யேர்மனியில் நம் அடையாளமாகவீற்றிருக்கும் வள்ளுவர்.
சிலை அமைத்து ஒரு ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது. (06.12.2025)
- மாதவி யேர்மனி
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”
திருவள்ளுவர் (திருக்குறள் 1)
ஒரு நகரத்தின் அடையாளங்கள், அதன் சிறப்பை உணர்ந்து கொண்டாடுபவர்களினால் நகரத்திற்கே உயர்ந்த அடையாளமாக மாறும்.
அன்று இலங்கையில், யாழ்ப்பாணத்தில், ஆஸ்பத்திரி வீதியில் ஒளவையார், மகாத்மா காந்தி, திருவள்ளுவர் என பல சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இன்றும் உள்ளன. ஆரம்பத்தில், ஒளவையார் சிலை “இன்ன கடைக்கு முன்பாக”, “இன்ன மரத்துக்கு பின்னால்”, “இன்ன சந்தை வாசலில்”, “யாழ் வைத்தியசாலையின் முதலாவது படலைக்கு எதிராக” என்று அவற்றின் இடத்தை மக்கள் குறிப்பிடுவார்கள்.
ஆனால் நாளடைவில், மக்கள் “ஒளவையார் சிலைக்குப் பக்கத்தில் எமது கடை”, “மகாத்மா காந்தி சிலை வாசலில் உள்ள வைத்தியசாலை படலைக்கு வாருங்கள்” என அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். சிலையை உருவாக்குவது சிற்பியாக இருந்தாலும், அதனை அடையாளப்படுத்துவது மக்கள்தான்.
டோட்மூண்ட் நகரில் திருவள்ளுவர் சிலை
யேர்மனியில் தமிழ்மக்கள் பெருமளவில் கூடும் நகரமாக இன்று டோட்மூண்ட் (னுழசவஅரனெ) நகரம் திகழ்கிறது. அந்த நகரில் தமிழர் அங்காடிகள் பல வரிசையாக உள்ளன (சுhநinளைஉhந ளுவச.). அங்கு திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. எதிர்வரும் 06.12.2025 அன்று, சிலை அமைத்து ஒரு ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது.
இந்த நேரத்தில், வள்ளுவரை எவ்வாறு கொண்டாடினோம், அடையாளப்படுத்தினோம், மேலும் அடையாளப்படுத்த இருக்கிறோம் என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும், “யேர்மனிக்கு வந்து, டோட்மூண்ட் நகரம் வந்துசேர்ந்தேன்” என்பதனை காட்ட, வள்ளுவருடன் எடுக்கும் ஒரு செல்ஃபி போதுமானதாக இருக்கும்.
ஒரு புதிய நண்பரைச் சந்தித்தால், அவர்களுக்கு வள்ளுவர் சிலையைக் காட்டி, “அதனை வடித்தவர் யார் தெரியுமா? அவர் ஒரு யேர்மனியர், அத்துடன் ஒரு பெண்!” என்று பெருமையுடன் சொல்லலாம். “யார், எங்கு, எப்போது?” என்ற கேள்விகளின் விடைகளின் அடிப்படையில்தான் ஒன்றின் சிறப்பை எடைபோட முடியும்.
ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை வெளியிடப்படும் போதும், அதன் சிறப்பு பிரதிகளை வள்ளுவர் மடியில் வைத்து எடுத்துக் கொள்வேன். இது எனக்கான ஒரு மனநிலை இதனை யாவரும் பின்பற்றவேண்டும் என்று சொல்லவில்லை யென்றாலும், உங்கள் உணர்வுகளின் அடிப்படையில் கொண்டாடுங்கள்.
ஒரு முறை, யேர்மனியின் டோட்மூண்ட் நகரில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பல வெளிநாட்டு மாணவர்களை, ஒரு உணவகத்தின் முன் கண்டேன்.
அவர்களில் தமிழ், கன்னடம், மலாய் போன்ற பல மொழி பேசும், பல நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்கினர்.
அவர்களுக்கு வெற்றிமணி பத்திரிகையை கொடுத்து அறிமுகப்படுத்தினேன். அவர்கள், “உங்களுடன் ஒரு படம் எடுக்கலாமே?” என்றனர். நான் சம்மதித்தேன். மறுகணம், அவர்கள் அனைவரும் “திருவள்ளுவர் சிலைக்கு முன்னால் நின்று எடுப்போமே!” என ஒரே குரலில் கேட்டனர்.
அந்த தருணத்தில், வள்ளுவர் நாடு, மொழி, இனம் கடந்து, தனியழகுடன் கம்பீரமாக இருந்தார்.அந்தக் கம்பீரம் உடலில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் எழவேண்டும்.
நாளை திருவள்ளுவர் சிலைக்கு எதிரில் ஒரு பெரிய ளரிநசஅயசமநவ வந்தாலும்,“வள்ளுவர் சிலைக்கு எதிரில் ஒரு ளரிநசஅயசமநவ இருக்கிறது” என்று நாம் சொல்வோமேயானால்,அதுவே எமக்கு பெருமை! அது நம்மொழிக்கும் நம் அடையாளத்திற்கும் கொடுக்கும் ஒரு கௌரவம் — ஏன், எம் கர்வம்கூட.
![]()
