதுரையில், இங்கு முன்வரிசையில் இருப்பவர்கள் எவரும் முதியவர்களல்ல, முதிர்கனிகள். ஒவொருவரும் சிறந்த ஆளுமைகொண்டவர்கள். என் முன்னால் இருக்கும் திரு. ஆ. சிவநேயச்செல்வன் மகாஜனாக்கல்லூரி பழய மாணவர். அவரது கம்பீரமும், பின்னாளில் தினக்குரல் பத்திரிக்கை யின் ஆசிரியராக காட்டிய நேரத்தியும் என்மனதில் இளமையாகவே இருக்கின்றது.

உடல் வயதினை அடைந்தாலும் இவர் செய்த பணிகள் என்றும் எம்மவர் மத்தியில் இளமையாகவே இருக்கும். இளமை முதுமை எமது செயலைப்பொறுத்தது. இங்கே மாலினி பரராஜசிங்கம் அவர்களின் செயல் அவருக்கு மட்டுமல்ல அவரோடு பயணிக்கும் உங்களுக்கும் முதுமையைத் தராது என்பது என் கருத்து என்றார்.

கடந்த 06ம் திகதி ஆசிரியர் தினம் அதனையொட்டி இந்நிகழ்வில் ஆசிரியர்களாக சிறந்த சேவையை வழங்கிய சிலர் அங்கு கௌரவிக்கப்பட்டனர். வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன், அவர் துணைவி ஜெயபவானி சிவகுமாரன், இவர்களுடன் திரு நாகராஜா அவர்களும் இணைந்து சேவைச் சான்றிதழ்களை வழங்கினர்.

சான்றுகள் பெற்றவர்கள் விபரம்.
ஆறுமுகம். சிவநேசச்செல்வன் (முன்னாள் தினக்குரல் பிரதம ஆசிரியர்),லக்சுமி நடராஜா. வசந்தி. பாலஸ்காந்தன். நவநீதன். நவரட்ணம்., கன்னிகை அந்தோனிப்பிள்ளை, மாலினி. பரராஜசிங்கம், நமசிவாயம். கந்தையா, திருச்செல்வம். திருநாவுக்கரசு, சுந்தரலிங்கம். ராஜலிங்கம். பொக்குறூஸ் முதியோர் நலன்புரிச் சங்கம் மார்க்கம் சார்பாக நவநீதன் (காரியதரிசி) சுந்தரேஸ்வரி யோகராஜா (தலைவர்) ஜெயதேவி சிவபாதசுந்தரம் (தனாதிகாரி.) இவர்களுடன் யோகா ஆசிரியர், மாலினி பரராஜசிங்கம், நிர்வக உறுப்பினர்களும் இணைந்து ஒன்றுபட்டு நிகழ்வுகளை முன்னெடுத்தது நிகழ்சிக்கு மகுடம் சூட்டியது. மறந்துபோகுமோ மண்ணின் வாசனை(மாலினி) அலைபாயுதே கண்ணா (வசந்தி)திருவடி சரணம் என்ற பாடல் (அருள்) சிந்தனை செய்மனமே (பரமு)பல உறுப்பினர்கள் நினவில் நீங்காத பாடல்களை பாடி யாவரையும் இளமைக்காலத்தில் மிதக்கவைத்தனர்.நெகிழவைத்தனர். நிகழ்ச்சிக்கு வந்தபலரும் இளமைபெற்று திரும்பிய நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *