என் வீட்டுக் கண்ணாடிஎன் முகத்தைக் காட்டவில்லை.

0
vm300


— மாதவி யேர்மனி

அட, இந்த வயதிலும் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்!அதற்கு காரணம் நாம் வாழும் காலம் தான்.

அன்று எல்லாம், அறுபது வயதில் பலருக்கும் தலை முடி நரைத்து இருக்கும்; பலருக்கு முடியே இருக்காது.
முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருக்கும்.வாழ்க்கையின் சுமையைப் பொறுத்து முகத்தின் மலர்ச்சியும் இருக்கும்.
ஆனால் இன்று என்ன அழகு!ஆண்கள், பெண்கள் யார் இருந்தாலும், இந்த உலகத்துடன் ரினயவந செய்து கொண்டு, தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டு இருப்பார்கள்…. படு ஜாலிதான்.

இந்த ஜாலி சோலி இல்லாமல் நிலைக்கவேண்டுமா.

பெரும்பாலும் நேருக்கு நேராக சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். விழாக்கள் என்றால், அது இரவாக இருந்தால் நல்லது.

முடிந்தவரை எமது வாழ்வில் நண்பர்கள், உறவினர்கள்,சந்திப்பு, கொண்டாட்டங்கள், இவற்றை எல்லாம் படுத்தபடுக்கையில் இருந்து கொண்டு, “கடை, தெரு” என்று அலையாமல், அமசானில் ழசனநச பண்ணி எடுப்பது போல், கொண்டாட்டங்களையும் வீட்டிலிருந்து முடித்துவிடவேண்டும்.

முகத்திற்கும், பின்னணிக்கும் நல்ல வெளிச்சம் போட்டுக் கதைதத்தால் கதைக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை உங்கள் பார்வைக் கோணங்களை சரி பார்க்கவும். ஏல்யோருக்கும் எதோ ஒரு கோணம் அழகாக இருக்கும் அதனைக் கண்டுபிடித்தால் அவன்தான் பிரமன். புpன்பு என்ன எப்பவும் மார்க்கண்டேயனாக வாழலாம்.

குயஉநடிழழம இல் என் படங்களைப் பார்த்தவர்கள்:
“உங்களுக்கு என்ன உலகம் சுற்றுகிறீர்கள்! ஒரு இளைஞனின் தோற்றம்! நேற்றுத்துத்தான் சிட்னியில் நின்றீங்கள்; இப்ப இந்தோனேஷியா பாளியில் நிற்கிறீங்கள்! வெய்யிலுக்கு கூட கொஞ்சம் கூட கறுக்கலையே!” என்று சொல்வார்கள்.

என்னுடைய இளவயது படங்கள் இரண்டு மூன்று குயஉநடிழழம இல் போட்டுவிட்டேன்; லைக்குக்குப் பதிலாக காட் காட்டா வருகிறது. இப்போது இந்த அழகன் நேருக்கு நேர் சந்திப்பதை அஜித் குமார் போல் தவிர்த்தே வருகிறான்.

முகப்புத்தகத்தில் எனது இளமைக்கால படங்கள் எல்லாம் ஏற்றிவிடுகிறேன். எனக்குள்ளே ஒரு கர்வம்: “அட, நான் இத்தனை அழகாகவா இளமைக்காலத்தில் இருந்தேன்? அட, மிஸ் பண்ணிவிட்டேனே!”என்ற எண்ணத்துடன் இரவு படுத்து எழுந்து காலை முகம் கழுவப்போனேன். எதிரில் உள்ள கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை.

“அட, நான் இத்தனை கிழமா?”
நேற்று முழுக்க ஏ.ஐ மூலம் என் படங்களை இளமையாக்குவதில், கம்ப்யூட்டரில் இருந்து “நாரி” விட்டுப் போச்சு!
எனக்கே நான் பேரழகன் என்ற ஒரு இமேஜை, நான் புதுப்பித்த என் பழைய படங்களே தந்துவிட்டன.

நானும் அவளும் அந்த வெய்யிலுக்குள் சுருண்டு போய் கிடந்த படத்தைப் புதுப்பித்தேன். அது இப்போது:
“சுந்தரி நீயும்,
சுந்தரன் ஞானும்,
சேர்ந்திருந்தால் திருவோணம்…”
என்று பாடுகிறது.

குயஉநடிழழம முழுக்க என் இளமை தோற்றம் ஆட்சி புரிய, இனி என்னால் எப்படி தலைகாட்ட முடியும்?
அப்படி நான் வெளியே என் சமூகத்தின் முன் நின்றால், என்னைப் பார்க்கும் இந்த சமூகத்தின் முதல் கேள்வி :
“அட, நல்ல அழகா சிமாட்டாக இருந்தீங்க… திடீர்னு சரியா பழுதாகிட்டீங்கள்?”என்பதாகவே இருக்கும்.

நான் வெளியே வருவதாக இல்லை. என்னை இளமையாக்கி படம் காட்ட நிறைய வேலை கிடக்குது.
யாருக்காவது பிறந்தநாள், திருமணம், விழா என்றால் சொல்லுங்கோ,நான் கம்பீரமா, இளமை பொங்க ஒரு விடியோ அனுப்பி வைக்கிறேன்.மீண்டும் சொல்கிறேன்…
காலை முகம் கழுவும்போது என் முகத்தை காட்டிய அந்த கண்ணாடி நினைவு அடிக்கடி வருகிறது.முதல் அதற்கொரு வழி பார்க்க வேண்டும்…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *